கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? Jeffersonville, Indiana USA 63-1124M 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோ. வேயில். காலை வணக்கம், நண்பர்களே. (''காலை வணக்கம் சகோதரன் பிரன்ஹாம்'' என்று சபையார் கூறுகின்றனர் - ஆசி) நான் எப்பொழுதுமே தாமதமாய் வருபவன். பில்லி என்னிடம் கூறி கொண்டிருந்தான், இன்று காலை எனக்கு... தனிப்பட்டவர்களுடன் ஏறக்குறைய முப்பது பேட்டிகள் உள்ளதாக, அவைகளில் இரண்டை நான் முடித்து விட்டேன். எனவே, இரண்டு அல்லது மூன்று என்று நினைக்கிறேன். எனவே எல்லாரையும் என்னால் சந்திக்க இயலாது. உங்களுக்கு தெரியும், ஜனங்கள் பட்டியலில் இடம் பெற்று, மாதங்கள் மாதங்களாகக் காத்திருக்கின்றனர். கர்த்தர் இங்கு சில பெரிய காரியங்களை செய்து வருகிறார். ஓ, அவர் - அவர் நம்முடைய தேவன். இல்லையா? 2நமது நாட்டுக்கு நேரிட்டுள்ள பெரிய துயரத்தை நாம் அனைவரும் இன்று காலை அறிந்திருக்கிறோம் என்று நான் உறுதியுள்ளவனாயிருக்கிறேன். அதாவது, நமது ஜனாதிபதியாகிய திரு. கென்னடியின் இழப்பு. அவருடைய அரசியல் முறைகளிலும், அவருடைய மார்க்கத்திலும் நான் அந்த மனிதனுடன் இணங்காமல் இருந்த போதிலும் அவர் இந்த விதமாக இறக்கத் தகுதியுள்ளவர் அல்ல. அல்ல! விடப்பட்ட அவருடைய பிள்ளைகளுக்கு தகப்பன் இருக்காது. அந்த தாய்... நான் திருமதி. கென்னடியுடனும் அவளுடைய வழிகளுடனும் இணங்காமலிருந்தாலும், ஒருக்கால் காரியங்கள்... ஆனால், அவள் ஒரு தாய் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அண்மையில் அவள் தன் குழந்தைகளை இழந்தாள், இப்பொழுது கணவனை இழந்துவிட்டாள். அவர் அவளுடைய மடியில் விழுந்தார். அவளுடைய சொந்த கணவனின் இரத்தம் அவளுடைய மடியில் பெருகி ஓடினது. அது பயங்கரமானது. நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா... அவள் நாட்டில் நாகரீகப் பாணியைத் தொடங்குகிறவள் என்று நாம் சில நேரங்களில் கருதியதுண்டு. அது உண்மையாயிருக்கக்கூடும்! ஆனால் அதைக் குறித்து நான் பிரசங்கித்த செய்திகளில் ஒன்றையாகிலும் திருமதி. கென்னடி கேட்டதில்லையென்று உங்களுக்கு தெரியுமா? ஒருக்கால் இச்செய்திகளில் ஒன்றை அவள் கேட்டிருக்க நேர்ந்தால், அவள் வித்தியாசமாய் இருந்திருக்கக்கூடும். அதைக் கேட்கும் நமது சகோதரிகளும் கூட சிலர், அதன்படி நடக்கிறதில்லை. பாருங்கள், பாருங்கள்? அவள் கத்தோலிக்க முறையில் வளர்க்கப்பட்டாள். அது மாத்திரமே அவளுக்குத் தெரியும். அதற்கு விரோதமாக நான் ஒன்றும் கூறவில்லை, பாருங்கள். அவள்... அது ஒரு முறைமை. ஜனங்களுக்கு விரோதமாக நான் ஒன்றும் கூறவில்லை, கத்தோலிக்க ஜனங்களுக்கு விரோதமாக. அது ஒரு முறைமை, கத்தோலிக்க முறைமை, பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, இன்னும் மற்றவை (பாருங்கள்?) அல்லது பெந்தெகொஸ்தே, எதுவானாலும். அந்த முறைமை தான், ஜனங்கள் அல்ல. ஜனாதிபதியாக திரு. கென்னடி நற்பணி ஆற்றினார் என்று எண்ணுகிறேன். என் இருதயம் அவருடைய மனைவிக்காக வேதனைப்படுகிறது. அதை குறித்து நான் மிகுந்த வருத்தமடைகிறேன். அதாவது நம்முடைய நாட்டிலும்கூட.... நம்முடைய நாட்டை சேர்ந்த அயோக்கியர் இப்படிப்பட்ட காரியத்தை செய்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது. 3ஒருவரின் கருத்துக்கு இணங்காமல், உங்கள் சொந்த நிலையில் உங்களால் நிற்க முடியாமல் போனால்... அதன் காரணமாக வேறொருவரைக் கொலை செய்ய வேண்டும் என்றல்ல. அந்த சிறு பிள்ளைகளுக்குத் தெரியும், அவர்கள் சொன்னார்களாம்... அந்த சிறுவன், “என்னுடன் விளையாடுவதற்கு இனிமேல் எனக்கு யாருமில்லை, அப்பா போய் விட்டார்கள்'' என்றானாம். பாருங்கள்? என்றாவது ஒரு நாள் என் கதியும் அப்படித்தான் இருக்கும் என்று நான் எப்பொழுதும் எண்ணினதுண்டு. அது அநேகமுறை ஏறக்குறைய அப்படி நடந்துள்ளதென்று உங்களுக்குத் தெரியும். நான் சுடப்பட்டிருக்கிறேன்... தூரத்திலிருந்து யாராகிலும் என்னைச் சுட்டுக் கொன்றுவிடாமல் பாதுகாக்க, வெளிநாடுகளில் அவர்கள் தங்கள் உடல்களை என் மேல் மறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு மனிதன் அந்த விதமாக இறக்கும் போது... அது செலுத்தப்பட்ட கிரயமாகிவிடுகிறது, அது வெவ்வேறு காரியங்களின் மகிமையுடன் இணைக்கப்படுகிறது. பாருங்கள்? சராசரி நமது நான்காம் ஜனாதிபதி (அதாவது நான்கு பேரில் ஒருவர்) சுட்டுக் கொல்லப்படுகின்றார் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அப்படிப்பட்ட இழிவான செயலைச் செய்யக் கூடியவன் அமெரிக்காவில் இருக்கிறான் என்பது நமக்கு அவமானம். இப்பொழுது, நான் கூறினது போன்று, அவருடைய அரசியலுடன் நான் இணங்கவில்லை. நான்.... அவர் செய்ய முனைந்த அவருடைய கருத்துக்களுடன் நான் இணங்கவில்லை. ஆனால் பாருங்கள், அவரும் ஒரு மனிதனே. அவருடைய மார்க்க முறைமைகளுடன் நான் ஒத்து போகவில்லை. நான் நிச்சயம் அதனுடன் ஒத்து போகவில்லை. இருப்பினும், அவர் அந்த விதமாக வளர்க்கப்பட்டவர். அதுதான் அது. நான் கூறினது போன்று, அவர் வித்தியாசமான ஒன்றை கேட்டிருக்க நேர்ந்தால், அவர் வித்தியாசமானவராக இருந்திருக்கக்கூடும். 4நம்மில் யாராவது ஒருவர் மரிக்க நேர்ந்தால், நாம் ஒரு காரியத்தை செய்வது வழக்கம்... அமெரிக்க சபை என்னும் முறையில், இது அமெரிக்கர்களை உறுப்பினராகக் கொண்டது என்னும் முறையில்... அமெரிக்கர்கள் தாம் திரு. கென்னடியை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அது... அதன் காரணமாகவே நாம் ஒரு ஜனநாயகமாக உள்ளோம். நான் திரு. கென்னடிக்கு ஓட்டு போடவில்லை. நான் திரு. நிக்ஸனுக்கு ஓட்டு போட்டேன். ஏனெனில் திரு. நிக்ஸனை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவரை, எனக்குப் பிடிக்கும் என்பதனால் அவருக்கு நான் ஓட்டுப் போட்டேன். ஆனால் இந்த நாட்டின் ஜனங்கள் (அமெரிக்கர்கள்), இந்நாட்டின் என் உடன் குடிமக்கள், திரு. கென்னடியை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அவர்கள் அதை செய்தவிதம், அது அவர்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள ஒன்று. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். 5இந்த தாயின் நிமித்தம் - ஒரு மனிதப் பிறவி, பிள்ளைகளின் தாய் என்னும் ரீதியில் - திருமதி கென்னடிக்காக நாம் எழுந்து நின்று சற்று நேரம் ஜெபிக்கலாமா? கர்த்தராகிய இயேசுவே, மானிடர் என்னும் முறையில், எங்களுக்கு ஒருவர் பால் ஒருவர் உணர்ச்சியுண்டு. கர்த்தாவே, எங்கள் ஜனாதிபதி இவ்வாறு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதை குறித்து நாங்கள் வருந்துகிறோம். எங்கள் நாடு இந்நிலையை அடைந்துள்ளதைக் குறித்து நாங்கள் வருந்துகிறோம். எங்கள் நாட்டில் இரக்கமற்ற கொலையைச் செய்ய கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கும் போது, சற்று முன்பு தான் அவர்கள் அந்த கறுப்பு நிறச் சகோதரனை, நிறவெறி காரணமாக இரக்கமின்றி சுட்டு கொன்றனர். கர்த்தாவே, அப்படிப்பட்டவர்கள் எங்கள் மத்தியில் உள்ளது எங்களுக்கு வருத்தமாயுள்ளது. எங்கள் பலவீனமே இது நடக்கக் காரணமாயிருந்தது. நாங்கள் ஜனாதிபதியின் மனைவி திருமதி. கென்னடிக்காக ஜெபிக்கிறோம். அந்த சிறு குழந்தைகள், சில நாட்களுக்கு முன்பு தங்களை விட்டுச் சென்ற தகப்பனுக்காக ஏங்கித் தவிப்பார்கள் என்று அறிந்திருக்கிறோம். அவர் எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கினவராய் பிள்ளைகளுடன் தரையில் விளையாடுவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ அவர்களுக்குத் தகப்பன் இல்லை. அந்த ஸ்திரீ - அவருடைய மனைவி; அவளுடைய கணவர் அவளுடைய மடியில் விழுந்து, அவருடைய இரத்தம் அவளுடைய உடையை நனைத்தது. அவள்வேறு கர்ப்பமுற்றிருக்கிறாள். 6கர்த்தாவே, அந்த ஸ்திரீ தவறாக நடந்து கொண்டு, அவள் உடுத்தும் விதத்தில் இந்த நாட்டில் நாகரீகப் பாணியை அமெரிக்க மக்களிடையே தொடங்கினவளாயிருந்த போதிலும், அவர்களுக்கு அதுதான் தேவைப்பட்டது. அவளுக்கு உதவி செய்யுமாறு இக்காலை வேளையில் ஜெபிக்கிறோம். அவளுடைய ஆழ்ந்த துயரத்தில், சத்தியம் என்னவென்று - இயேசு கிறிஸ்துவைக் குறித்து, அவள் கண்டு கொள்வாளாக. கர்த்தாவே, அதை அருளும். அவர் ஒருவர் மாத்திரமே துயருற்ற நேரத்தில் சமாதானத்தையும் ஆறுதலையும் அளிக்க வல்லவர். கர்த்தாவே, நாங்கள் முழு இருதயத்தோடும் பிரகாசிக்கிற ஒளியாக தொடர்ந்து இருக்க எங்களுக்குதவி செய்யும். எந்த நேரத்தில் நாங்கள் மற்றவர்கள் மேல் எங்கள் பாதிப்பை விளைவிப்போம் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் வருமளவும் கிறிஸ்துவின் ஒளியை நாங்கள் பிரகாசிக்கச் செய்வோமாக. அதன் பிறகு மந்தையின் மகத்தான மேய்ப்பன், நீதியைக் குறித்து அறிந்தவர், பாவம் அனைத்தையும் நியாயத்துக்கு கொண்டு வருவார். அதை எப்படி செய்வதென்று அவர் அறிந்திருக்கிறார். அதுவரைக்கும், உமது அன்பும், இரக்கமும் எங்கள் மேல் தங்குவதற்காக எங்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். 7ஆம், யாருமே அப்படி சாகத் தகுதியுள்ளவர்களல்ல என்று எண்ணுகிறேன். திரு. லிங்கன் அவ்வாறு சாகத் தகுதி பெற்றிருக்கவில்லை; திரு. மக்கன்லி அவ்வாறு சாகத் தகுதி பெற்றிருக்கவில்லை; ஹ்யூலாங் அவ்வாறு சாகத் தகுதி பெற்றிருக்கவில்லை- அவர்கள் யாருமே. எனக்கு அதில் நம்பிக்கையில்லை - கொலையில். அது மோசமானது. அப்படிப்பட்ட ஒன்றுக்காக நமது இராணுவத்தினர் வெளிநாடுகளில் போர் செய்யவில்லை; அப்படிப்பட்ட ஒன்றுக்காக நம்முடைய தேசியக் கொடி உயர்த்தப்பட்டிருக்கவில்லை; அப்படிப்பட்ட ஒன்றுக்காக நாம் அமெரிக்க குடிமக்களாக இருக்கவில்லை. இல்லை! நம்முடைய தேசம் பாவத்துடன் கயிறு போல் முறுக்கப்பட்டு அதனுடன் நெசவு நூல் போல் இணைந்துள்ள காரணத்தால், இவை சம்பவிக்கின்றன. அது பாவம். 8இன்று நமக்கு... நான் ஞாயிறு பள்ளி பாடம் ஒன்றைப் போதித்து, சபைக்கு ஓரிரு காரியங்களை உரைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இச்செய்திகளை பிரசங்கிக்கும் போது, ஞாயிறு காலையில் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்திருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதன் பிறகு நான், கர்த்தருக்கு சித்த... இவ்வாறு நான் செய்ய காரணம், என் ஜனங்களிடையே நான் இருக்கிறேன், அவர்களுக்கு எனக்குத் தெரிந்தவரைக்கும் உபதேசங்களை ஆழமாக போதிக்க வேண்டும். இந்த உபதேசங்களை நான் வேறு இடங்களில் பிரசங்கிப்பதில்லை. அங்கு சுவிசேஷத்தின் முக்கிய அடிப்படைகளை மாத்திரமே போதிக்கிறேன். இந்த ஆழமான உபதேசங்களை வேறு இடங்களில் பிரசங்கிப்பதில்லை. சில சமயங்களில் இங்கு என் பிரசங்கத்தை முடிக்க மணிக்கணக்காக, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகிவிடுகின்றது. உங்களை நான் சில சமயங்களில், 12.30 அல்லது 1.00 மணிவரைக்கும் பிடித்து வைத்துவிடுகிறேன். நான் முன்பு செய்தவைகளுக்கு, இது சிறிய காரியமே. சில சமயங்களில் நான் ஏறக்குறைய இரவு முழுவதும் முன்பு பிரசங்கித்ததுண்டு. நல்லது, நான்... நாங்கள் அநேக முறை காலை 8.00 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 2.00 அல்லது 3.00 மணிக்கு வீடு திரும்பியதுண்டு. அது உண்மை, கூட்டங்களிலிருந்து. 9நான் முயற்சி செய்யப்போகிறேன், அதாவது நான் மறுபடியும் உங்களிடம் வரும் போது.... இவ்வளவு போதனைக்கு (teaching) பதிலாக ஒரு பிரசங்கத்தை பிரசங்கிக்க. போதிக்க என்னிடம் ஏதாவது இருக்கும் பட்சத்தில், அதை உங்களுக்கு முன் கூட்டியே அறிவித்து விடுவேன். ஏனெனில் எனக்கு இப்பொழுது ஏழு எக்காளங்கள் செய்தி வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அது ஆறாம் முத்திரையில் இணைகிறது. ஆறாம் முத்திரை திறக்கப்பட்ட போது, ஏழு எக்காளங்களும் ஒரேயடியாக முழங்கின. பாருங்கள்? எனவே அவர் வருகைக்கு முன்பு... அல்லது நான் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, எதுவானாலும், என்னால் முடிந்தால், அதை சபைக்கு போதிக்க விரும்புகிறேன். நாங்கள் அதை செய்யும் பட்சத்தில், உங்களுக்கு முன்னதாகவே அறிவித்து விடுவோம். அப்பொழுது ஒருக்கால், இன்று காலை அறைகள் ஜன நெருக்கமாயுள்ளன, சுவர்களை சுற்றிலும் நாம் முயற்சி செய்வோம், இப்பொழுது நமக்கு ஒரு இடமுண்டு, அங்கு நாம் செல்லலாம். அங்கு மூவாயிரம்பேர் உட்காரலாம். அது இங்குள்ள பள்ளியின் அழகான அரங்கம். ஏழு எக்காளங்களை நாம் அந்த பள்ளி அரங்கத்தில் போதிக்க முயற்சி செய்வோம். அங்கு உட்கார நிறைய இடவசதியுண்டு, பாருங்கள், எனவே நாம் ஜனங்களுக்கு இடவசதியளிக்கலாம். 10நியூயார்க் கூட்டங்களில் நடந்ததைக் குறித்து அறிவிக்க விரும்புகிறோம். அங்கு எங்களுக்கு மாரிஸ் அரங்கத்தில் அருமையான தருணம் உண்டாயிருந்தது. ஒவ்வொரு இரவும் நாங்கள் ஜனங்களை வெளியே அனுப்பிவிட வேண்டியதாயிருந்தது. ஜன நெருக்கடி மிகவும் அதிகமாயிருந்தது. தீ... அந்த இடத்துக்கு சொந்தமானவர். ஜனங்களை நாங்கள் நெருக்கமாக நிற்க வைத்திருந்தால், தீயணைக்கும் அதிகாரி அந்த இடத்தை மூடி விட்டிருப்பார். எனவே அவர்களை நாங்கள் அனுப்பிவிட வேண்டியதாயிற்று. ஜனங்கள் தெருவில் இங்கும் அங்குமாக நடந்து, உள்ளே உள்ள யாராகிலும் களைப்படைந்து எழுந்து வெளியே வந்து, அவர்களுக்கு அந்த இடம் கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? ஒருவர், அந்த ஒருவர் வெளியே சென்று, அவர்கள் உள்ளே நுழைய காத்து கொண்டிருந்தனர். ஒருவர் வெளியே சென்றால், ஒருவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். நேரத்தோடு வீடு செல்ல வேண்டியயாராகிலும் ஒருவர் எழுந்து வெளியே செல்லும் போது, அவர்கள் உள்ளே வந்து அந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர். பாருங்கள், அவர்கள் இப்படியாக உள்ளே வந்தனர். அவர்கள் மிகவும் அருமையான - அருமையான ஜனங்கள். உலகமானது (கிறிஸ்தவ சபை) தேவனுக்காக பசியுற்றுள்ளது என்று எண்ணுகிறேன். 11இப்பொழுது, நான் - நான் -நான் நம்புகிறேன்... (நன்றி, சகோதரனே), நாம் ஒன்று கூடி அந்த கடைசி ஏழு எக்காளங்களை பெற தேவன் நமக்கு ஒரு தருணத்தை அளிப்பாரென நம்புகிறேன். அவைகளை செய்ய நான் நடத்தப்பட விரும்புகிறேன், அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பிறகு வர்த்தகரின் காலை உணவின் போது... வழக்கமாக, அவர்களுடைய குழுவில், காலை உணவுக்கு ஐம்பது முதல் நூறு பேர் இருப்பார்களென்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அன்று காலை அவர்கள் 170 டிக்கெட்டுகள் விற்று, மற்றவர்கள் நிற்கும் படி செய்தனர். அந்த இடம் ஜனங்களால் நிரம்பி வழிந்தது. தாழ்வாரத்திலும், சுவர்களைச் சுற்றிலும், படிக்கட்டுகளிலும் ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர். உயர் பதவியிலுள்ள சில போதகர்கள், ஓரிரு குருவானவர்கள் செய்தியை கேட்க அங்கு வந்திருந்தனர். எனவே நான் கேள்விப்படுகிறேன்... அது சிறிது உதவி செய்ததென நினைக்கிறேன். அது கூடுதலாக உதவி செய்திருக்க வகையுண்டு, நாம் நினைப்பதைக் காட்டிலும் சிறிது அதிகமாக, கூடுதலாக. 12இப்பொழுது, இன்றிரவு... கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு, கிறிஸ்துவுடன் நமது நிலையென்ன என்னும் பொருளின் பேரில் ஒரு செய்தியைக் கேட்க போகிறோம். அது சிறிய செய்தி யாயிருக்கும். நாங்கள் தொடங்க விரும்புகிறோம்.... நான், 7.30 மணிக்கு மேடையின் மேல் இருக்க விரும்புகிறேன். நீங்கள் வழக்கமாக எத்தனை மணிக்குத் தொடங்குகிறீர்கள், 7.30 மணிக்கா? (சகோ. பிரன்ஹாம் ஆராதனை நேரத்தைக் கேட்கிறார் - ஆசி) 7.00, (ஒரு சகோதரன், “நாங்கள் 7.30 மணிக்கு ஆரம்பிப்போம், ஆனால், ஏழு மணிக்கு துவக்கலாம்'' என்கிறார் - ஆசி) நான் 7.30 மணிக்கு மேடையின் மேல் இருப்பேன், அப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், 8.30 மணிக்கு இறங்கி விடலாம். நான் கூடுமானவரை விரைவாக முடிக்க போகிறேன். அதை செயல்படுத்த தொடங்கப் போகிறேன். 13மற்றுமொரு காரியம் என்னவெனில், ஜனங்கள் சிரிப்பதை காணும் சில அந்நியர்கள் இருக்கக்கூடும்... நான் வேகமாக இங்கிருந்து இறங்கிவிட வேண்டுமென்று தான் எண்ணுகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. அது ஒரு விதமான... நான் கூறுவது அவபக்தியாக ஒலிக்காதென்று எண்ணுகிறேன். ஜனங்கள் இவ்வாறு ஒன்று கூடும் போது, என் தாயார் கூறுவது போல், அது குளிர்ந்த காலையில் உள்ள சர்க்கரை குழம்பு (molasses) போன்றது. அப்பொழுது அது கெட்டியாகி, மெள்ள ஒழுகும் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அப்படித்தான் அது உள்ளது. இச்செய்திகளை நான் மெள்ளக் கூறுகிறேன். ஏனெனில் தேவனுடைய கரும்பின் இனிமை, நம்மை ஒருவிதம் ஒன்றாக கெட்டியாக்கி விடுகிறது. நான் - நான் - நான் அதை வேறெந்த விதத்திலும் விரும்புவதில்லை. அந்த விதமாகத்தான் எனக்கு அது வேண்டும். அங்கு நாம் நின்று கொண்டு இந்த பாடலைப் பாடுவது என் ஞாபகத்துக்கு வருகிறது. நமது இருதயங்களை, கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் கட்டு; ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின், ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும், (பாருங்கள்?) நாம் பிரிந்து செல்லும் போது, அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது; ஆயினும் நாம் இருதயத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டு, மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். அதுவே எப்பொழுதும் நமது குறிக்கோளாயிருக்கும் என்று நம்புகிறேன். அன்று முதல் பழைய பரிசுத்தவான்கள் அநேகர் நித்திரையடைந்து விட்டனர். இருப்பினும் நாம் இருதயத்தில் இணைக்கப் பட்டிருக்கிறோம். நான் நினைக்கிறேன், அன்று காலை கிடைக்கப்பெற்ற தரிசனம் - அவர்களை அங்கு ஆசீர்வதிக்கப்பட்ட மகிமையில் இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும், இவ்வுலகில் அவர்கள் இருந்தது போன்று சரீரப்பிரகாரமாக இருக்கக் கண்டது. நமது வருகைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். தேவனுக்கு சித்தமானால், என்றாவது ஒரு நாள் அவர்களோடு நாம் சேர்ந்து கொள்வோம். இப்பொழுது, நான்... 14ஆராதனைகள் ஞாபகமிருக்கட்டும், பாடல் ஆராதனை இன்றிரவு 7.30 மணிக்கு அல்ல, 7.00 மணிக்கு தொடங்கும். அதன் பிறகு அடுத்த வாரம் நான் லூயி சியானாவிலுள்ள, ஷ்ரவ்போர்ட்டில் லைஃப் கூடாரத்தில் இருப்பேன். அவர்கள் தெருவின் மறுபக்கத்திலுள்ள அரங்கத்தை வாடகைக்கு எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நேற்றிரவு சகோ. மூர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அது அவர்களுடைய வருடாந்தர கன்வென்ஷன் என்றும், அவர்கள் திரளான மக்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 15வேதத்தை வாசிப்பதற்கு முன்பு, ஒரு சிறு சாட்சியை கூற விரும்புகிறேன். அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள்.... ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பதனால் உண்டாகும் விளைவை குறித்து, உங்களுக்குக் கூறுகிறேன். நான் பார்க்க நேர்ந்தது, அப்பொழுது வேறொரு ஸ்திரீ... நான் சகோ. ராட்னி காக்ஸின் மனைவி மார்ஜி காக்ஸ் உட்கார்ந்திருக்க கண்டேன். போன வாரம் நாங்கள் இங்கிருந்த போது - பரிசுத்த ஆவியானவர் கட்டிடம் முழுவதிலும் சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறிக்கொண்டிருந்தார். ஜனங்கள் எப்படி பேசுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான்... அவள் உட்கார்ந்து.. அவள் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அன்று எங்கோ பின்னால் இருந்தாள். நான் பார்த்த போது, சர்க்கரை வியாதியுள்ள ஒருவள் அழைக்கப்பட்டாள். அது மார்ஜி. மார்ஜி அங்கு நின்று கொண்டிருந்தாள். ஆனால், நான் கீழே நோக்கி அவளைப் பார்த்த போது, அது... நான் நினைத்தேன். நான் பார்த்த போது அது வேறொரு ஸ்திரீ, ஆனால் மார்ஜி தரிசனத்தில் காணப்பட்டாள், ஆனால் ஒளி அந்த ஸ்திரீயின் மேல் இருந்தது. எனவே நான் - நான் கவனித்தேன். நான் நினைத்தேன், நான் மார்ஜியை கூப்பிட்டால், அவர்கள், ''நிச்சயமாக, அது...'' என்பார்கள். அவர்களை அறிந்த யாராகிலும் ஒருவர், ''நல்லது, அவளுடைய கணவர் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், ஒன்றாக உறங்குகிறார்கள், ஒன்றாக வேட்டையாடுகிறார்கள் - எல்லாமே. எனவே, அவருக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும்'' என்று கூறியிருப்பார். ஆனால் மார்ஜிக்கு அது தெரியாது. ஆனால், நான் மற்ற ஸ்திரீயை கூப்பிட்டேன். அவள் சிக்காகோவிலிருந்து வந்த ஒரு சகோதரி என்று பின்னர் கேள்விப்பட்டேன். 16என்ன நேர்ந்ததென்றால், அவளுடைய... அந்த தொழிற் சாலையில், அவர்கள் சர்க்கரை வியாதி உள்ளதா என்று கண்டுபிடிக்க பரிசோதனை நடத்தினர். அவளுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. நேற்று முந்தின நாள் அந்த பரிசோதனைக்காக அவள் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாள். அவள் இதைக் கூறினபோது, அவளுக்கு இதை ஞாபகப்படுத்தினேன். நான், ''சகோதரி மார்ஜி, இங்கு வா'' என்று அழைத்தேன். அவளுடைய கைகள் எப்படி மறுத்துப் போகின்றன, அவளுக்கு எப்படி அந்த மோசமான உணர்ச்சி உண்டாகின்றது என்று.... அந்த ஸ்திரீ ஏறக்குறைய இரவும் பகலும் உழைக்கிறாள்... அவர்கள் கட்ட முயற்சித்து வரும் வீட்டுக்கு பணம் செலுத்ததன் கணவருக்கு உதவி செய்ய எண்ணங்கொண்ட விசுவாசமுள்ள தாய். அவளுடைய இளைய சகோதரி நெல்லி, மற்றும் சார்லி (அது ராட்னியின் சகோதரன், அவருடைய மனைவி எல்லோருமே அந்த தொழிற்சாலையில் அவர்களால் இயன்றவரை கடினமாக உழைக்கின்றனர். அவர்கள் அங்கு நிந்தையைச் சகிக்கின்றனர். ஏனெனில் அந்த பெண்கள் தலைமயிரை வளரவிட்டு அழகு சாதனங்களை உபயோகிப்பதில்லை. நாம் கிறிஸ்தவர்களாகும் போது அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. எங்கு நன் மதிப்பு தரத்தகுதியுண்டோ அங்கு அதை தர வேண்டுமென்று நம்பிக்கை கொண்டவன் நான். இந்த இரண்டு பெண்களும் என் இருதயத்தில் ஒரு அன்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளனர். அதன் பிறகுஇ அவள் கையைப்பிடித்து அவளுக்காக ஜெபித்தேன். அவள் அங்கு சென்ற போது, அவர்கள் சிறிதளவு சர்க்கரை வியாதியையும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது போய்விட்டது, அவ்வளவுதான். இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருந்த ஸ்திரீ அழைக்கப்பட்டாள். அந்த சகோதரியின் பெயர் ப்ரூஸ். அவளை இன்று காலை இங்கு நான் காணவில்லை, ஆனால் அவள் எப்பொழுதும்... அவள் அதிகமாக ஜெபிக்கும் ஒரு ஸ்திரீ. நான் சென்றமுறை இங்கிருந்த போது அவள் வந்திருந்தாள். அப்பொழுது ஜெப அட்டைகள் ஒன்றும் கொடுக்கப்படவில்லை, எனவே யாருமே - ஜெப வரிசை ஒன்றும் அமைக்கப்படவில்லை. அவர்கள் வெறுமனே... பரிசுத்த ஆவியானவர் கூட்டத்திலுள்ளவர்களை அழைத்தார். 17இந்த திருமதி. ப்ரூஸே ஒருமுறை புற்று நோயிலிருந்து சுகமடைந்தாள். அவளுக்கு எப்பொழுதுமே யாருக்காகிலும் தன் இருதயத்தில் பாரம் இருந்து கொண்டிருந்தது. அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள். லூயிவில்லை சேர்ந்த ஒரு ஸ்திரீ புற்று நோயினால் - தொண்டை புற்று நோயினால் - மரித்து கொண்டிருந்தாள். இந்த ஸ்திரீ அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் நேரடியாக புற்றுநோய் கொண்ட அந்த ஸ்திரீயிடம் சென்று, அவளை அழைத்து, அவள் யாரென்றும் அவள் கோளாறு என்னவென்றும், அவளுக்கு புற்றுநோய் உள்ளதென்றும், அவள் சுகமாகிவிடுவாள் என்றும் உரைத்தார். அவள் வீட்டுக்கு சென்றாள். இரண்டு நாட்கள் கழித்து, அவள் தொண்டை அடைத்து, மரித்துவிடுவாள் போல் தோன்றினது. அவளுடைய தொண்டை பெரிதாக வீங்கினது. அவளுக்கு பெரிய இருமல் உண்டாகி, அந்த புற்று நோய் வெளியே வந்தது. அவள் பூரண குணமடைந்தாள். பாருங்கள்? 18என்ன நேர்ந்ததென்றால், பாருங்கள், அந்த கட்டி (lump) தீவிரமானது (malignant). அதற்கு ஜீவன் உண்டு. பாருங்கள்? புற்று நோய்... அது 'நண்டு' என்னும் சொல்லின் மருத்துவச் சொல்லாகும். அப்படியென்றால், அதற்கு கால்கள் உள்ளதென்று அர்த்தம். கடலில் உங்களுக்கு கிடைக்கும் நண்டைப் போல், அது உங்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது. அவளுடைய தொண்டையில் உண்டாயிருந்த தீவிர வளர்ச்சி... அதை தான். அது செய்து கொண்டிருந்தது. பாருங்கள், அந்த வளர்ச்சியுடன் நான் தொடர்பு கொள்வதில்லை, அந்த வளர்ச்சியிலுள்ள ஜீவனுடன் தான் நான் தொடர்பு கொள்கிறேன். பாருங்கள்? அந்த வளர்ச்சியிலுள்ள ஜீவனுடன் தான் நாம் தொடர்பு கொள்கிறோம். பாருங்கள்? “என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள். பிசாசு என்னும் சொல் ''வேதனை படுத்துபவன்'' (tormentor) என்னும் அர்த்தம் கொண்டது - உதாரணமாக, சரீரத்தை வேதனை படுத்துதல். அது ஒரு பிசாசு. அந்த வளர்ச்சியை விட்டு ஜீவன் செல்லும் போது, அந்த வளர்ச்சி பெரிதாகின்றது. 19தெருவில் அடிபட்டு செத்துப்போன ஒரு நாய்க்குட்டியை போல்.... அப்படி ஏதாவதொன்று. அது சில நாட்கள் சூரிய வெளிச்சத்தில் கிடக்கும் போது, இருமடங்கு உடல் வீங்கிப் போகின்றது. அது தான் அந்த ஸ்திரீ மோசமான நிலையை அடையும்படி செய்தது. அநேகமுறை அதை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். உங்கள் நிலை மோசமாகும் போது, அது தான் நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்பதன் அறிகுறி. பாருங்கள்? அது நாளடைவில் மோசமாகி, அது வீங்கினதால் அவள் தொண்டை அடைத்தது... ஆனால், அது அவிழ்ந்து வந்தது. ஏனெனில் ஜீவன் அதைவிட்டு போய்விட்டது. அவள் இப்படி இரும்பின போது, பாருங்கள்.... (சகோ. பிரன்ஹாம் இரும்புகிறார் - ஆசி) இப்படி இரும்பின போது, அது அவளுடைய மாம்சத்திலிருந்து அவிழ்ந்து வெளியே வந்தது. தேகத்தில் உயிரில்லாத அந்த பொருள் (உயிர் அதில் இல்லை புற்று நோய் போய்விட்டது) வெளியே குதித்து வந்து (பாருங்கள்) - வெளியே விழுந்தது. 20அதுதான். அப்பொழுது சரீரம் வெளியேறினது. வெளியேறினது பிசாசல்ல, அது அவன் வாசம் செய்த வீடு. அவன் வெளியேறின காரணம், அவளுக்குக் கூறப்பட்டதில் அந்த ஸ்திரீ கொண்டிருந்த விசுவாசம்... இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவள் அறிந்து கொண்டாள்; அதுதான் புற்றுநோயைக் கொன்றது, அந்த ஜீவனை எடுத்துப் போட்டது. அவள் மருத்துவரிடம் சென்றபோது, அவர் “மூடத்தனம். அது முன்பு போலவே இப்பொழுதும் இருக்கிறது'' என்றார். அது உண்மைதான். ஏனெனில் வளர்ச்சி அங்கிருந்தது, ஆனால் அதன் ஜீவன் அங்கில்லை. பாருங்கள்? 21அது வெளியே வர முடியாத ஒரு இடத்தில் இருந்திருந்தால், என்ன நடக்கிறது? (சகோ. நெவில், சகோ. பிரன்ஹாமுடன் பேசுகிறார் - ஆசி). இந்தியானாவிலுள்ள ஸ்பிரிங் வில்லில் வசிக்கும் திருமதி. பேக்கருக்கு ஜெபம் செய்த பிறகு அவளை விட்டு வெளியேறின வளர்ச்சியின் புகைப்படம் இதோ! இது அதன் புகைப்படம். பாருங்கள், அது தான் பிசாசு வாசம் செய்த சரீரம். நீங்கள் ஒரு சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல்... நீங்கள் வாழும் சரீரம் ஒருக்கால் சிறிது பெரிதாக, சிகப்பு தலையாகவோ, கறுப்பு தலையாகவோ, அப்படி ஏதாவதொன்றாக இருக்கும். பாருங்கள்? இந்த சரீரத்தில் பிசாசு வாசம் செய்கிறான், அல்லது கிறிஸ்து வாசம் செய்கிறார். அதிலிருந்து உயிர் பிரிந்து செல்லும் போது, உங்கள் சரீரம் இன்னும் பூமியில் உள்ளது. பாருங்கள்? ஆனால் உயிர் அதில் இல்லை. அவ்வாறே உயிர் வளர்ச்சியை விட்டு சென்ற போது, அந்த வளர்ச்சி என்னும் சரீரம் அங்கிருந்தது. அதன் பிறகு அது அவளுடைய சரீரத்தை விட்டு அவிழ்ந்து, வெளியே தள்ளப்பட்டது. வளர்ச்சி என்னும் சரீரம் வெளியே வந்தது. ஆனால், அது வெளியே வர முடியாத ஒரு இடத்தில் இருந்திருந்தால், உங்கள் இருதயம் அந்த செத்த பொருளையும் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு முறையும் இருதயத் துடிப்பு உண்டாகும் போதும், அது இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அதன் விளைவாக ஜூரம் உண்டாகின்றது. ஏனெனில் கிருமிகள் பரவுகின்றன. பாருங்கள்? உங்கள் இருதயம்.... இரத்தம் இருதயத்தின் வழியாக செல்லும் போது, இருதயம் அதை சுத்திகரிக்கிறது என்று நினைக்கிறேன். சகோதரி. டெள், அது சரியா? அது சரியென்று நினைக்கிறேன். இருதயத்துடிப்பு ஏற்படும் போது, அது சுத்திகரிக்கிறது (உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரு நர்ஸ். அவர்களுக்கு முன்னால் மற்றுமொரு நர்ஸ் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது எடுத்துக் கொள்கிறது. கிருமிகள் பரவுவதனால் வியாதி உண்டாகின்றது. அது கிருமிகளை எடுத்துக் கொண்டு, வியாதியை உண்டாக்குகிறது. 22இப்பொழுது, ஜனங்கள்... பாருங்கள், அது உங்கள் விசுவாசம், அது உங்கள் உணர்ச்சிகள் அல்ல. அது அப்படியா, என்பதல்ல. என் கை நேராக இல்லாமல் இருந்தால்... அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என் விசுவாசம் தான் அது நடக்கக் காரணமாயுள்ளது. பாருங்கள்? நமக்கு முன்னால், விசுவாசத்தினால் பூரணமாக குணமாக்கப்பட்ட ஒரு நபரின் சாயலை காண்கிறோம். அதன் பிறகு நாம் படிப்படியாக நடந்து அந்த நபருக்குள் பிரவேசித்து, அதனுடன் நடந்து சென்று விடுகிறோம். பாருங்கள்? அதுதான். அதுதான் அதை செய்கிறது - உங்கள் விசுவாசம், உங்கள் உணர்ச்சிகள் அல்ல; உங்கள் விசுவாசமே அதை செய்கிறது. தேவனுக்கே நன்றியும் துதியும் உரித்தாகுக! 23இப்பொழுது, சிறிது நேரம் ஜெபம்... நாம் சிறிது நேரம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொருள் இங்கு நமக்குண்டு. இதன்படி தேவன் நம்முடன் ஈடுபடுவாராக. இப்பொழுது... மாலை ஆராதனைக்கு இருக்க முடியாமல், உங்களில் சிலர் காலையில் சென்றுவிட வேண்டுமென்றால்; கர்த்தருக்கு சித்தமானால், நான் மறுபடியும் இங்கு... கிறிஸ்துமஸ் வாரத்தின் போது குடும்பமாக இங்கு திரும்ப வருவோம். கிறிஸ்துமஸ்க்கு பிறகு வரும் ஞாயிறன்று, கர்த்தருக்கு சித்தமானால் இந்த கூடாரத்தில் என் கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்க விரும்புகிறேன். கிறிஸ்துமஸக்கு அடுத்த ஞாயிறு. கர்த்தருக்கு சித்தமானால், அன்று பேச விருக்கும் செய்தியின் தலைப்பு தெருவிலுள்ள நாடோடி என்பதாம். இப்பொழுது நான் வேதாகமத்தை படிப்பதற்கு முன்பு, தலை வணங்கி ஜெபத்தை ஏறெடுப்போம். 24கர்த்தராகிய இயேசுவே, இந்நேரத்தில் எங்கள் அருகில் இரும். இந்த சிறு சபை கட்டிடத்தில் அநேகர் நின்று கொண்டிருக்கின்றனர், அது கடினமாயுள்ளது. எங்களுக்கு சரீர செளகரியத்தை அளிக்கும் இடத்தின் சௌகரியத்தைக் கருதி இங்கு நாங்கள் வரவில்லை. ஏனெனில், இங்கு சௌகரியம் இல்லை. நாங்கள் காணப்படுவதற்காக இங்கு வரவில்லை. உமது பிரசன்னத்தை இந்த இடத்தில் உணருகிறோம் என்பதற்காகவே இங்கு நாங்கள் வந்திருக்கிறோம். நீர் இங்கிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். நாங்கள் திருத்தப்படுவதற்காக இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தேவனுடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாய் இங்கிருக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு செளகரியக் குறைவு இருந்த போதிலும், இங்கிருப்பதில் எங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. நாங்கள் நின்று கொண்டும், நெருக்கிக் கொண்டும் உட்கார்ந்திருக்கிறோம். ஆயினும், தேவன் இங்கிருக்கிறார் என்னும் உணர்வு எங்களுக்குள்ளதால், இங்கு நாங்கள் வந்திருக்கிறோம். பவுல், இரவு முழுவதும் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அதே உணர்வு தான் அந்த வாலிபனுக்கு அன்றிரவு ஏற்பட்டடிருக்கும்.... எவ்வளவு நீண்ட செய்தி! ஒருக்கால் சூரிய அஸ்தமனம் தொடங்கி, அடுத்த நாள் சூரிய உதயம் வரைக்கும். ஒரு வாலிபன் உயரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்தான். அவன் இறந்து விட்டான் என்று எண்ணினர். பவுல் அவன் மேல் தன் சரீரத்தைக் கிடத்தினான். செய்தியாளனுக்குள் இருந்த தேவனுடைய ஆவி அந்த வாலிபனின் சரீரத்தில் உயிர் திரும்ப வரும்படி செய்தது. அவன், அவன் சரியாகி விடுவான்“ என்றான். அந்த வாலிபன் உயிர் பெற்றான். பவுல் பேசினதில் அவன் சிரத்தை கொண்டான். தேவனே, பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருதயத்தில் இன்று காலை என்ன கூறப்போகிறார் என்பதைக் குறித்து நாங்களும் சிரத்தை கொண்டுள்ளோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவ அப்பத்தைப் பிட்டு தருமாறு ஜெபிக்கிறோம். நாங்கள் இவ்விடம் விட்டுச் செலும் போது, நாங்கள் இக்கட்டிடத்துக்குள் நுழைந்த போது இருந்த அதே நிலையில் செல்லாதிருப்போமாக. கிறிஸ்தவர்கள் உம்மிடம் இன்னும் சிறிது அதிகம் நெருங்கி வருவார்களாக; பாவிகள் இன்று மனந்திரும்புவார்களாக; வியாதியஸ்தர் சொஸ்தமடைவார்களாக. தேவனுடைய ராஜ்யம் எங்கள் அருகில் மாத்திரமல்ல, எங்களுக்குள் வருவதாக. அவருடைய ஆவியானவர் வார்த்தைகளை எங்களுக்கு அருளுவதற்காக நாங்கள் காத்திருக்கும் இவ்வேளையில், இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 25இப்பொழுது, நாம் சில வேதவாக்கியங்களை வாசிப்போம்.... தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே உண்மையானது. இப்பொழுது.... நீங்கள் ஒவ்வொருவரும் நின்று கொண்டிருப்பவர்களின் மேல் தயை பாராட்டுவதைக் காண்கிறேன். யாராகிலும் ஒருவர் எழுந்திருந்து, மற்றவருக்கு உட்கார இடமளிப்பதைக் காண்கிறேன். அது மிகவும் அருமையான செயல். நமக்கு அதிக இடமிருந்தால் நலமாயிருக்கும், ஆனால் நமக்கு இந்த சமயத்தில்... இடமில்லை. இப்பொழுது, மத்தேயு; 27ம் அதிகாரத்துக்குத் திருப்பி, 11ம் வசனத்திலிருந்து நாம் படிப்போம். அதன் பிறகு பொருளின் மேல் பேசுவோம். இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ் சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி!இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளை கேட்கவில்லையா என்றான். அவரோ, ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டு கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. அப்பொழுது, காவல் பண்ணப்பட்வர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். அவன், நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். பரபாசை விட்டுவிடக் கேட்டு கொள்ளவும், இயேசுவை கொலை செய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டான்... (அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்... அதற்கு அவர்கள்; பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அவனை சிலுவையில் அறைய வேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்; இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். மத்.27:11-26. 26என்ன ஒரு வருத்தமான காட்சி. இதிலிருந்து நான் அழைக்க விரும்பும் பொருள்; நீங்கள் அந்த விதமாக அதை எழுதி கொள்ளவோ அல்லது அழைக்கவோ விரும்பினால்; ஒருக்கால் இதன் ஒலிநாடா, ''கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்னும் தலைப்பு பெறுதல் நலம். அதை தலைப்பாக தெரிந்து கொண்ட பிறகு, நான் உபயோகிக்க விரும்பும் பொருள்; ''உங்கள் கைகளில் இயேசு இருந்தால்.'' உங்கள் கைகளில் இயேசு இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 27நமது காட்சி இன்று காலை நியாயம் விசாரிக்கும் மண்டபத்தில் தொடங்குகிறது. அங்கு தேசாதிபதியாகிய பிலாத்து நியாயம் விசாரிக்கும் பாகத்தை ஏற்பதற்கென காட்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறான். விடியற்காலத்தில், காலை வெளிச்சம் உண்டாவதற்கு முன்பே, அவன் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு, இந்த மனிதனின் வழக்கை விசாரிப்பதற்கென அழைக்கப்பட்டான். அது நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டிய நேரம். அதற்கு பாத்திரமாக அவர் எதையும் செய்ததாக அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். அது அவ்வாறு நடந்தாக வேண்டிய ஒரு மணி நேரமாயிருந்தது. அவ்வாறு நடைபெற ஒரு காரணமில்லாமல், ஒன்றுமே நடப்பதில்லை. ஒன்று நடக்கிறதென்றால், அதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். ஏனெனில், அது மானிடர்களுக்குள் இருக்கும் ஆவியினால் தூண்டப்படுகிறது. அதற்கு ஒரு நோக்கமும் ஒரு குறிக்கோளும் உண்டு. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இவ்வுலகில் வாழ்ந்த மிகப்பெரிய மனிதனுக்கு இது நேரிட வேண்டிய காரணம்.... இது இவ்வாறு நடந்த காரணம் என்ன வெனில், அது நடக்க வேண்டிய நேரமாக இருந்தது. அதுவே, பாருங்கள்? அது அப்படித்தான் நடக்க வேண்டும். அதிலிருந்து தப்பிக்க வழியேயில்லை - அது நடக்க வேண்டிய அந்த நேரம் அதுவே. இயேசு, அவர் எப்படி வருவார் என்று தேவனுடைய வார்த்தை முன்னுரைத்ததோ, அதேவிதமாக வந்தார். அவர் என்ன செய்வாரென்று வார்த்தை கூறினதோ, அதை அப்படியே செய்தார். அது உரைத்ததன்படியே அவர் வாழ்க்கை வாழ்ந்தார். தேவன் அந்த காலத்து வித்தை வெளிப்படுத்தினார் அல்லது அறியப்பண்ணினார். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், தேவன்... 28வேதாகமம் ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிவடைகின்றது. இந்த பாடத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அதாவது... பாருங்கள், ஒவ்வொரு சந்ததியிலும் ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்கும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது - ஒவ்வொரு சந்ததியின் போதும். தானியேல் கண்ட... நெபுகாத்நேச்சாரின் சொப்பனத்துக்கு அவன் அர்த்தம் உரைத்தது போல. எப்படி புறஜாதி ராஜ்யங்கள் எழும்பி, அவை வீழ்ச்சியடைந்து மறைந்து போகும் என்று. அந்த ஜாதிகள் ஒவ்வொன்றும், அந்த தேசங்களும்... உலகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தின அந்த புறஜாதி வல்லமைகள் ஒவ்வொன்றுக்கும் அந்த தரிசனம் உரைத்தபடியே நிறைவேறின. 29நேபுகாத்நேச்சார் (பொன் தலை) எடுக்கப்பட்ட பிறகு, மேதிய - பெர்சியர்கள் தோன்றினர். அவர்களுடைய சுபாவம் அந்த சொரூபத்தின் உலோகத்தின் தன்மையை போன்று, தீர்க்கதரிசி கூறின விதமாக அப்படியே அமைந்திருந்தது. பொன் தலையாகிய நேபுகாத்நேச்சார், எல்லா ராஜ்யங்களைக் காட்டிலும் மிகப்பெரிதும் முதலாவதுமான ராஜ்யம். அதன் பிறகு வெள்ளியாகிய மேதிய - பெர்சிய ராஜ்யம். அப்படியே கீழே இறங்கி வரும் போது, வெண்கலத் தொடை , ஒவ்வொரு உலோகமும் படிப்படியாக கடினமாகிக் கொண்டே வருகிறது. (பொன் மிகவும் மிருதுவானது), அது எல்லா உலோகங்களிலும் மிகக் கடினமான இரும்பில் முடிவடைகிறது. இந்த ராஜ்யங்கள் ஒவ்வொன்றும் அவை என்ன செய்யுமென்று தீர்க்கதரிசி உரைத்திருந்தானோ, அதே விதமான சுபாவத்தை பெற்றிருந்தன. அவர் என்ன செய்தார்? ராஜ்யங்கள் கவனிப்பதற்கென அவர் ஒரு விதையை விதைத்தார். எனவே, ஒவ்வொரு முறையும் அந்த ராஜ்யம் தோன்றின போது, வார்த்தை உரைத்ததன்படியே அது செய்ய வேண்டியதாயிருந்தது. 30அதன்பிறகு மேசியா காட்சியில் வர வேண்டியதாயிருந்தது. கிறிஸ்து காட்சியில் வந்தபோது, அவர் என்ன செய்வாரென்று தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த தேவனுடைய வார்த்தையின் நிறை வேறுதலுக்கு அவர் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டியதாயிருந்தது. ''அவர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்'' என்று மோசே கூறினான். உங்களுக்கு - நமக்கு நேரமிருந்தால், நாம் அதை முன்பு நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்து, இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்த அந்த பயங்கரமான காலத்தில், எப்படி மோசே ஒரு வினோதமான, விசித்திரமானப் பிள்ளையாக பிறந்தான் என்றும், எப்படி அவன் வளர்க்கப்பட்டான் என்றும், எப்படி அவன் நாணலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டான் என்றும், எப்படி அவன் தலைவனாகி, மலைக்குச் சென்று, நியாயப்பிரமாணத்தை பெற்று திரும்ப வந்தான் என்றும் காண்பித்திருக்கலாம். அவன் தலைவனாக மாத்திரம் அல்ல, அவன் ஆசாரியனாகவும், ராஜாவாகவும், ஆளுகை செய்பவனாகவும் இருந்தான். இவையனைத்தும் கிறிஸ்துவுக்கு முற்றிலும் முன்னடையாளமாக இருந்தன. மோசே, ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்'' என்றான். பாருங்கள்? 31கிறிஸ்து பிறந்த போது, ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாயிருந்தனர். அவர் எப்படியிருந்தார்? அவர் விசித்திரமான பிள்ளையாக, வினோதமானவராகப் பிறந்தார். அவர் வளர்க்கப்பட்ட விதம்; அவர் மலையின் மேல் சென்று இறங்கி வந்து, ''களவு செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்றார். நியாயப்பிரமாணத்தை கொடுத்தவர் (பாருங்கள்?) மற்றும் ராஜா, ஆசாரியன், தீர்க்கதரிசி. மோசேயைப் போல அப்படியே. எனவே, இவையனைத்தும் நிறைவேற வேண்டியதாயிற்று. மேசியாவின் ஜீவன் பரிபூரணமாக உறுதிப்படுவதற்கு முன்பு அதுகிடந்திருந்த அந்த கால இடைவெளியில்... நான் சிறிது காலம் வரைக்கும் போதிக்கவிருக்கும் கடைசி நீண்ட பாகம், இதுவே. நீங்கள் இதை கூர்ந்து கவனிக்க விரும்புகிறேன். 32ஒரு குறிப்பிட்ட சந்ததிக்கு வார்த்தை உரைக்கப்பட்டிருந்தால், யாராகிலும் ஒருவர் காட்சியில் எழும்பி அந்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், அது தேவன் உரைத்த வார்த்தையாகும். அது உரைக்கப்பட்ட வார்த்தையின் உறுதிப்படுதல். இயேசு எல்லாவற்றிற்கும் தகுதியுள்ளவராக, வார்த்தையாக இருந்து, மேசியாவாக உறுதிப்படுத்தப்பட்டார். முற்றிலுமாக. கடைசி நாளுக்கென்றும் வேதாகமத்தில் வார்த்தைகள் உரைக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகள் உயிர்பெற வேண்டும். 33இங்கு நாம் என்ன காண்கிறோம் என்றால், நம்முடைய கர்த்தரின் நாட்களில், அவர் பிலாத்துவின் நியாயம் விசாரிக்கும் மண்டபத்துக்கு வருவதற்கு முன்பே, சபையானது அவரை நிராகரித்துவிட்டது. அவருடைய ஊழியத்தில் அவர் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கி அவர்களுக்கு வார்த்தையை குறித்த சத்தியத்தை கூறத் தொடங்கின அந்த நாள் முதற்கொண்டு, அவர்கள் அவரை புறக்கணித்தனர். அவர் மனிதனாயிருக்க, அவரால் எப்படி மனிதரின் இருதயங்களிலுள்ளவைகளை அறிந்து கொள்ள முடிந்தது என்று அவர்களுக்கு புரியவில்லை. வார்த்தையே தேவன் என்பதை அவர்கள் சிறிதேனும் அறிந்திருக்கவில்லை. ''வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது'' என்று வேதம் கூறுகிறது. அவர்கள் அவரை பொல்லாத ஆவி என்றழைத்தனர். அவர், ''அப்படி சொன்னதற்காக நான் உங்களை மன்னித்து விடுகிறேன். ஆனால் பரிசுத்த ஆவி வந்து இதே கிரியைகளைச் செய்யும் போது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் அது மன்னிக்கப்படாது“ என்றார். இந்த நாளில் நடக்க வேண்டுமென்று அவர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளவைகளை; ஏதாவதொன்று அதை உயிர்ப்பெற செய்ய வேண்டும். அது உயிர் பெற்று வரும் போது, ஜனங்கள் கொண்டுள்ள கருத்துக்கு அது மிகவும் வித்தியாசமானதாய் இருக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதை கண்டு கொள்வார்கள். ஏனெனில் அதைக் காண, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அது... வேறெந்த வழியும் இல்லை. 34இயேசு ''நீங்கள் என்னிடத்தில் வரமுடியாது. என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்; அவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' என்றார். பாருங்கள்? எனவே வேறு வழி எதுவும் இருக்கவில்லை. அவர், ''கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் இருக்கிறீர்கள். உங்களைக் குறித்து ஏசாயா நன்றாய் தீர்க்கதரிசனம் சொன்னான்'' என்றார். பாருங்கள்? ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அதை வளரச் செய்து, அதை வெளிப்படுத்தினது. இதை மறந்து போக வேண்டாம். (இங்குள்ளவர்களோ, அல்லது இந்த ஒலி நாடாவைக் கேட்பவரோ), தேவனுடைய வார்த்தை நிறைவேறி வெளிப்பட வேண்டும். அதை நடப்பிக்க தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். கிறிஸ்துவின் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் முன் குறிக்கப்பட்டது போல. அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள அந்த மனிதன் எழும்ப வேண்டும். அந்த வார்த்தை நிறைவேற வேண்டும். 35இயேசு அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாக இவ்வுலகில் வந்து, அவர் என்ன செய்வாரென்று தேவனுடைய வார்த்தை உரைத்திருந்ததோ, அதை அப்படியே செய்தார். இருப்பினும் யூதர்கள் வேறொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ராஜா இருப்புக் கோலைக் கையில் கொண்டவராய் வருவாரென்று (இனி வரப்போகும் காலத்தில்). ஆனால், இயேசுவோ ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றினார். அங்கு ஒருநாள் கப்பர்நகூமில் அவர் வேதாகமத்தை எடுத்து படித்தார். நீங்கள் கவனித்தீர்களா? அவர் வேதவாக்கியத்தின் ஒரு பாகத்தை மாத்திரம் படித்து புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, “இன்றைக்கு இது நிறைவேறிற்று'' என்றார். 36அவர் யூபிலி ஆண்டைப் பிரசங்கிக்கவிருந்த போது அவர் ஏன் அந்த வேதவாக்கியத்தின் மற்ற பாகத்தைப் படிக்கவில்லை? ஏனெனில் அது அவருடைய மற்ற வருகையுடன் சம்பந்தப்பட்டது. அவர்களுக்கு அது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது அவர் வரப்போகும் காலத்துக்குரியது. ஆனால், அவர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த காலம்.... ஆகையால் தான் அவர், இன்றைக்கு இந்த வேதவாக்கியம் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று. இங்கேயே, அதை நீங்கள் காண்கிறீர்கள். கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், வியாதியஸ்தரை சுகப்படுத்தவும்'' என்று அவரால் சொல்ல முடிந்தது. அதற்காகத்தான் அவர் வந்தார். அந்த வாக்கியத்தின் மற்ற பாகம் புறஜாதிகளுக்கு நீதியைச் சரிக்கட்டுதல் போன்றது. அது அடுத்ததாக வருகிறது. பாருங்கள், புறஜாதிகள் அவரை முதலில் புறக்கணிக்க வேண்டியதாயிருந்தது. 37இப்பொழுது, சிலுவையிலறையப்படுதல், இயேசு உங்கள் கரங்களில் என்னும் பொருளை சிந்திக்கும் போது, அங்குதான் நாமிருக்கிறோம்... தேவனுடைய வார்த்தை முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டு, அவர் தேவனுடைய வார்த்தைக்கு விடையாக அமைந்தார் என்று மறுபடியும், மறுபடியுமாக நிரூபிக்கப்பட்டது. அந்த வேதபாரகர்கள், பாருங்கள்... தேவன் அதை ஏற்கனவே வேதத்தில் வைத்துவிட்டார். ஊழியக்காரர் அதைப் படிக்கட்டும். ஆனால் பாருங்கள், அவர்கள் அதைக் குறித்து யாரோ ஒருவரின் வார்த்தையை - ஒரு கூட்டம் மனிதரின் வார்த்தையை - ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் சத்தியத்துக்கு அவ்வளவு குருடர்களாகி, சத்தியம் அளிக்கப்படும் போது அதைக் காணத் தவறுகின்றனர்.ஆனால் பாருங்கள், தேவன் நீதியுள்ளவர். அவர் அதை அங்கு எழுதி வைத்துவிட்டார். இன்று என்ன நடக்குமென்று இந்த புத்தகத்தில் அப்பொழுதே எழுதி வைத்துவிட்டார். எனவே, அது நிறைவேறும். ஆனால், அதைக் காண நியமிக்கப்படாதவர்கள் அதை ஒருபோதும் காண்பதில்லை. பாருங்கள், அவர்கள் எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர். 38அன்றும் அப்படித்தான் இருந்தது. அது, அவரென்று அவர்கள் அறிந்து கொள்ளவேயில்லை. அந்த அடையாளத்தின் மூலம், அவர் அக்காலத்து செய்தியாளன் என்று நிரூபிக்கப்பட்டார். அதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய தீர்க்கதரிசி அதைக் குறித்து கூறினான். அவன், ''நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் இப்பொழுது உங்கள் நடுவில் நின்று கொண்டிருக்கிறார்'' என்றான். மேலும் யோவான், அவர் வருவார், கோடாரியானது மரங்களின் வேரருகே வைத்திருக்கிறது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் காட்டிலிருந்து.... அல்லது திராட்சை தோட்டத்திலிருந்து அல்லது பழத்தோட்டத்திலிருந்து வெட்டப்படும். அது இனிமேல் அங்கிருக்காது'' என்றான். 39இயேசு கூறின விதமாகவே எல்லாம் நடந்ததென்று நாம் காண்கிறோம். அவரால் அவர்களுடைய இருதயத்திலிருந்த சிந்தனைகளைப் பகுத்தறிய முடிந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசி. அவர் முன்னுரைத்த அனைத்தும் அவர் உரைத்த விதமாகவே நிறைவேறின. ''நான் எருசலேமுக்கு போகிறேன். அங்கே பாவமுள்ள மனுஷரின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தி சிலுவையில் அறைவார்கள். மூன்றாம் நாள் நான் உயிரோடெழுந்திருப்பேன். இதை யாருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'' என்றார். அது நிறைவேறும் வரைக்கும் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடாதென்று அதை அவர்களுடைய கண்களுக்கு மறைத்தார். 40பாருங்கள், நமக்கு அவசியம் வரும் நேரம் வரைக்கும் நாம் அதை காணாமல் குருடாயிருக்க அவர் அநேகமுறை அனுமதிக்கிறார். இன்றைக்கு நாம் காணும் காரியங்களுக்கு குருடாயிருக்க அவர் நம்மை அனுமதிக்கிறார். ஏனெனில் நாம் வாழும் நாளை உறுதிப்படுத்துவதற்கென அது இந்நேரத்தில் நமக்கு அவசியம்மாயுள்ளது. பாருங்கள்? நமது பிதாக்கள் இவைகளை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதை அறியமாட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. அது அவர்களுக்கு மறைக்கப்பட்டு கடைசி நாட்களில் தேவ புத்திரர்களுக்கு வெளிப்படுகிறது. செய்து... அவர்கள் வெளிப்பட்டு, அவருடைய மகிமையையும் அவருடைய துதிகளையும் பூமியில் சொல்லி வருவார்கள். 41கடைசி நாட்களைக் குறித்து தானியேல் கூறின அனைத்தும், எப்படி தேவனை அறிந்தவர்கள் பிரபலமான காரியங்களை செய்வார்கள் என்றும்; எத்தனையோ வேதவாக்கியங்கள் நாம் வாழும் இந்நாளுடன் பொருந்துகின்றன. இந்த பூமியில் பொல்லாத, வஞ்சகமான காலம் உண்டாகும் என்று வேதத்தில் கூறப்பட்டது. நமது காலத்தில் நிறைவேறி வருகிறது. அவர்களுக்கு மேசியாவைக் காண ஒருதருணம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களோ அவர்களுடைய மேசியாவை புறக்கணித்தனர். இன்றைக்கும் அதே காரியம் சம்பவிக்கிறது - அதே காரியம். நமக்குத் தருணம் அளிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் முதலில் அவருடைய நியாயத்தீர்ப்புக்கு முகாந்தரமில்லாமல் தேவனால் நியாயந்தீர்க்க முடியாது. சாலையில் வேகமாக காரோட்டி செல்லும் ஒரு குறிப்பிட்ட மனிதரை நீங்கள் நிறுத்தி, “சாலையில் அந்த இடத்தில் ஒரு குழி உள்ளது. அந்த வேகத்தில் நீங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகி கொல்லப்படுவீர்கள்” என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. அவர், ''அர்த்தமற்றது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்'' என்று கூறுவாரானால், அவருடைய இரத்தப்பழி உங்கள் மேல் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவரை முழு வதுமாக எச்சரித்துவிட்டீர்கள். நல்லது, தேவன் தமது வார்த்தையின் மூலம் அதைதான் செய்கிறார். வரப்போகின்ற நியாயத்தீர்ப்புக்கு அவர் ஜனங்களை முழுவதுமாக எச்சரிக்கிறார். அக்காலத்துகென்று வேதத்தில் முன்னுரைக்கப்பட்ட அடையாளங்களையும் அற்புதங்களையும் அவர் காண்பிக்கிறார். அவர் அவைகளைக் காண்பித்த போதிலும், ஜனங்கள் அதை காணாமல் கடந்து சென்றுவிடுகின்றனர். ஒரு நபர் எளிதாக நரகத்துக்கு செல்வதில்லை. அவர் வழி நெடுக சண்டையிட்டுக் கொண்டு நரகத்தை அடைகிறார். நீங்கள் முதலில் ஒரு பொய்யை கூறின போது, அது தவறென்று அறிந்திருந்தீர்கள். நீங்கள் முதலில் ஒரு சிகரெட்டை புகைத்த போது, அது தவறென்று அறிந்திருந்தீர்கள். நீங்கள் முதலில் ஒரு பொல்லாப்பை செய்த போது அது தவறென்று அறிந்திருந்தீர்கள். உங்கள் மனச்சாட்சி.... அது தவறென்று உங்களிடம் கூறினது. இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சிகப்பு வெளிச்சத்தைக் கடந்து, வேலியில் மோதிக் கொண்டீர்கள். நீங்கள் அசட்டுத்துணிவு கொண்டு, அதை எப்படியும் செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டு, உங்களை ஒரு பெரிய மனிதனாக காண்பித்து கொண்டீர்கள். பாருங்கள்? ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் வழிநெடுக சண்டையிட்டு கொண்டு தான் நரகத்தை அடைகின்றீர்கள். நரகத்துக்கு போவதென்பது எளிதல்ல. நீங்கள் சத்தியத்தை புறக்கணிக்க வேண்டும். 42நீங்கள் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, சிகப்பு வெளிச்சத்தைக் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு.... சாலையில் எச்சரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நீங்களோ உங்கள் சொந்த வழியில் செல்கிறீர்கள். மனிதன் இன்றைக்கு அப்படித்தான் செய்கிறான். அவனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் தெரியும் என்னும் எண்ணம் உள்ளதால், வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிப்பின் அடையாளங்களுக்கு அவன் செவி கொடுப்பதில்லை... கிறிஸ்துவை புறக்கணிப்பவர்கள். 43இப்பொழுது, கவனியுங்கள் இந்த கிறிஸ்துவுக்கு பதிலாக அவர்கள் எதை ஏற்று கொண்டனர் என்று. அந்நாளிலிருந்த சபையை சிந்தித்து பாருங்கள், அவர்களுக்கிருந்த குருட்டு தன்மையை. அவர்கள் பகிரங்கமாக கொலை செய்த ஒருவனை, பரபாசை - ஆதரித்து விடுதலை செய்தனர். அவன் கொலை பாதகன் என்று நிரூபிக்கப்பட்டு நியாய விசாரிப்புக்காக காத்து கொண்டிருந்தவன். அவன் கொலை பாதகன் என்று நிரூபிக்கப்பட்டவன், கெட்டவன். இயேசுவின் வாழ்க்கை... அவர் அவர்களுக்கு சவால்விட்டார். அவர், ''என்னில் பாவமுண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும்?'' என்றார் (பாவம் என்பது அவிசுவாசம்). ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் வேத வாக்கியங்களிலுள்ள சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்காமலிருந்தால்... வேத வாக்கியங்கள் என்னை குறித்து சாட்சி கொடுக்கின்றன. வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்து இக்காலத்தில் சாட்சி கொடுக்கிறவைகளும், அவைகளே'' என்றார். 44ஆனால் அவர்களோ, “அவன் தன்னை தேவனாக்கி கொள்கிறான். அவன் தன்னை ஏதோ பெரியவனாக்கி கொள்கிறான்'' என்றனர். அவர், தம்மை ஒன்றும் ஆக்கிக் கொள்ளவில்லை... தேவன் அவரை தேவனாக்கினார். அவர் தேவனாயிருந்தார். அவர் வேத வாக்கியங்களை நிறைவேற்றினார். அவர் தம்மை ஒன்றும் ஆக்கிக் கொள்ளவில்லை. தேவன் அவரை அவ்வாறு ஆக்கினார். ஏனெனில் அந்த வார்த்தை நிறைவேற வேண்டிய வேளை அதுவே. எனவே, ஆனால் அவர்களால் அதை கண்டுக் கொள்ள இயலவில்லை. ஏனெனில், அது அவர்களுடைய ஸ்தாபனக் கருத்துக்களுக்கு முரண்பாடாய் இருந்தது. அவர்கள் கிறிஸ்துவைக் குறித்துக் கொண்டிருந்த கருத்துக்களுக்கு. அது வார்த்தைக்கு மிகவும் குருடாய் இருந்தது. 45இப்பொழுது, அது மாத்திரமல்ல, அவரை ஒழிப்பதற்கென, அவர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாயிருந்த ஒரு கொலை பாதகனை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது... அவன் சமுதாயத்துக்கு பாரமாயிருந்தவன்; அவர்களுக்கு பாரமாயிருந்தவன்; ஒரு கொலைபாதகன். கிறிஸ்துவை புறக்கணிக்க... அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எந்த ஒரு மனிதனும் ஸ்திரீயும், தவறான ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நன்மையானதைப் புறக்கணிக்க வேண்டும். இயற்கையில் அப்படி ஒன்றுண்டு, அது ஒரு பிரமாணத்தை வகுத்துள்ளது. அதாவது, நீங்கள் தவறான காரியத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நன்மையான காரியத்தைப் புறக்கணிக்க வேண்டும். நான் சற்று முன்பு கூறினதுபோன்று, பொய் சொல்லாமலிருக்க... உங்கள் தீர்மானத்துக்கு விரோதமாக நீங்கள் பொய் சொன்னீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக நீங்கள் பொய் சொன்னீர்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு கற்பித்து கொடுத்ததையும் மீறி நீங்கள் பொய் சொன்னீர்கள். இயற்கையும் கூட நீங்கள் பொய் சொல்லக் கூடாதென்று உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. எனவே, சத்தியத்தை புறக்கணிப்பதற்கென நீங்கள் பொய்யை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பொய்யை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, சத்தியத்தைப் புறக்கணிக்க வேண்டும். பாருங்கள்? 46அப்படித்தான் இந்த ஆட்கள் செய்தனர். அவர்கள் சத்தியத்தை புறக்கணித்தனர். அவரே சத்தியமாயிருந்தார். ''நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்கு முன்பாக வெளிப்பட்டார்.'' தீமோத்தேயு 3:16ல், ''அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்பு கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.'' ''அவரை எங்கள் கைகளால் தொட்டோம் தேவனை யேகோவாவை அது ஆச்சரியமானது. அதை, நினைத்துப் பார்க்கும் போது மிகவும் திகைப்பூட்டும் செயலாயுள்ளது. அதாவது விண்வெளியில் சூரியன், சந்திரன், கிரகங்களை வைத்து இவ்வுலகத்தை விட ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களை உண்டாக்கின தேவன்... அந்த நட்சத்திரங்களில் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 10,000 மைல் வேகத்தில் விரைந்து வருமானால், இங்கு அடைய அதற்கு 10 கோடி ஆண்டுகள் பிடிக்கும். அது, அவ்வளவு தூரத்தில் உள்ளது. இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே ஒரு அங்குலம் இடைவெளி மாத்திரமே உள்ளதாக இங்கிருந்து காணப்படுகிறது. ஆனால், இங்கிருந்து அவைகளுக்குள்ள தூரத்தைக் காட்டிலும் அவை ஒன்றுக்கொன்று, அதிக தூரத்தில் உள்ளன. இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அதனதன் ஸ்தானத்தில் உள்ளன. அந்த மகத்தான நட்சத்திரக் கூட்டம்..... ஓ, என்னே! தேவனுடைய பிரம்மாண்டமும் பரப்பும். யார் இவைகளை உண்டாக்கியிருக்க முடியும்... ஒவ்வொன்றும் மற்றொன்றை அதன் ஸ்தானத்தில் வைக்க வேண்டியதாயுள்ளது. ஆகையால், தான் அது அந்நிலையில் உள்ளது. அவை நிலை தவறினால், முழுவதுமே விழுந்து விடும். அது தான் ஏதேனில் நடந்தது. ஏவாள் தேவனுடைய கற்பனையை மீறி நிலை தவறின போது, மனிதகுலம் முழுவதுமே விழுந்து போனது. இன்றைக்குள்ள தொல்லையும் அதுவே. நாம் ஸ்தாபனங்களில் பிரிந்து இருக்கக் கூடாது. நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இவ்வுலகில் நட்சத்திர கூட்டமாய் இருந்து ஒருவரோடொருவர் இணைந்திருக்க வேண்டும். 47சென்ற வாரம் நான் நியூயார்க்கில், நமது காலத்தின் மிக சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஐன்ஸ்டீன் என்னும் பிரபல விஞ்ஞானி எடுத்துரைத்ததை அல்லது பேசுவதைக் கேட்டேன்.... அதை நான் கேட்டேன். அதன் பிறகு நான் சென்று மனோதத்துவத்தை குறித்து நார்மன் வின்சென்ட்பீல் என்பவர் பேசுவதை - ஜனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி மனோதத்துவ முறையை கடைபிடிக்க வேண்டும் என்று விளக்குவதை, கேட்டேன். பிறகு நான்.... ஐன்ஸ்டீன் விண்வெளியிலுள்ள நட்சத்திர கூட்டத்தைக் குறித்து பேசினார். அதாவது ஒரு மனிதன்... ஒளியின் வேகத்தில் சென்றால் என்று கூறினார் என்று நினைக்கிறேன். அது, நான் நினைக்கிறேன்... அது எவ்வளவு 86,00... (சகோதரன். நெவில், “186'' என்று கூறுகிறார் - ஆசி) வினாடிக்கு 186,000 மைல் வேகத்தில் ஒளி செல்கிறது. ஐந்து நிமிடங்களில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று கணக்கிட்டு பார்த்தேன். நீங்கள் எவ்வளவு லட்சக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்திருப்பீர்கள். அந்த நட்சத்திரக் கூட்டத்தை அடைய உங்களுக்கு 12 கோடி ஒளி - ஆண்டுகள் பிடிக்கும். பிறகு 12 கோடி அல்லது 15 கோடி ஆண்டுகள்.... போக 15 கோடி ஆண்டுகள், திரும்பி வர 15 கோடி ஆண்டுகள். அவர்கள், ஒன்றை கண்டுபிடித்தனர், அது அவர்களுக்கு புதிராயிருந்தது. அவர்கள். அங்கு போய்விட்டு திரும்பி வந்த பிறகு... உங்களுக்கு உண்மையில் அந்த பயணத்துக்கு 30 லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்..... 30 கோடி ஆண்டுகள். அந்த பயணத்துக்கு 30 கோடி ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் நீங்கள் பூமியை அடையும் போது, இங்கிருந்து ஐம்பது ஆண்டுகள் மாத்திரமே சென்றிருப்பீர்கள். நீங்கள் நித்தியத்துக்குள் பிரவேசிக்கிறீர்கள். அதற்கு முடிவு இல்லை. 48இவையனைத்தையும் வார்த்தையினால் சிருஷ்டித்து, அவைகளை ஒழுங்காக வைத்த தேவன், நம்மை மீட்பதற்கென இறங்கி வந்து நமது மத்தியில் மாம்சமானார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, தமது கம்பீரமான பிரசன்னத்தினால் நம்மை கனப்படுத்தி, பாவமுள்ள இந்த உலகத்தில் கடைசி நாட்களில் நின்று கொண்டு அவருடைய வார்த்தையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி பார்க்கும் போது! ஏனெனில் அவர் வார்த்தைக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். ஆமென். இவையனைத்தையும் தமது கரங்களில் கொண்டுள்ள அந்த மகத்தானவரின் இராஜாதிபத்தியமும் நீதியும். 49கவனியுங்கள், நாடுகள்... முதலாவதாக சபையானது வார்த்தையைப் புறக்கணிக்க வேண்டும். சபை வார்த்தையை புறக்கணித்து அதை, பெயல்செபூல் அல்லது பொல்லாத ஆவி என்றழைத்த பிறகு, அந்த வார்த்தை அரசாங்கத்துக்கு முன்பாக கொண்டு வரப்பட்டு, அதன் விளைவாக அந்த முழு வர்க்கமும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுகிறது. இயேசு நியாயம் விசாரிக்கப்படுவதற்காக தேசாதிபதியாகிய பிலாத்துவின் முன்னால், ஒரு ரோமனுக்கு முன்னால், இருப்பதை இக்காலையில் காண்கிறோம். சபையானது முதலில் அவரைப் புறக்கணித்தது, ஏனெனில் அவர்கள் அவருடைய செய்தியை விசுவாசிக்கவில்லை; அவர்கள் வார்த்தையை அறிந்திருக்கவில்லை. 50இயேசு அவர்களை நோக்கி, ''நீங்கள் மோசேக்கு செவி கொடுத்திருந்தால், என் வார்த்தையை விசுவாசிப்பீர்கள், ஏனெனில் அவன் என்னைக் குறித்து சொல்லியிருக்கிறான் என்றார். பாருங்கள்? தீர்க்கதரிசி அந்த வார்த்தையை... கர்த்தர் தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறார், தீர்க்கதரிசி வரப்போகும் காலத்துக்கான வார்த்தையை உரைக்கிறான். அது, இங்கு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. அவர், ''நீங்கள் மோசேயை அறிந்திருப்பதாகவும் அவன் உங்கள் வழிகாட்டி என்றும் கூறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கு மோசேயைத் தெரியாது. அவனுடைய வார்த்தையை நீங்கள் அறிந்திருக்கவில்லை“ என்றார். வேறுவிதமாக கூறினால் அவர், ''நானே வார்த்தை. வரப்போவதாக மோசே உரைத்த அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட வார்த்தை நானே. அப்படியிருக்க நீங்கள் என்னைக் குற்றப்படுத்துகிறீர்கள்'' என்றார். பாருங்கள். அவர்களுடைய பாரம்பரியங்களின் காரணமாக. பாருங்கள்? சபை அவரை குற்றப்படுத்தினது. 51அவர் பிலாத்துவின் முன்னால் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவராக நிற்பதைக் காண்கிறோம். அந்த காலத்துக்கு அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டியவராக... அந்த காலத்தின் செய்தியாளராக, சபையினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டியவராக. அதைக் கண்டு விசுவாசிக்க அவர்களுக்கு ஒருதருணம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களோ அதைப் புறக்கணித்தனர். அவர்கள் ஏன் அதை புறக்கணித்தனர்? அநேகர் அதை விசுவாசிக்க வேண்டுமென்று தான் எண்ணினர், ஆனால், அவர்களுடைய பாரம்பரியங்கள், ஜனங்கள் அல்ல, அவர்களுடைய பாரம்பரியங்கள்... 52இப்பொழுது, பாருங்கள். நிக்கொதேமு இரவு நேரத்தில் வந்து, ''ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், நீர் செய்கிற கிரியைகளைச் செய்யமாட்டான். நாங்கள்...'' என்கிறான். அவன் குறிப்பிடும் ''நாங்கள் யார்? சபை, பரிசேயர், அக்காலத்திலிருந்த தலைவர்கள். ''நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் தான் அந்த நபர் என்று எங்களுக்கு முழு நிச்சயம் உண்டு.'' அப்படியானால் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை? அவர்களுடைய முறைமையின் காரணமாக... (இது உங்களில் ஆழமாகப் பதிய விரும்புகிறேன். ஏனெனில், அதற்கு தான் நான் வருகிறேன். பாருங்கள்?). அவர்கள் அவரை மேசியா என்று அறிந்திருந்தும், அவர்கள் ஏற்கனவே சேர்ந்து கொண்டிருந்த அந்த ஸ்தாபன முறைமைகளை அவர்களால் தள்ளிவிட முடியவில்லை. அவர்கள், இணைந்திருந்த அந்த ஸ்தாபன முறைமை அதை ஏற்றுக்கொள்ள அவர்களை அனுமதிக்கவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? (சபையார், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இங்கு காணப்படும் இந்த கூட்டத்தினரைக் கேட்க விரும்புகிறேன். நான் கூறுவதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி! 53இப்பொழுது, அந்த முறைமை.... அவர்கள் அதை விசுவாசித்து, அதுதான் அது என்பதை அறிந்திருந்தனர். இன்றைக்கும் அதுதான் சம்பவிக்கிறது என்று கூற விரும்புகிறேன். இன்று இங்கு இருக்க வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதை நாம் கண்டபோதிலும் ஸ்தாபன முறைமை அதை ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அவர்கள் தங்கள் முறைமைகளில் மிகவும் ஆழ்ந்துள்ளனர். பாருங்கள். அது மனிதர் அல்ல, அந்த முறைமை. கொலை செய்யப்பட்ட ஜனாதிபதியை குறித்து நான் சற்று முன்பு கூறினது போல். எனக்குத் தெரிந்தவரைக்கும், அது, அந்த மனிதன் அல்ல. அவர் நல்லவர்; அவர் பொல்லாப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது அந்த முறைமை. அது ஜனங்கள் அல்ல, அது முறைமை. அது யூதர்கள் அல்ல, அது அவர்களுடைய முறைமை. அந்த முறைமைதான் அவரைக் குற்றப்படுத்தினது. ஏனெனில் அவர்களுடைய முறைமையினால் அதை சகிக்க முடியவில்லை. உங்களுக்கு புரிகிறதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) இன்றைக்கும் அதுதான் சம்பவிக்கிறது. அவர்கள் இந்தபொது மக்களின் சத்துருவை, ஒரு கொலைகாரனை தெரிந்து கொண்டனர். இப்பொழுது இந்த பிரச்சினையில் அரசாங்கமும் கலந்துவிட்டது. அரசாங்கம் தான் தண்டனை விதிக்க வேண்டும். ஒருவரின் உயிரை போக்க, அது அரசாங்கத்துக்கு முன்னால் வரவேண்டும். அவர்களுக்கு அதைச் செய்ய உத்தரவில்லை, ஏனெனில், அவர்கள் ரோம் அரசாட்சியின் கீழ் இருந்தனர். அதை நாம் செய்தே ஆக வேண்டும் என்று அவர்களுடைய சபை எவ்வளவு தான் கூறினாலும், அவர்களுக்கு உயிரை போக்க அதிகாரம் இருக்கவில்லை. ரோம அரசாட்சி அதற்கு உத்தரவு கொடுத்தாலன்றி, அவர்களால் அப்படி செய்ய முடியாது. எனவே அது அரசாங்கத்துக்கு முன்பாக கொண்டுவரப்பட வேண்டும். அரசாங்கம் அதில் ஈடுபட்டுவிட்டது. இன்றைய காட்சியும் அதுவல்ல என்றால், வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை... பாருங்கள்? அது அப்படியே! 54சபை அதை புறக்கணிக்கிறது. அரசாங்கம் அதில் ஈடுபடுகிறது. தேசம் அனைத்தும் முழுவதும்... அதில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. பலப்பரீட்சை நெருங்கிவிட்டது. தேசம் அனைத்தும் அவரைப் புறக்கணித்து... தேவனுடைய கோபாக்கினையை தன்மேல் வரும் வித்துக் கொண்டது. அதற்கு முன்பு... சபையும் கூட அவரைப் புறக்கணித்துவிட்டது. அது, கோபாக்கினை சபையின் மேல் வரும்படி செய்தது. இப்பொழுது தேசம் அவரைப் புறக்கணித்து, கோபாக்கினை எல்லோர் மேலும் வந்தது. இன்றைக்கு, உலகம் அவரை புறக்கணித்து, கோபாக்கினை எல்லோர் மேலும் வந்தது. இன்றைக்கு, உலகம் அவரை புறக்கணித்து நியாயத்தீர்ப்பை முழு உலகத்தின் மேலும் வருவித்துக் கொண்டது. தேசங்கள் அனைத்தும் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். 55அந்த சிறந்த ரோம தளபதியாகிய தீத்துவின் (Titus) காலத்தில் நியாயத்தீர்ப்பு வந்ததை நாமறிவோம். அவன், எருசலேமை முற்றுகையிட்டு முடிவில்... அவர்கள் ஒருவருடைய பிள்ளைகளை மற்றவர் தின்றனர். மரத்தின் பட்டையையும் நிலத்தில் விளைந்த புல்லையும் தின்றனர். தீத்து உள்ளே நுழைந்து மதில்களை இடித்து போட்டு, நகரத்தை தீக்கிரையாக்கி, ஜனங்களை கொன்றதால், இரத்தம் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடினது. அது அப்படி இருக்க வேண்டியிருந்தது. நீதியுள்ள தேவன் தாம் தெரிந்து கொண்ட ஜனங்களின் மேல் இப்படிப்பட்ட ஒன்று வருவதற்கு அனுமதிப்பதற்கு முன்பு அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அவர் நீதியுள்ளவர். அவருடைய பிரமாணங்கள் அவருடைய நீதியை கோருகின்றன. தண்டனையில்லாத சட்டம் சட்டமாகாது. இந்த நகரத்தில் நான் ஒரு சட்டம் அமைத்து, ''சிகப்பு விளக்கை கடந்து செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்'' என்று கூறிவிட்டு, அந்த சட்டத்தை மீறினவர்களுக்கு தண்டனை வழங்காமல் போனால், நீங்கள் சிகப்பு விளக்குகளைக் கடந்து சென்று கொண்டேயிருப்பீர்கள். தேவனுடைய பிரமாணத்தை மீறி அவருடைய திட்டத்தை புறக்கணித்தால், அதற்கு தண்டனை மரணமே! அந்த மரணத்துக்கு கிரயம் செலுத்தப்பட வேண்டும். 56இன்று காலை நாமும் கூட உலகம் பூராவும் இதே போன்ற ஒரு நியாய விசாரணையில் நின்று கொண்டிருக்கிறோம். நியாய விசாரணை! எல்லா ஸ்தாபனங்களும் வார்த்தையை புறக்கணித்து விட்டன. இது மிகவும் கடுமையாக ஒலிக்கிறதென்று அறிவேன். இதை கேட்கும் இங்குள்ள போதகர்களும், இதை ஒலிநாடாவில் கேட்க போகும் போதகர்களும், இதை நான் வெளிப்படையாக கூற முயல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர்களை கேட்டு கொள்கிறேன். என் அபிப்பிராயத்தை நான் கூற விரும்புகிறேன். அதாவது, இன்று நாம்.... (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி) பிலாத்துவின் மற்றொரு நியாய விசாரணை மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒருக்கால், ''அன்று நான் அங்கு நின்றிருந்தால், இயேசு கிறிஸ்துவின் சார்பில் வாதாடியிருப்பேன்...'' என்று கூற வகையுண்டு. நல்லது, அதைக் குறித்து இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதுதான் முக்கியமானது பாருங்கள்? ''சபை அவரை எவ்வளவு தான் புறக்கணித்தாலும், நான் அவர் சார்பில் நின்றிருப்பேன்.'' உங்களுக்கு இப்பொழுது தருணம் உள்ளது. (உ-ஊ, உ-ஊ) அவர்கள் அவரை புறக்கணித்தனர். 57இன்றைக்கு அவர் நியாயம் விசாரிக்கப்படுகிறார், அல்லது இப்பொழுது தான் நியாயம் விசாரிக்கப்பட்டார், நியாய விசாரணையில் இருக்கிறார்... உலக முறைமை ஒன்று அமைக்கப்படுவதற்காக, சபைகளின் ஆலோசனை சங்கம் என்று அழைக்கப்படுவதை உலகம் முழுவதிலும் நிறுவி உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தை ஏற்படுத்த. அவர்கள் என்ன செய்துவிட்டனர்? அவர்கள் வாக்குகளை அளித்து, முற்றிலும் ஒன்றாக இணைந்து சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்து விட்டனர். இந்த சபைகளின் ஆலோசனை சங்கத்தில்.... எல்லா சபைகளும் அந்த ஆலோசனை சங்கத்தில் சேர்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பிரசங்கம் செய்யவும் கூட அனுமதியளிக்கப்படாது. நீங்கள் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவும் கூட அனுமதியளிக்கப்படாது. உங்கள் சபை கட்டிடம் அவர்கள் விருப்பப்படி எதற்கு வேண்டுமானாலும் உபயோகிக்கப்படும். அவர்கள், அதை வெடி மருந்து நிறைக்கப்பட்ட பெட்டிகளை சேகரித்து வைக்கும் ஸ்தலமாக உபயோகிக்க விரும்பினால், அல்லது வேறெதையாகிலும் செய்ய விரும்பினால், அதை குறித்து நீங்கள் எதையும் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இராது. ஒன்று நீங்கள் சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்திருக்க வேண்டும், அல்லது அதில் சேராமல் இருக்க வேண்டும். அந்த முறைமை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது, அது வேத வாக்கியங்களை முற்றிலும் நிறைவேற்றுவதாய் உள்ளது. அது கர்த்தர் என்னிடம், 1933ம் ஆண்டில் கூறினதை நிறைவேற்றுவதாய் உள்ளது. அந்த நேரத்தில் தான் நாம் இன்று காலை இருக்கிறோம். வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து, சிலுவையிலறையப்பட்ட போது நியாயம் விசாரிக்கப்பட்டது போல, இப்பொழுதும், நியாய விசாரணை செய்யப்படுகிறார். இப்பொழுதும் நமது கரங்களில் இருக்கிறார். அவர் உலகத்தின் கரங்களில் இருக்கிறார். வார்த்தையானது உலகம் முழுவதிலும் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பாருங்கள்? அவர் நியாய விசாரணைக்காக நின்று கொண்டிருக்கிறார். ஸ்தாபனங்கள் அனைத்தும் அவரை நிராகரித்துவிட்டன. இப்பொழுது, அவர் சபை ஆலோசனை சங்கத்தால்... நியாயம் விசாரிக்கப்படுகிறார். அவர்கள், அவரை மறுபடியும் புறக்கணித்து, முன்பு செய்தது போல வேறொன்றை தெரிந்து கொள்கின்றனர். 58பாருங்கள், இயற்கையின் இயல்பு திரும்ப திரும்ப வருகிறது. ஏனெனில், இயற்கை தொடர்ந்து அதேவிதமாக உள்ளது. மரங்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன; காய்கறிகளும் பூக்களும் தொடர்ந்து வளருகின்றன. உலகமும் அதன் இயல்பில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலத்தின் இயல்பும் மறுபடியும் தோன்றி, அதற்கு முன்பிருந்த காலங்களில் காணப்பட்ட இயல்பின் பிரதிபலிப்பாய் அமைகிறது. இன்றைக்கு நாம் அதே நிலையில் நின்று கொண்டிருப்பதை உணருகிறோம். இயேசுவே வார்த்தை (யோவான் முதலாம் அதிகாரம்), அதை நாம் அனைவருமே விசுவாசிக்கிறோம். அவரே வார்த்தை. அவர் வார்த்தையாயிருந்த காரணத்தால்.... (தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்....) அவர் வார்த்தை, எனவே அவர் முறைமைகளுக்கு எதிராக இருக்க வேண்டிதாயிருந்தது. அவர் அற்புதங்களைச் செய்தார் என்பதனால் அவர்கள் அவரைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அதற்காக அல்ல.... அவர்கள் சொன்னார்கள். அவர், ''யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?'' என்று கேட்டார். அந்த ஸ்திரீ, ''அவர் என்ன பொல்லாப்பு செய்தார்? வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினாரேயன்றி, அவர் வேறென்ன தீங்குசெய்தார்?'' என்று கேட்டாள். 59அவர்கள், இவைகளைச் செய்தார் என்பதற்காக நாங்கள் அவரை குற்றப்படுத்தவில்லை. அவர் மனிதனாயிருக்க, தன்னை தேவனாக்கி கொள்கிறார் என்பதற்காக அவரை நாங்கள் குற்றப்படுத்துகிறோம்'' என்றனர். அவர்களுடைய சொந்த வேத புத்தகமே அவர் தேவனாயிருப்பார் என்றுரைத்தது. அறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்ட புத்தகத்தை எழுதிய அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா எதில் தொடங்குகிறான் என்றால்.... முதலில், ஆதியிலிருந்தது போல் அந்த புத்தகத்தின் நடுவில் யோவான் ஸ்நானன் வருகிறான். அதை அவன் ஆயிரம் வருட அரசாட்சியில் முடிக்கிறான். வேதாகமத்தில் அறுபத்தாறு புத்தகங்கள் உள்ளது போல. ஏசாயாவில் அறுபத்தாறு அதிகாரங்கள் உள்ளன. அது குறிப்பிடத்தக்கது, அப்படித்தான் அது அமைந்துள்ளது. ஏசாயா;9-6ல், அவன் இவ்வாறு உரைக்கிறான்: ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அவருடைய நாமம்... ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, அதிசயமானவர் என்னப்படும்'' அவர்களுடைய குருட்டுத்தனமான பாரம்பரியங்களும் முறைமைகளும் அவர் தேவன் என்பதைக் காண முடியவில்லை. அவர்களுடைய சொந்த தீர்க்கதரிசியே (அவனுக்கு வார்த்தை உண்டானது. அவர் தேவனாயிருப்பார் என்றுரைத்தான். குருட்டுத்தனமான முறைமைகள்! எனவே, அவர்கள் வார்த்தையை புறக்கணித்து, அதற்கு பதிலாக கொலை பாதகனான பரபாசை விரும்பினர். 60இன்றைக்கு, இந்நாளுக்கான வார்த்தை தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது தத்ரூபமாக்கப்பட்டு, அது சத்தியம் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. கடைசி நாட்களைக் குறித்து இயேசு, ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்'' என்றார். வார்த்தையாயுள்ள தேவனே முடிவு காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னுரைத்தார். அதாவது சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்றும், மல்கியா; 4கின்படி, அவர் இவைகளை அனுப்பி அவைகளை நிரூபிப்பார் என்றும் முன்னுரைத்தார். 61இப்பொழுது தீர்மானம் செய்ய வேண்டிய நிலைக்கு அது கொண்டு வரப்பட்டுள்ளது. சபைகளோ, அதைப் புறக்கணித்து விட்டன. சபைகள் எதை விரும்பின? வார்த்தையைக் கொலை செய்பவனை; முறைமைகளை ஏற்று கொள்பவனை. முறைமையானது வார்த்தைக்கு முரணாய் இருக்குமானால், அது வார்த்தையை கொலை செய்யும் ஒன்றாய் உள்ளது. உண்மையான வார்த்தை வெளிப்பட்டு, அது ஜனங்களின் மத்தியில் தேவன் என்று விஞ்ஞானத்தினாலும் புகை படங்களினாலும் நிரூபிக்கப்பட்டதை ஏற்று கொள்வதற்கு பதிலாக, அவர்கள் ஸ்தாபன பாரம் பரியங்களை விரும்பினர். அந்த ஒளி, அதே கர்த்தருடைய தூதன், அக்கினி ஸ்தம்பம்; இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் பூமியில் வாழ்ந்த அவரே. இந்தக் கடைசி காலத்தில் தமது ஜனங்களின் மேல் வந்துள்ளார். விஞ்ஞானம் அதை புகைப்படம் எடுத்தது. சபையானது அதன் கிரியைகளைக் கண்டது. அது, ஒலிநாடாக்களாலும் மற்றவைகளாலும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, தனிப்பட்ட முறையில், ஊழியம் செய்துள்ளது. இவையனைத்துக்கும் பிறகும், அவர்களுடைய முறைமைகள் சத்தியத்தைப் புறக்கணித்து, சபைகளின் ஆலோசனை சங்கத்தை விரும்புகின்றன. எல்லாவற்றையும் மூடி, அவைகளை நிறுத்தி, அவைகளை விற்றுப்போடும் ஒரு கொலை பாதகனை அவை விரும்புகின்றன. அது, அதை நிச்சயம் செய்யும். அவர்கள் அவைகளை நிறுத்தி விடுவார்கள். சபைகளின் ஆலோசனை சங்கம் அப்படி செய்ய வேண்டும். அதோ மிருகத்தின் முத்திரை! அந்திக்கிறிஸ்து - கிறிஸ்துவாகிய வார்த்தைக்கு எதிரானது. அவர்களுடையது அல்ல... 62அவர்கள் நினைக்கின்றனர், பாரம்பரியங்கள். அவர்களுடைய பாரம்பரியங்கள் தேவனால் உண்டானதாக அவர்கள் எண்ணுகின்றனர். பாருங்கள்? ஆனால், அது வார்த்தையின் முன்னால் நிற்க முடியாது. அது சரியென்று தேவன் உறுதிப்படுத்துவதில்லை. இயேசு வார்த்தையுடன் கூட நின்றார். அவர்களுடைய ஆலோனை சங்கத்துடன் கூட அல்ல. அவர் வார்த்தையுடன் கூட நின்றார். அந்த வார்த்தை அவர் தேவன் என்பதை நிரூபித்தது. அது இன்றைக்கும் அது தேவன் என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், அது அதே வாழ்க்கை வாழ்ந்து, அது முன்பு செய்த அதே கிரியைகளையும், அது முன்னுரைத்தவைகளையும், இப்பொழுது நமது மத்தியில் செய்து வருகிறது. எனவே, அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் வேறொன்றை ஏற்று கொள்கின்றனர். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை சிலுவையில் அறையும் ஒரு முறைமையை ஏற்கனவே ஏற்று கொண்டுவிட்டனர். சர்வ ஸ்தாபனங்கள் சிலுவையிலறைதல்... சமீபமாயுள்ளது. அது உண்மை. 63அது வேத வாக்கியங்களுக்கு முரணாக இல்லை. அது, ''அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள்'' என்னும் வேத வாக்கியத்துக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. உலகிலுள்ள பிராடெஸ்டெண்டு சபைகள் ஒன்றாக இணைந்து, வெளிப்படுத்தல்; 13:8ன் படி மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றன. “அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினார்கள்.'' மிருகம் என்பது ரோமாபுரி. அது நம்மெல்லாருக்கும் தெரியும். அது எப்பொழுதுமே ரோமாபுரி... அப்படியானால் அது எப்படி... வேதாகமம் ரோமாபுரி என்று கூறியிருக்கும் போது, அது எப்படி ரஷியாவாக இருக்க முடியும்? பாருங்கள்? ஜனங்கள் தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளனர். பாருங்கள்? அது ரோமாபுரியிலிருந்து வர வேண்டுமென்று முன்னுரைக்கப்பட்டுள்ள போது, அது எப்படி வேறொன்றாக இருக்க முடியும்? 64தானியேலுக்கு மறுபடியும் திரும்பிச் செல்லுங்கள். பாதங்கள் இரும்பும் களி மண்ணும் கலந்தது. இரும்பு முழங்கால்கள் தொடங்கி கடைசி வரைக்கும் நீங்கவேயில்லை. அப்பொழுது, ரஷியா அறியப்படவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அது ரோமாபுரி. சிவந்த வலுசர்ப்பம் ரோமாபுரி. அது எப்பொழுதும் ரோமாபுரியே. அந்த இரும்பு வேறொன்றுக்கு மாறிடவில்லை - ரோமாபுரியிலிருந்து வேறொன்றுக்கு மாறிடவில்லை. அது ரோமாபுரியாகவே இருந்து வந்தது. மிருகம் ரோமாபுரியே! 65அந்த ரோமாபுரி மத சம்பந்தமான முறைமையைக் கொண்டிருந்தது. அதன் சாவுக்கேதுவான தலை - அதன் தலை சாவுக்கேதுவாக காயப்பட்டது, ஆனால் அது மறுபடியும் உயிர்பெற்றது, அஞ்ஞான ரோமாபுரியிலிருந்து போப்பின் ரோமாபுரியாக. அவர்கள் இப்பொழுது வெளிப்படுத்தல், 13ம் அதிகாரத்தில் ஏறிவந்த மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகின்றனர். இந்த தேசத்தின் எண்ணிக்கை 13 என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்ததுண்டா? என்ன தோன்றுகிறதென்றால். நான் அப்படிகூறவில்லை... இது... அது கணித விதத்தில் நடக்கும் என்பது விசித்திரமாயுள்ளது. அது, வேதம் கூறுவதுடன் இணைகிறது. இந்த தேசம் வெளிப்படுத்தல் 13ல் காணப்படுகிறது. மற்றெல்லா மிருகங்களும் தண்ணீரிலிருந்து ஏறி வருகின்றன. தண்ணீர் திரளான ஜனங்களைக் குறிப்பதாக வேதம் கூறுகிறது. ஆனால், இந்த சிறு மிருகமோ ஜனங்கள் இல்லாத பூமியிலிருந்து ஏறி வருகிறது. அது ஒரு ஆட்டுக்குட்டி; மத சுதந்திரம். அதன் பிறகு அது வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. அது அதிகாரத்துடன் இணைந்து, அதற்கு முன்பு வலுசர்ப்பம் செய்த அனைத்தும் செய்தது. முற்றிலுமாக! எனவே பார்த்தீர்களா? அது அப்படித்தான் இருக்க வேண்டும். அதிலிருந்து தப்பிக்க வழியேயில்லை. 66இதோ இன்றைக்கு நாம் ஒரு முறைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு முறைமை... வேறொன்று வர நம்மால் காத்திருக்க முடியாது. நாம் எல்லோரையும் லூத்தரன்களாக மாற்ற பிரயாசப்பட்டோம்; நம்மால் முடியவில்லை. எல்லோரையும் பாப்டிஸ்டுகளாக மாற்ற பிரயாசப்பட்டோம்; நம்மால் முடியவில்லை. எல்லோரையும் மெதோடிஸ்டுகளாக அல்லது பெந்தெகொஸ்தே காரராக மாற்ற பிரயாசப்பட்டோம்; நம்மால் முடியவில்லை. எனவே, இதை செய்வதற்கென (காலம் மிகவும் குறுகியுள்ளதால்) அவர்கள் ஒரு ஆலோசனை சங்கத்தை, ஒரு தலையை, மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கிக் கொண்டனர். அதைத்தான் அவர்கள் செய்தனர். அது என்ன?வார்த்தை மறுபடியுமாய் சிலுவையிலறையப்பட வேண்டிய நேரம் சமீபமாயுள்ளது. அது, இப்பொழுது விசாரணையில் உள்ளது. அது வேகமாக நியாய ஸ்தலத்துக்கு கொண்டு வரப்படும். 67கவனியுங்கள்,வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை... ஸ்தா பனத்தைக் காட்டிலும்..... அது ஸ்தாபனத்தை காட்டிலும் வித்தியாசமான விதத்தில் வார்த்தையை வெளிப்படுத்துகிறது. அது என்ன? இந்த முறைமை என்ன? அது ரோமாபுரியைச் சார்ந்துள்ள ஒரு உபகிரகம் (Satellite) அது அப்படித்தான் இருக்கும் என்று வேதம் கூறியுள்ளதல்லவா? ஆம், ஐயா! வெளிப்படுத்தல், 17ம் அதிகாரம், ரோமாபுரி மத சம்பந்த முறைமையான ஒரு ஸ்திரீயாக எழும்புவதை அவர்கள் கண்டனர். ஸ்திரீ... சபையானது எப்பொழுதுமே ஸ்திரீக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் கிறிஸ்துவின் மணவாட்டி ஒரு ஸ்திரீ. ஏவாள் விழுந்து போனாள். மீட்கப்பட வேண்டியவள் அவளே. சபையானது. அது என்ன? மீட்கப்பட்ட ஸ்திரீ. 68இந்த ஸ்திரீ ஏழு தலைகளையுடையமிருகத்தின் மேல் உட் கார்ந்து கொண்டிருந்தாள். நமக்கு ஏழு மலைகள் போன்றவைகளை குறித்து தெரியும். இப்படி இருக்குமென்று வேதம் உரைத்துள்ளது. அதில் தவறுஎதுவுமில்லை, அதில் தவறு நேரிட வழியேயில்லை. பாருங்கள்? கவனியுங்கள், அவள் வேசிகளுக்கு தாய் என்பதாகக் காண்கிறோம். பாருங்கள்? தாயும் மகளும், நட்புடன் ஒன்று சேர்ந்துவிட்டனர். ஒரு காலத்தில் மகள் நாணயமாக வாழ்வதற்கென தாயை விட்டு ஓடி சென்றுவிட்டாள். ஏனெனில் அவளுடைய தாய் மிகவும் இழிவானவளாய், நடத்தை கெட்டவளாய் இருந்தாள். அதன் காரணமாக மகள் வீட்டை விட்டுச் சென்றாள். ஆனால் இப்பொழுது அவளுக்கு சிறிது வயதாகத் தொடங்கி அவளே அநேக பொல்லாத காரியங்களை செய்து கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது தாயைக் காண்கிறாள், அவள் தாய் செய்வது சரியென்று நினைக்கிறாள். எனவே அவள் தனக்குச் சொந்தமான ஒரு முறைமையை உருவாக்கிக் கொள்கிறாள். பாருங்கள்? முற்றிலுமாக! 69ஸ்தாபனங்களை ஒன்றிணைத்தல், வேதாகமம் வெளிப்படுத்தல் 17ல் கூறியுள்ளதை பிராடெஸ்டெண்டு மார்க்கம் அப்படியே நிறைவேற்றுகிறது. ஆட்டு குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்படாத அனைவரும்... அவளைச் சேர்ந்தவர்கள். ஒன்று அல்லது மற்றது. நீங்கள் மிருகத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது மிருகத்தின் சொரூபத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பீர்கள். வேதம் அப்படித்தான் கூறுகிறது. இயேசு இதை குறித்து தான் கூறினார், கம்யூனிஸத்தைக் குறித்தல்ல. மத்தேயு; 24ம் அதிகாரம், 21 முதல் 26 வசனங்களில் அவர், இந்த முறைமையின் ஆவி உண்மையானதை போன்று காணப்பட்டு, கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று முன்னுரைத்துள்ளார். உலகத் தோற்றத்துக்கு முன்பு ஆட்டு குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படையாகக் கூறினால், அவர்கள் அதில் சிக்கிக் கொண்டு, அவர் கூறினது போன்று, தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், பூமியில் ஒருவனும் தப்பியிருக்க முடியாது. நமக்கு இன்னும்.... 70இது 64ம்ஆண்டு, இல்லையா? இதில் பதினேழு ஆண்டுகள் எடுக்கப்பட்டு விட்டன என்று அவர்கள் கூறுகின்றனர் என்று நினைக்கிறேன், எனவே... நாட்காட்டியின் படி, நமக்கு அறுபத்துநான்கு ...... 1964, அப்படியானால் 2ம் நூற்றாண்டை அடைய இன்னும் எவ்வளவு) முப்பத்தாறு ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு இரண்டாயிரம் ஆண்டு கால முடிவின் போதும், உலகமானது அதன் உலக முறைமைகளின் முடிவை; மத சம்பந்தமான முறைமையின் முடிவை; எல்லா முறைமையின் முடிவையும் அடைந்துள்ளது. அப்பொழுது தேவன் இடைபட வேண்டியதாயிருந்தது. அவர் நோவாவின் காலத்தில் அப்படி செய்தார். முதல் இரண்டாயிரம் ஆண்டு கால முடிவின் தருணத்தில், முறைமையானது இன்று காலை நாம் தெரிந்து கொண்டுள்ள பொருளின் நிலையை அடைந்தது. அவர், மறுபடியும் தமது வார்த்தையை அனுப்பினார். அவர் தமது வார்த்தையை தீர்க்கதரிசியின் மூலம் அனுப்பினார். நோவாவின் காலத்தில், தீர்க்கதரிசி நோவாவின் மூலம். ஆனால் ஜனங்களோ அவர்களுடைய முறைமைகளுக்காக அதைப் புறக்கணித்தனர். இயேசுவின் காலத்தில் அவர் மறுபடியும் தமது வார்த்தையை அனுப்பினார் பரிப்பூரணமாக வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. ஜனங்கள் அதை புறக்கணித்தனர். இப்பொழுது 1964, இன்னும் முப்பத்தாறு ஆண்டுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாயிருக்கும். வார்த்தை அளிக்கப்பட்டு, ஸ்தாபன முறைமை அதைப் புறக்கணித்து விட்டது. 71நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம்? நாம் நினைப்பதைக் காட்டிலும் ஒருக்கால் தாமதமாயிருக்கக் கூடும்! பாருங்கள்? அது எந்த நேரத்திலும் நிகழக்கூடும். நான் போன ஞாயிறு இங்கிருந்த போது பேசினது போல, ஒருக்கால் அது ஏற்கனவே நிகழ்ந்து விட்டிருக்கக்கூடும். அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள நபர் வந்து விட்டிருந்தால், வேறு யாரும் உள்ளே வரமுடியாது. உலகம் அதன் வழக்கமான போக்கில் சென்று கொண்டிருக்கும். ஆனால், சபையோ முத்தரிக்கப்பட்டிருக்கும். நாம் தொடர்ந்து செல்லும் போது, இதைக் கவனியுங்கள். அவர்களுடைய பெயர்கள்... பெயரெழுதப்பட்டுள்ளவர்களை அவன் வஞ்சிக்கமாட்டான்.... 72அது என்ன? அது ஒருமுறைமையாயிருக்க வேண்டும். பாருங்கள்? சற்று யோசித்து பாருங்கள்: அந்த முறைமையிலுள்ள ஒரு ஸ்தாபனத்தில் நீங்கள் சேர்ந்திருந்தால், என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்? நீங்கள் வார்த்தையை விட்டு விலகி (பாருங்கள்?), ஒரு கொலைபாதக முறைமையில் முத்தரிக்கப்பட்டு விட்டீர்கள். அது எதை எடுத்து போடுகிறதென்றால்.... அது தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து கொண்டு, அதன் பெலனை மறுதலிக்கிறது. அது மிருகத்தின் முத்திரை. முற்றிலுமாக! பாருங்கள், 73அங்குள்ள மிருகம் அதை செய்தது. இங்கு அந்த சொரூபம் அதையே செய்கிறது. அந்த மிருகம் மிகவும் பெரிதாய் , நிசாயாவில் அந்த மகத்தான உலக சபையை நிறுவி, உலகம் முழுவதும் அந்த முறைமைக்கு வரும்படி செய்தது. அவர்கள் அதை மிகவும் பெரிதாக எண்ணினார்கள். ''அதனோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யாருமில்லை'' என்று வேதம் கூறுகிறது. அதன் பிறகு அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணி, பிராடெஸ்டெண்டுகள் அனைவரையும் சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் கொண்டு வந்து, ஒரு முறைமையை உண்டாக்கினர். அந்த முறை மையில் நீங்கள் சேர்ந்திராவிட்டால், கிறிஸ்தவர்களாகவே கருதப்படமாட்டீர்கள். அதுதான் மிருகத்தின் முத்திரைக்கும் தேவனுடைய முத்திரைக்கும் வித்தியாசம். தேவன் தமது வார்த்தையினால் முத்தரிக்கிறார். 74வார்த்தைதான் முத்திரை என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? (சபையார், 'ஆமென்' என்கின்றனர்- ஆசி) நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, அது உண்மையா?'' என்று கேட்கலாம். ஆம், ஐயா! இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர் ஓய்வு நாள் ஆசரிப்பு தான் முத்திரை என்று கூறுகின்றனர் என்று எனக்குத் தெரியும். உங்களிடம் நாணயமற்ற விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றல்ல, ஆனால்அது வேத ஆதாரமற்றது. எபேசியர்; 4:30 என்ன கூறுகிறதென்றால், ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாய் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்,'' பாருங்கள்? 75பரிசுத்த ஆவி என்பது வார்த்தை. தேவன் மூவர் அல்ல. அது ஒரே தேவன், மூன்று யுகங்களில், மூன்று பதவிகளில். தேவனாகிய பிதா, நியாயப்பிரமாணத்தின் காலத்தில்; தேவனாகிய குமாரன், கிருபையின் காலத்தில்; தேவனாகிய பரிசுத்த ஆவி (நீங்கள் அழைப்பது போன்று, அதே தேவன் பரிசுத்த ஆவியின்யுகத்தில். தேவனாகிய பிதா வார்த்தையாயிருந்தார்; தேவனாகிய குமாரன் வார்த்தையாயிருந்தார்,தேவனாகிய பரிசுத்த ஆவி வார்த்தையாயிருக்கிறார். பாருங்கள், அது மூன்று உத்தியோகங்கள். நீங்கள் வார்த்தையை ஏற்று கொண்ட பிறகு, பரிசுத்த ஆவி உங்களை முத்தரிக்கிறது. எனவே, ''நீங்கள் வார்த்தையினால் முத்தரிக்கப்படுகிறீர்கள்....'' 76நீங்கள், நான் வார்த்தையினால் முத்தரிக்கப்பட்டிருக்கிறேன், எனலாம். அப்படியானால், அது தன்னை அடையாளம் காண்பிக்கும். பாருங்கள்? அது நிரூபிக்கும் நீங்கள் ஒரு ஸ்தாபன முறைமையை சார்ந்திருந்து, ஒரே நேரத்தில் ஸ்தாபன முறைமையினாலும் வார்த்தையினாலும் முத்தரிக்கப்பட முடியாது. பாருங்கள்? ஏனெனில், அது ஒன்றுக்கொன்று முரணானது. அப்படி நீங்கள் செய்ய முடியாது. சரி. இப்பொழுது, நாம் காண்பது என்னவெனில், பெரிய இயந்திரம் இயங்கும் விதம்... பெரிய இயந்திரம் இயங்கும் விதம், அதாவது... இயந்திரத்துக்கு (மோட்டார் வாகனத்துக்கு), பிஸ்டன்கள், வால்வுகள், கார்புரேட்டர் போன்ற பாகங்கள் உள்ளன. அவை இயங்குவதற்காக உள்ளன. 77இப்பொழுது என் நினைவுக்கு வருவதை, சபைக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். பாருங்கள், அதுதான்... நாம் முடிவுக்கு மிக அருகாமையில் உள்ளதாக நம்புகிறேன். இப்பொழுது ஒன்றைக் கூறப்போகிறேன். பாருங்கள், பாருங்கள்? இயங்கும் விதம்.... இயந்திரங்களின் பல்வேறு பாகங்கள் இயங்கும் விதத்தை அறியாமலேயே அதை விவரிக்க அநேகர் முயல்கின்றனர். பாருங்கள்? ஒன்றே ஒன்று உங்களுக்கு... என்ன தெரியுமா? நீங்கள் இதை அறிய வேண்டும். இயங்கும் விதம் தெரிந்திருந்தால். மோசே இப்படி செய்திருந்தால்... யாராகிலும் “நோவாவே, பேழை தண்ணீரில் எப்படி மிதக்குகிறது என்று விவரிக்க முடியுமா?'' என்று கேட்டிருந்தால், அவனால் அப்படி செய்திருக்க முடியாது. உங்களுக்கு இயந்திரங்களின் பாகங்கள் இயங்கும் முறை தெரிந்திருக்க வேண்டியதில்லை. இயந்திர பாகங்கள் இயங்கி அதன் சக்தியினால் வண்டி ஓடுகிறது என்று தெரிந்தால் மாத்திரம் போதும். பாருங்கள், அந்த சக்தியினால் அது ஓடுகின்றது என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். யாராகிலும், இஸ்ரவேல் தேசத்துக்கு சென்று, ''மோசே, உன் வார்த்தையினால் மிருகங்களை உன்னால் எப்படி சிருஷ்டிக்க முடிகிறது?'' என்று அவனைக் கேட்டிருந்தால் அவன், ''அது என் வார்த்தை அல்ல, அது தேவனுடைய வார்த்தை. அப்படி செய்ய அவர் என்னிடம் கூறினார்'' என்று சொல்லியிருப்பான். பாருங்கள்? நான் தைரியமாக... 78“பூமியில் வண்டுகளே இல்லாத போது, அவைகளை எப்படி வரவழைத்தாய் என்பதை எனக்கு விவரித்து சொல்... அவ்வளவு அதிகமான வண்டுகளை.'' பாருங்கள்? மோசேயால் அதை விவரித்திருக்க முடியாது. அது அவசியமில்லை.... ''கீழ் காற்று சிவந்த சமுத்திரத்தின் மேல் மோதும்படி செய்து அதில் எவ்வாறு பிளவை உண்டாக்கி, எங்களை உலர்ந்த தரையின் வழியாக உன்னைப் பின்தொடர செய்தாய்? அதன் செய்முறை என்ன? என்ன... எந்த விஞ்ஞான ஆய்வின் மூலம் நீ அணுவை பிளந்து இப்படி செய்தாய் என்று எனக்குச் சொல்.'' பாருங்கள்? பாருங்கள், அவனுக்கு அது தெரியவில்லை. அவன்... நல்லது, அவனுக்கு செய்முறை தெரியவில்லை. ஆனால், அது செயல்பட்டதென்று அவன் அறிந்திருந்தான். அப்படித்தான் நானும், நான் எப்படி உயிரோடிருக்கிறேன் என்று உங்களுக்கு விளக்கம் தர முடியாது. நீங்கள் எப்படி உயிரோடிருக்கிறீர்கள் என்று எண்னால் கூற முடியாது. ஆனால், நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். உங்கள் இருதயத்தைக் குறித்தோ , உங்கள் ஆகாரம் எப்படி உள்ளே சென்று இரத்தமாக மாறுகிறது என்றோ என்னால் விவரிக்க முடியாது. அது ஆகாரத்திலுள்ள சத்தை கிரகித்து கொண்டு, குடல்களின் மூன்றாம் சுவர்களுக்கு அதை அனுப்பி விட்டு, அந்த சத்தை இரத்தமாக மாற்றி உங்கள் வழியாக அதை எப்படி அனுப்புகிறது என்று எனக்கு விளக்கம் தர முடியாது. ஆனால், அது அப்படி செய்கிறது. பாருங்கள், அது அப்படி செய்கிறது. என்னால் அதற்கு விளக்கம் தர இயலாது, அதன் செய்முறை எனக்குத் தெரியாது. அது அவ்வாறு செயல்படுகிறது! 79ஒருக்கால் மோசே அந்த செய்முறையை அறிந்திருக்க வழியுண்டு. ஆனால் மோசேயைத் தவிர வேறு யாரும் அதை அறியமுடியாது. அது கிரியை செய்கிறது என்று அவர்கள் அறிந்திருந்தனர், அது அவர்களுக்குத் திருப்தியளித்தது. அதேவிதமாக இன்றைக்கும் ஜனங்கள் ஏன் திருப்தியடையக் கூடாது? பாருங்கள்? எல்லோருமே மோசேயாக முடியாது. ஒரே ஒரு மோசே மாத்திரமே இருந்தான். அது, தேவனால் உண்டானது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது தேவனால் உண்டானது என்று அவர்கள் கண்டனர். அவர்கள் அதைப் பின்தொடர்ந்து நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து, அதேபோன்ற கிரியைகளை செய்பவர்களை (கோரா, தாத்தானை) எழுப்ப முயன்றனர். மாம்சப் பிரகாரமானபோலியான காரியங்களைச் செய்ய அவர்கள் மற்றவரை தெரிந்து கொண்ட போது, தேவன், ''உன்னைப் பிரித்துக்கொள். அந்த ஸ்தாபன முறைமையுடன் சேர்ந்துவிடாதே,'' பாருங்கள்? ''அதை விட்டு விலகு.'' அதை நான் விழுங்க போகிறேன்'' என்றார். அவர் பூமியைத் திறந்து அதை விழுங்கிப் போட்டார். பாருங்கள்? 80உங்களுக்குத் தெரியாது... உங்களுக்கு செய்முறை தெரிய வேண்டிய அவசியமில்லை. அதற்கு சக்தியளித்து, அது செயல்படுகிறது. அது, தத்ரூபமாயுள்ளது என்று மாத்திரம் அறிந்து கொள்ளுங்கள். இந்நாளில் நடக்கும் என்று வேதம் வாக்களித்துள்ள அந்த இலக்கை அது குறிவைத்து அடிக்கிறதா என்று காணுங்கள். பாருங்கள்? அது மறுபடியுமாக வார்த்தை. திரும்பவும் வார்த்தையே. 81இப்பொழுது அந்த பெரிய இயந்திரம் உருவாகி, அது இயங்கக் காத்திருக்கிறது. அதன் இயங்கும் முறை, ஏற்கனவே அதில் உள்ளது. அவர்கள் ஸ்தாபனம் என்னும் இயந்திர அமைப்பை உருவாக்கி, அது உலகத்தில் சமாதானத்தை கொண்டு வரப்போவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு ஐ.நா... போன்ற ஸ்தாபனம் உண்டு. நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. இது இணையும் நேரம்; அவர்கள் எதை கொண்டு வர ஒன்றாக இணைகின்றனர்? உலக சமாதானத்தை!அதற்காக அவர்கள் முன்பு, லீக் ஆஃப் நேஷன்ஸ் (League of Nations) என்னும் ஒன்றை நிறுவினர். அவர்கள் எப்பொழுதுமே அதை செய்து வருகின்றனர். அது கிரியை செய்யாது. ஐ.நா. என்பது ஒரு பெரிய ரப்பர் பலூன். அது ஒவ்வொரு நாட்டின் கொள்கை என்னும் காற்றினால் பறந்து சென்று கொண்டிருக்கிறது. அது, ஒரு நாள் வெடித்து சிதறிவிடும். அது கிரியை செய்யாது. அது போன்று சபைகளின் ஆலோசனை சங்கமும் கிரியை செய்யாது. அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஸ்தாபனம், அதுமுரணாக.... அவர்களுடைய முறைமை தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளது. அது கிரியை செய்யாது. ''இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' உங்களால் முடியாது. கிறிஸ்தவ சபையானது எப்படி.... அவர்கள் அப்படி செய்ய வேண்டும்.... 82பெந்தெகொஸ்தேகாரர், அசெம்பிளீஸ் ஆஃப் காட், பெந்தெகொஸ்தே ராஜ்யத்தின் மற்ற பெரிய சபைகள், முழு சுவிசேஷ ஜனங்கள்... அவர்கள் எப்படி தங்கள் சுவிசேஷ போதகங்களை, அவர்கள் ஆதாரமாக பெற்றுள்ள கொள்கைகளை கைவிட முடியும்? அவர்கள் அந்த ஸ்தாபனங்களிலிருந்து வெளிவந்து, அதைக் குற்றப்படுத்தும் சூழ்நிலையில் வளர்ந்து வந்தனர். இப்பொழுது அவர்கள், வேதாகமப் போதகங்களாகிய தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை, இயேசுகிறிஸ்து முதலானவைகளை மறுதலிக்கும் மனிதரோடு நடந்து செல்ல வேண்டும். இரண்டு பேர் ஒரு மனப்பட்டிருந்தாலொழிய, எப்படி ஒருமித்து நடந்து போக முடியும்? 83பார்த்தீர்களா? அந்த நேரத்தை தான் நாம் அடைந்துள்ளோம். ஒரு பெரிய இயந்திரம் உருவாக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் இயங்கும் முறை உள்ளது. அவர்கள் பெற வேண்டிய ஒன்றே ஒன்று, சாத்தான் தன் வல்லமையுடன் வந்து அதை இயக்கி, மிருகத்தின் முத்திரையை வலுக்கட்டாயமாக அளிப்பதே. அது வலுக்கட்டாயமாக அளிக்கப்படும் போது, இயக்கும் சக்தி கிரியை செய்கிறது. இயங்கும் முறை அங்குள்ளது. அவர்கள் ஏற்கனவே அதை பெற்றுள்ளனர். 84வேறொன்றையும் கூறவிரும்புகிறேன். இது இணையும் நேரம். சபைகள் இணைகின்றன, நாடுகள் இணைகின்றன. இதுதேவனும் அவருடைய மணவாட்டியும் இணையும் நேரமும் கூட. இதை நான் பயபக்தியோடும் மரியாதையோடும் கூறுகிறேன். கிறிஸ்துவின் மணவாட்டி அழைக்கப்பட்டாள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் தேவனுடைய ராஜ்யத்தில் முத்தரிக்கப் பட்டாள் என்று நான் விசுவாசிக்கிறேன். எல்லாம் ஒன்று சேர்க்கப் பட்டு இயங்க ஆயத்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் பூமியிலிருந்து அவளை மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுதலில் கொண்டு செல்லவிருக்கும் இயக்கும் சக்திக்காக காத்திருக்கின்றனர். அதை நான் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா அவர் எப்படி அதை செய்ய போகிறாரென்று நமக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை செய்வார். அவரே இயக்கும் சக்தி. நாம் அந்த இயந்திரத்தின் (அவருடைய சரீரத்தின் பாகங்களாக, அவருடைய சாயலில் உருவாக்கப்பட்டு, அவருடைய கிரியைகளில் தம்மை நம்முடன் இணைத்துக் கொள்வதைக் காண்கிறோம். கலியாண விருந்துக்கு முன்பு அவர் தமது அன்பின் வரங்களை நமக்கு அருளுகிறார். நாம் கலியாண விருந்துக்காக விழிப்புடன் காத்திருக்கிறோம். அவர்களுடைய சபைகள் பெரிய சபையாக இணைந்து கொண்டிருக்கின்றன... 85மணவாட்டி சபையின் இயக்கும் சக்தி பரிசுத்த ஆவியினால் மறுபடியும் நிறையப்படுவதே. சரீரத்துடன் இணைய தலைக்கல் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், நாம் பரிசுத்த ஆவியை அளவுடன் பெற்று கிரியை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தலையும் சரீரமும் ஒன்றாக இணையும் போது, பரிசுத்த ஆவியின் முழு வல்லமை அவளை உயிருடன் எழுப்பி... மரித்தவர்களும் கூட, நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், அவருடைய பரிசுத்த அலங்காரத்துடன் உயிரோடெழுந்து வானங்களின் வழியாக பறந்து செல்வார்கள். இயக்கும் சக்தி பரிசுத்த ஆவியே. 86இப்பொழுது, அவர்கள் கட்டியிருக்கிற இந்த பெரிய ஆதிக்கத்தின் இயக்கும் சக்தி... இந்த பெரிய இயந்திரம் என்றாவது ஒரு நாள், உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றிணைவதன் மூலம் கிரியை செய்யும். அது வலுக்கட்டாயப்படுத்தி.... ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள்... நீங்கள், ''அது நடக்கும் போது...'' எனலாம். அப்பொழுது, அது உங்களுக்கு மிகவும் காலதாமதமாயிருக்கும். நீங்கள் ஏற்கனவே அதில் இருக்கிறீர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், விருப்பம் இல்லாமல் போனாலும், நீங்கள் ஏற்கனவே அதில் இருக்கிறீர்கள். பாருங்கள்? பாருங்கள், நீங்கள் ஏற்கனவே அந்த ஆவியை உங்கள் மேல் பெற்றிருக்கிறீர்கள்... ஆவியின் காற்று கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளிலிருந்து அடித்து ஜனங்களை வெளியே வரும்படி கெஞ்சி, அவர்களுக்கு காண்பிக்கும் இந்த நாளில். அதன் காரணமாகத்தான் அந்த முறைமைக்கு விரோதமாக நான் இருக்கிறேன். அதில் அந்தகாரம் உள்ளதை நான் கண்டேன். நான் சென்ற ஞாயிறு உங்களிடம் கூறினது போன்று: அந்த பெண்கள் அந்த விதமாக முகத்தில் வர்ணம் தீட்டியுள்ளதை நான் கண்டபோது, ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறதென்று நான் அறிந்து கொண்டேன். நான் ஏன் அந்த விதமான வர்ணம் தீட்டுதலுக்கு எப்பொழுதும் விரோதமாயிருந்தேன்? எனக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை, இப்பொழுது எனக்குத் தெரியும். நான் ஏன் ஸ்தாபிக்கப் பட்டமார்க்கத்துக்கு எப்பொழுதும் விரோதமாய் இருந்து வந்தேன்... காரணம் இப்பொழுது எனக்குத் தெரிகிறது. அது மிருகத்தின் முத்திரை. பாருங்கள்? இரண்டு வாரங்கள் முன்புவரைக்கும் நான் அவ்வாறு கூறவில்லை. பாருங்கள்? சபை அரசியலுக்குப்பிறகு : வார்த்தையானது உண்மையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, என்ன நடக்கிறது?இப்பொழுது பாருங்கள், அது முடிவில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய நிலையை அடைந்துள்ளது. அவர்களுடைய அடுத்த வேலை என்னவெனில்... 87சபை அதை புறக்கணித்தவுடனே (சபை வார்த்தையைப் புறக்கணித்தவுடனே) யூதர்கள் அடுத்தபடியாக என்ன செய்தனர்? அவர்கள் ''அது பொல்லாத ஆவி'' என்று கூறி அதனுடன் எவ்வித சம்பந்தமும் கொள்ள மறுத்தனர். அது அவர்களுடைய இருதயத்தின் சிந்தனைகளை அறிந்த போது, ''அது பொல்லாதது'' என்றனர். இருப்பினும், அது வார்த்தையாயிருந்தது. அவர் செய்த கிரியைகள், அவரைக் குறித்து சாட்சி கொடுத்து, அவர் யாரென்பதை உறுதிப்படுத்தினது. அதனுடன் அவர்கள் எவ்வித சம்பந்தமும் கொள்ள மறுத்தனர். அடுத்தபடியாக அரசாங்கம் வருகிறது. இது ஒரு சபை அரசாங்கம், ஏனெனில் எல்லா நாடுகளும் இதில் ஈடுபட்டுள்ளன. அஞ்ஞான தேசம் மத சம்பந்தமான தேசத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தினது. இப்பொழுது அது ....எல்லாமே மத சம்பந்தமானது. எனவே அது உலக மதத்துக்கு வரவேண்டும். மற்றும்..... ஓ, என்னே ஒரு குருடனும் கூட இதைக் காண முடியும். குருடன் இதைக் காணும் போது என்ன செய்வான்? இதைக் காணும் போது அவன் தன் குருட்டுத்தனத்திலிருந்து வெளி வருவான். 88அங்கு கவனியுங்கள், இந்த உலக ஆலோசனை சங்கம் ஒன்றிணைந்தவுடனே... கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை அவர்கள்என்ன செய்வார்கள்? அவர்கள் நிச்சயமாக அதனுடன் எவ்வித சம்பந்தமும் கொள்ள மறுப்பார்கள். எனவே, செய்ய வேண்டிய காரியம் அப்பொழுது ஒன்றே ஒன்று இருக்கும். அப்பொழுது என்ன செய்தார்களோ அதையே இப்பொழுதும் செய்வார்கள். அவர்கள் அதை சிலுவையிலறைவார்கள். நிச்சயமாக! அதை மூடிப்போடுவார்கள், அது இனிமேல் இருக்காது, அது செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. மத சக்தியும், தேச சக்தியும், அவர்களை செய்ய சம்மதிக்காது. இப்பொழுது இங்கு நடந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஊழியம் போன்றன மூடப்பட்டுவிடும். தலைமை அலுவலகத்திலிருந்து, சபையின் தலைவனிடத்திலிருந்து அனுமதி பெறாமல் நீங்கள் அதைச் செய்யவே முடியாது. பாருங்கள்? மிருகத்திற்கு ஒரு சொரூபம். சரி, நாம் இங்கிருக்கிறோம். அவ்வளவுதான்! நாம் இங்கு அடைந்திருக்கிறோம், அது உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பணி சிலுவையிலறைவதே. 89இப்பொழுது அப்படியே. அவர்களைச் சேராத அனைவரும் வெளியே தள்ளப்பட்டு கதவு அடைக்கப்பட்டு, பிரசங்கம் செய்யப்பட அனுமதிக்கப்படமாட்டார்கள். பாருங்கள்? அது உறுதிப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தத்தின் வார்த்தையை மறுபடியும் சிலுவையிலறைவதாகும். அது அதை நிறுத்தும் நீங்கள் இனி ஒருக்காலும் அனுமதிக்கப்படமாட்டீர்கள். தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்களை இனிமேல் நடத்தக் கூடாது. வியாதியஸ்தருக்கு இனிமேல் ஜெபிக்கக் கூடாது. ''ஆம், ஐயா நீங்கள் அப்படி செய்ய முடியாது. என்ன நேர்ந்தாலும்... ''இந்த மற்ற...'' இல்லை ஐயா நீங்கள் சபைகளின் ஆலோசனை சங்கம் வழியாக வர வேண்டும். இல்லையென்றால், நீங்கள் அதைப் பெறவே மாட்டீர்கள். நான், ஏன் ஸ்தாபன மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளேன் என்பதை இப்பொழுது உங்களால் காண முடியும், ஏனெனில் அது மிருகத்தின் முத்திரை. ரோமாபுரிதான் அதற்குத் தலை , அது முதலாம் ஸ்தாபனம். அது முற்றிலும் உண்மை. குமாரத்திகளை - அதன் சொரூபத்தை - சேர்ந்து கொள்வதன் மூலம் எல்லோரும் அந்த முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி செய்கிறது. தாயும் அதைத்தான் செய்தாள். ரோம் மார்க்கம் எங்கு முதலில் ஸ்தாபிக்கப்பட்டது? உலகிலேயே முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கம் எது? ரோமன் கத்தோலிக்க மார்க்கம்! அது உண்மையல்ல என்னும் கருத்தை யாராகிலும் கொண்டிருந்தால், அதை நான் கேட்க விரும்புகிறேன். அப்படி யாரும் இங்கில்லை. முதலாம் ஸ்தாபனம், முதலாம் சபை, ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆம், ஐயா. அதைத்தான் அவர்கள் செய்தனர். 90லூத்தரின் மரணத்திற்கு பிறகு அவர்கள் என்ன செய்தனர்? ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் அவர்கள் செய்த அதே காரியத்தை. வெஸ்லிக்குப் பிறகு அவர்கள் என்ன செய்தனர்? எழும்பின ஒவ்வொரு அசைவுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்தனர்? அதே காரியத்தை. வேசிக்கு குமாரத்திகளை உண்டாக்கிக் கொண்டனர். நிச்சயமாக, பரிபூரணமாக... அதேவிதமாக, இங்கு நாம் என்ன காண்கிறோம் என்றால்.... 91ஒரு வேதவாக்கியத்தை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். அதை கூறாமல் விட்டு விடுகிறேன். ஆனால்... கவனியுங்கள், அவர்கள்... சபை ஸ்தாபனங்கள் ஒன்றாக அதே முறைமையை இன்று கொண்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான ஒன்றே ஒன்று இயக்கும் சக்தியே - அதை சக்தியோடு இயக்க ஏதாவதொன்று. அது உடனடியாக பலப்பரீட்சைக்கு வந்து கொண்டிருக்கிறது. கத்தோலிக்க சபையும் பிராடெஸ்டெண்டு சபைகளும் நண்பர்களாகிவிடுவர். நான் உங்களிடம் கூறியிருக்கிறேன், அவர்கள் எல்லோரும் .... அன்று முதல்... அவர்கள் ஒன்றாக இணைந்து விடுவார்கள் என்று கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். அவர்கள் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். பிராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்கர்களாக மாறமாட்டார்கள், ஆனால் அவர்கள் சகோதரத் துவத்தில் ஈடுபட்டிருப்பார்கள்; மிருகத்தின் முத்திரை; மிருகத்திற்கு ஒப்பானது. 92தாயாகிய ஏவாள் எவ்வாறு முழு உலகத்தையும் கறைபடுத்தி சரீரப்பிரகாரமான மரணத்தைக் கொண்டு வந்தாளோ; தாயாகியஏவாள்... கவனியுங்கள், தாயாகிய ஏவாள் மனித குலம் முழுவதையும் கறைபடுத்தி சரீரமரணம் வர காரணமாயிருந்தாள். எப்படி? வார்த்தையைப் புறக்கணித்து, ஏறக்குறைய அதற்கு ஒப்பான ஒன்றை ஏற்றுக் கொண்டதன் மூலம். அவள் உண்மையான வார்த்தையை விட்டு விலகின தன் காரணமாக, சரீர மரணம் வர காரணமாயிருந்தாள். அவள் சிறிது தவிர உண்மையான வார்த்தை அனைத்தையும் விசுவாசித்தாள். முழு தேவனுடைய வார்த்தையுடன் ஒரே சிறு வேறுபாடு, எல்லா மன வேதனைகளுக்கும், எல்லா மரணத்துக்கும், பூமியில் காணப்படும் எல்லா பாடுகளுக்கும் காரணமாயிருந்தது. ஏவாள் அதைச் செய்தாள் - மரணத்துக்கு தாய். இப்பொழுது நாம் எங்கு வருகிறோம் என்று காண முடிகிறதா? மரணத்துக்கு தாய் கவனியுங்கள், அவள் வார்த்தையை அவ்விசுவாசித்தாள். அவள், ''தேவன் சொன்னார் என்றாள். சாத்தான், “அது உண்மைதான்'' என்றான். “தேவன் சொன்னார்,” ''அது உண்மைதான்“ ''தேவன் சொன்னார்,'' ''அது உண்மைதான்'' “தேவன் சொன்னார், ''ஆம், அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் பார், அது எல்லாம் உண்மையல்ல. பார், உன் கண்கள் திறக்கப்படும், அப்பொழுது நீ... தேவன் ஒன்றை சொல்லியிருப்பாரானால் அதுதான் அதன் முடிவு. வார்த்தை! (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய வேதாகமத்தை தட்டிக் கொடுக்கின்றார் - ஆசி) பாருங்கள், வார்த்தையை சிறிது தவறாக அர்த்தம் கொண்டதன் நிமித்தம் அது தொடங்கினது. அதே காரியம். அதே விதமாக அது முடிவு பெறும். 93கவனியுங்கள், தகப்பனும், தாயும் சேர்வதனால் குமாரத்தி தோன்றுகிறாள். இதோ அதிர்ச்சியை விளைவிக்கும் ஒன்று. ஆனால் மரணம் (சரீரப் பிரகாரமானது), சரீர மரணம், தாயாகிய ஏவாளும் சாத்தானும் ஒன்றாக சேர்ந்து தேவனுடைய வார்த்தையை அவ்விசுவாசத்தினால் விளைந்த ஒன்று. அவர்கள் ஒன்றாக இணைந்து மரணத்தை வருவித்தனர். அவள்.... அந்த... மரணம் என்பது சாத்தானும் ஏவாளும் ஒன்று சேர்ந்ததனால் விளைந்தது. ஏவாள் வார்த்தையை கொண்டிருந்தாள்! சாத்தான் வார்த்தைக்கு விரோதமானவன். கவனியுங்கள்! சாத்தான் அதன் தொண்ணூற்றொன்பது, நூறில் தொண்ணூற்றொன்பது சதவிகிதத்தை உண்மையென்று ஒப்பு கொண்டான். அது மிகவும் நெருங்கியிருக்கும் என்று வேதம் கூறுகிறது. ''கடைசி நாட்களில்... கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அது எப்படி உள்ளே நுழைகிறதென்று பாருங்கள். அது எக்காலத்தும் எப்படி இருந்து வந்துள்ளது? அது எப்படி வெளியே செல்கிறது? அதேவிதமாக. தேவனுடைய முழு வார்த்தையுடன் அவ்விசுவாசத்தை இணைப்பது. உங்களுக்கு விளங்குகிறதா? அதுதான் மரணத்தை வருவித்தது - வார்த்தையுடன் அவ்விசுவாசத்தை இணைத்தது. அவ்விசுவாசம்; மிகவும் சிறியபாகம், சிறுபாகம், மிக சிறியபாகம், ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பாகம். ஆனால் அதை நூறு சதவிகிதம் விசுவாசிக்க வேண்டும். அவ்வளவு தான். 94கவனியுங்கள், தேவனுடையகுமாரத்தி, சபை, மணவாட்டி, தேவனும் அவருடைய வார்த்தையும் இணைந்ததனால் உண்டானவள். பரிசுத்த ஆவி மாம்ச சரீரத்துடன் இணைந்து தேவனுடைய குமாரனை தோன்ற செய்தது, தேவனுடைய நீதியினால் தோன்றியவர். கடைசி நாளில், சோதோமின் நாட்களில் நடந்தது போல, மணவாட்டி மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் இணைக்கப்படுவாள் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவி அவர்களை தேவனுக்குள் முத்தரித்து, அவ்விசுவாசத்தை புறம்பாக்கி வெளியே முத்தரிக்கிறது. 95நான் கூறினது போல்,பீத்தோவனின் ஜீவன் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் பீத்தோவனைப் போல் வாழ்வீர்கள். ஹிட்லரின் ஜீவன் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் ஹிட்லரைப் போல் வாழ்வீர்கள். அதுபோன்று கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் கிறிஸ்துவைப் போல் வாழ்ந்து, கிறிஸ்து செய்த கிரியைகளைச் செய்வீர்கள். அது... இன்று கிறிஸ்து வாழ்வாரானால், இன்று அவர் என்ன செய்வார் என்று வார்த்தை கூறியுள்ளதோ, அதை அப்படியே செய்வார். அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வார்த்தை கூறியுள்ள போது, இந்த குருடான மத சம்பந்தமான உலகம், அவர்கள் வாழும் காலத்தை ஏன் காண்பதில்லை? பாருங்கள்? 96சாத்தானின் மத பேதத்தை வார்த்தையில் நுழைக்க முயன்ற தன் மூலம் ஏவாள் சரீர மரணம் உண்டாக காரணமாயிருந்தாள். ரோமாபுரியிலிருந்த நிசாயாவிலும் சபைக்கு அதுதான் சம்பவித்தது, வார்த்தைக்கு பதிலாக கோட்பாடுகளை ஏற்று கொண்டதன் மூலம். மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் இவர்களுக்கும் அது தான் சம்பவித்தது. ஒவ்வொரு காலத்திலும் வெளிச்சம் தோன்றின போது, அவர்கள் அதை புறக்கணித்தனர். ஆகையால் தான் வெஸ்லி எழும்பின போது லூத்தரன்கள் மரித்தனர். அது வேறொரு காலம். வார்த்தை தோன்றினது. அவர்கள் அதை ஏற்று கொள்ள வேண்டும், அல்லது மரிக்க வேண்டும். ஆகையால் தான் பெந்தெகொஸ்தேகாரர் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கின்றனர், ஏனெனில் வேறொரு காலம் இங்குள்ளது. வார்த்தையானது வெளிப்பட்டுவிட்டது, கழுகின் காலம். வார்த்தை திரும்பி வருவதற்கு இது நேரம், பிதாக்களுடைய விசுவாசத்துக்கு பிள்ளைகளை திருப்ப. சபைகள் ஒன்றாக இணைந்து இதை புறக்கணிப்பதால், அவர்களுக்கு ஆவிக்குரிய மரணமே தவிர வேறொன்றுமில்லை. அது எப்பொழுதும்.... 97தேவனுடைய சரீரம் அவருடைய மணவாட்டியாக ஒன்றிணைந்துள்ளது. அவளும் கிறிஸ்துவும் ஒன்றாக, பரிசுத்த ஆவி இயேசுவின் மாம்சத்தில் கிரியை செய்தது போல, இப்பொழுது சபையின் மாம்சத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறது. ஏனெனில், அது அவருடைய சரீரத்தின் ஒரு பாகம். இருவர் அல்ல, ஒருவரே. அவர்கள் ஒருவரே. கணவனும் மனைவியும் இனி இருவராயிராமல் ஒருவரே. கிறிஸ்துவும் அவருடைய சரீரமும் ஒன்றே. கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி இப்பொழுது அவருடைய சரீரமாகிய மணவாட்டிக்குள் இருந்து, அவர்களை எல்லாவார்த்தையுடனும் இணைக்கிறது. தேவன் அங்கு வாசம் செய்து, தம்மை வெளிப்படுத்துகிறார். 98அந்தக் கிறிஸ்துவும் வந்து, “ஓ நான் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறேன், நான் சுவிஷேத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், இக்காரியங்களில் நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன், ஆனால் ஒன்று தெரியுமா...'' என்பான். புரிகின்றதா? ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று உங்களுக்குத் தெரியுமா, அப்படி எதுவும் இல்லை.'' பாருங்கள்? பார்த்தீர்களா? ”ஓ, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நான் நம்புவதில்லை.'' ஆனால், நீங்கள் அவ்வகையில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனுடன் இணங்காத ஒரு வேத பண்டிதனை நான் காண விரும்புகிறேன். பாருங்கள்? அதை அவ்வகையில் தான் பெற வேண்டும். நீங்கள், “ஞானஸ்நானம் ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை எனலாம். அப்படியானால் அது ஏன் எழுதப்பட்டுள்ளது? அது ஏன், பவுலுக்கு வித்தியாசத்தையும் உண்டாக்கினது? அது, ஏன் மற்றவர்களுக்கு வித்தியாசத்தை உண்டாக்கினது? நீங்கள் ஒன்று ஞானஸ்நானம் பெறுகிறீர்கள்.... வேதம், ''ஒரு நாமத்தை கொண்டவனாய் நீ உயிர் வாழ்ந்த போதிலும் செத்தவனாயிருக்கிறாய்“ என்றுரைக்கிறது. ஏனெனில், வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.... நீங்கள் அந்த நாமத்தில் பிரசங்கம் பண்ணுகிறீர்கள், அந்த நாமத்தில் ஜெபிக்கிறீர்கள், எல்லாவற்றையும் செய்கிறீர்கள், ஆனால் ஞானஸ்நானம் பெற குளத்துக்கு வரும் போது மாத்திரம் அந்த நாமத்தை புறக்கணிப்பது ஏன்? (உ,ஊ) அன்றொரு நாள் ஒரு மனிதனிடம் இவ்வாறு கூறினேன். நான், “ஒரு மனிதன்...'' என்றேன். அவர், ''அதனால், ஒரு வித்தியாசமும் இல்லை“ என்றார். 99நான், “ஒரு மனிதன் உம்மிடம் வந்து, அவன் சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிப் புஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரம் என்னும் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக கூறினான் என்று வைத்து கொள்வோம். அது சரியான ஞானஸ்நானம் என்று ஒப்புக் கொள்வீரா?'' என்று கேட்டேன். அவர், “இல்லை , ஐயா” என்றார். நான், அவனுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுப்பீர்களா?'' என்று கேட்டேன். அவர், “ஆம்” என்றார். நான், “அவனுக்கு எப்படி ஞானஸ்நானம் கொடுப்பீர்கள்?'' என்று கேட்டேன். அவர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் என்றார். நான், ''சரி. அவர் செய்ததையே நீங்கள்... உங்களை அந்த இடத்தில்... அவைகளை நீங்கள் நாமங்கள் என்றழைத்தால், அவன் செய்ததையே நீங்களும் செய்தீர்கள். அவன் கூறின ''சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம் எப்படி பட்டப் பெயரோ, அப்படியே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியும் பட்டப்பெயரே'' என்றேன். பாருங்கள்? அவர், ''இயேசு அந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். நான், அதைத் தான் அவர் செய்யச் சொன்னார். ஆனால், அது என்ன... இல்லை.... அவர், இந்த வார்த்தைகளை ஞானஸ்நானத்தின் போது கூறுங்கள்'' என்று சொல்லவில்லை. அவர், அந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றுதான் கூறினார் (ஓ, என்னே!). பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பட்டப்பெயர்கள்... பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் அது என்னவென்று பேதுரு கூறினான்? அது, என்னவென்று மற்றவர் கூறினர்? அது என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றேன். இப்பொழுது அவர், 30,000 சுதேசிகளுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்க போகிறார், பாருங்கள்? சரி! அது தான் சரியானது. பவுல், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது...'' என்றான். 100இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாதவர்களிடம் பவுல் கூறினான், அவர்கள் பரிசுத்த ஆவியைப்பெற வேண்டுமானால், மறுபடியும் வந்து அவர்கள் கூச்சலிட்டு, தேவனைத் துதித்து, பெரிய காரியங்களைச் செய்து வந்த போதிலும், யோவான் ஸ்நானன், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்த போதிலும், அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. அவர்கள் திரும்பி வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று. கலா.1:8ல் பவுல், ''நான் உங்களுக்கு பிரசங்கித்ததை அல்லாமல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொன்றை பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்றான். ஆம், ஐயா. எனவே, நாம் அந்த வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வார்த்தையிலும். பாருங்கள்? 101கவனியுங்கள்... ஓ, எந்த பிழையும் இருக்க வேண்டாம். முற்றிலும் நிச்சயமுடையவர்களாயிருங்கள். உங்கள் மனதில் ஏதாகிலும் சந்தேகம் இருந்தால், அதை இப்பொழுதே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதுவரைக்கும் காத்திருக்க வேண்டாம், அப்பொழுது காலதாமதமாயிருக்கும். நீங்கள் முத்திரையை ஆழமாகத் தரிக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். அப்பொழுது நீங்கள் ஒருக்காலும் அதை காணமாட்டீர்கள். நீங்கள் குருடாகிவிடுவீர்கள். அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்துவதற்கென இஸ்ரவேலரைக் குருடாக்கினார். இப்பொழுது அவர் புறஜாதிகளுக்கு அதையே செய்து கொண்டிருக்கிறார். இதோ, அன்று அவர்கள் செய்தது போல, நீங்கள் இன்று அதற்குள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். 102கவனியுங்கள், ஏவாள் புறக்கணித்து தன் உரிமைகளை பறி கொடுத்தாள். தேவன் வார்த்தையை உறுதிப்படுத்தினதை (அவர் செய்ததன் மூலம்) அவள் கண்ட பிறகும், அவள் அதை புறக்கணித்து தன் உரிமையை பறிகொடுத்தாள். அவர்கள் அதையே ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் செய்தனர். இப்பொழுது அதையே அவர்கள் சபைகளின் ஆலோசனை சங்கத்தில் செய்கின்றனர். சகோதரரே, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் அதே காரியம் தான். இஸ்ரவேலர் அதை தான் செய்தனர். பிலாத்து அதைத் தான் செய்தான். ஏவாள் தொடங்கி இந்நாள் வரைக்கும் எப்பொழுதும் அதுதான் நடந்து வருகிறது. அதே காரியம்! அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை புறக்கணித்து அதற்கு பதிலாக ஒரு கோட்பாட்டை ஏற்று கொள்கின்றனர். அது மரணத்தை உருவாக்குகிறது, ஆவிக்குரிய மரணத்தை. மரித்தவர்கள்! வார்த்தை இப்பொழுதும் மரித்தோரிடத்தில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக! ஆனால், ஆயிரம் வருட அரசாட்சியின் போது அப்படி இருக்காது. பாருங்கள், அவர்களுக்கு ஏற்கனவே, அது பிரசங்கிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் அதை பெற்று கொண்டிருக்கக்கூடும். பாருங்கள்? 103காயீனின் குமாரர் தேவனுடைய வார்த்தையை அவ்விசுவாசித்ததினால் தோன்றினவர்கள்.... காயீனின் குமாரரர் நோவாவின் செய்தியை பரியாசம் செய்தனர். அதை கவனித்தீர்களா? தேவனுடைய வார்த்தையுடன் அவன் நியாயத்தீர்ப்பை முன்னறிவித்தான். காலம் முடிவடையப் போகிறது என்பதற்கு அவன் தெளிவான அடையாளங்களை (உறுதிப்படுத்தப்பட்ட அடையாளங்களை கொண்டிருந்தான். காயீனின் குமாரர் அதை பரியாசம் செய்தனர். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர்.... இயேசுவின் நாளிலும் அவர்கள் அதையே செய்தனர். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அவர்கள் நிந்தித்து அதை பரியாசம் செய்கின்றனர். அவர், ''கடைசி நாட்களில் பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்றுரைத்துள்ளார். அவர்கள், ''பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு, காலத்தினால் எந்த வித்தியாசமும் ஏற்படாமல் இருந்த விதமாகவே இருக்கிறதே என்பார்கள்“ என்றார். பார்த்தீர்களா? அதேவிதமாக பிசாசின் குமாரர் இயேசு கிறிஸ்துவின் காலத்தில், தங்கள் மதசம்பந்தமான முறைமைகளின் மூலம், வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை பரியாசம் செய்தனர். பாருங்கள்! யூத மக்களின் மத சம்பந்தமான முறைமைகள்.... (சகோ. பிரன்ஹாம் பிரசங்கபீடத்தை அநேக முறைகள் தட்டி, ''சகோதரி ரோஸ்'' என்று கூறுகிறார் ஆசி)... யூத மக்கள் இதை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுடைய முறைமையோ வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையை (அவர்கள் விசுவாசிப்பதாக உரிமை கோரினதை) அவர்கள் புறக்கணித்து அதை பரியாசம் செய்ய காரணமாயிருந்தது. ஒரு வார்த்தையும், அப்பொழுது தவறாயிருக்கவில்லை. இருப்பினும் அவர்கள் அதையே செய்தனர். 104இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். அவர்கள் உருவாக்கியுள்ள பெரிய இயந்திரமாகிய மத சம்பந்தமான முறைமை முற்றிலுமாக... கடைசி காலத்தின் வாக்குத்தத்தங்களை புறக்கணித்து விட்டது. கடைசிகால செய்தி, கடைசி கால அடை யாளம், கடைசி காலத்தில் இருக்க வேண்டிய எல்லாமே, தேவன் முன்னுரைத்தபடியே, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறியிருந்த போதிலும் - இது ஒலி நாடாவில் உள்ளது. அவர்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும், என்ன செய்தாலும், அந்த செய்தியை அவர்களால் நிறுத்த முடியாது! பாருங்கள்? அது என்னவானாலும் சென்று கொண்டிருக்கும் பாருங்கள்? அது ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியே சென்றுவிட்டது. அது சென்றுவிட்டது. பாருங்கள்? அவர்களால் ஒரு போதும்... அது இப்பொழுது, முடிவு காலத்தின் வார்த்தையாக, முற்றிலும் உறுதிப்படுத்தப் பட்டு, மறுபடியும், மறுபடியும், மறுபடியும் அடையாளங் களாலும், இயங்கும் முறையினாலும், இயக்கும் சக்தியினாலும், விஞ்ஞானத்தினாலும், சபையாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே நேரம் என்பதை தேவனே வார்த்தையினாலும் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் நிரூபித்திருக்கிறார். 105தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செய்தி உங்கள் மத்தியில் இந்த மணி நேரத்துக்கான அடையாளங்களாலும் அற்புதங்களாலும் உறுதிப்படுகிறது. இயேசுகிறிஸ்து மரிக்கவில்லை, அவர் எப்பொழுதும் போல இப்பொழுதும் உயிருள்ளவராய் அனுப்பிக் கொண்டிருக்கும் செய்தி.... அது மல்கியா;4ம் அதிகாரத்தையும், கடைசி நாட்களுக்கென இயேசு உரைத்துள்ள மற்ற வேத வாக்கியங்களையும் முற்றிலும் நிறைவேற்றுவதாய் அமைந்துள்ளது. அது விஞ்ஞான ரீதியாகவும் உலகத்தினாலும் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் வட்ட வடிவமான ஒளியின் புகைப்படங்களை வெளியிட்டன. அது இங்கு முன்னுரைக்கப்பட்டது. தேவ தூதர்கள் இறங்கி வந்தனர். (அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது) எல்லா இடங்களிலும், உலகம் பூராவும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சிலுவையிலறையப்படுதல். அது நமக்கு நேரிடும். இயேசு, ''நான் என்ன சொல்லுவேன்? பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ?'' என்றார். இல்லை! ''உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.'' அதைத்தான் சபையும் தன் இருதயத்திலிருந்து சொல்கிறது. ''நான் ஏதாவதொன்றுடன் சேர்ந்து கொள்கிறேன்...'' என்றா? இல்லை, கர்த்தாவே (இல்லை!). ''உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல செய்யப்படுவதாக.'' 106கவனியுங்கள், அந்த காலத்துகென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை உறுதிப்பட்ட பிறகு, அவர்கள் அதைப் புறக்கணித்தனர். இன்றைக்கும் அவர்கள் அப்படியே புறக்கணிக்கின்றனர். இப்பொழுது நான் முடிக்கும் தருணத்தில் வந்திருக்கிறேன். அன்று அவர் வந்து, தம்மை வார்த்தையாக தெளிவாக அடையாளம் காண்பித்து, அவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஸ்தாபன முறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நிலையை அவர்கள் அடைந்தது போல, இன்றைக்கும் அந்த நிலை வந்துவிட்டது - வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஸ்தாபன முறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நிலை - அவர்கள் ஸ்தாபன முறைமையை ஏற்றுக்கொண்டு விட்டனர். அது என்ன செய்கிறது? (முடிக்கும் தருணத்தில்) அவர் உலகத்தின் கரங்களில் இருக்கிறார். உண்மை! 107இப்பொழுது, என் பொருள். அதை கூறி முடிக்க இன்னும் நீண்ட நேரம் செல்லும். நான் இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறேன். பாருங்கள்? (ஊ,ஊ) (எழுந்து போய்விடாதீர்கள், நான் கேலியாக கூறினேன்). பாருங்கள்? இதோ என் பொருள். நமக்கு தெரியும் அது... அது பின்புறக் காட்சியை அமைப்பது. இப்பொழுது அவை எல்லாவற்றையும் நாம் ஒன்றாக இங்கு அமைத்துவிட்டோம். இப்பொழுது நாம் வீட்டை அமைத்து, அது எப்படியுள்ளதென்று காண்போம். அதை நாம் கண்ணாடிக்குள் வைப்போம். இயேசு ஜனங்களின் கரங்களில் இருக்கிறார். அவர், சபையின் கரங்களில் இருக்கிறார். அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை என்னப்படும் இயேசுவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ''கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை என்று பொருள். இந்த இயேசுவை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? பிலாத்து, ''அதை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான். ''என் தீர்மானம் என்ன? கிறிஸ்து என்னப்படும் இந்த இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?'' உலகம் என்ன கூச்சலிட்டது? சபை என்ன கூச்சலிட்டது? ''அதை சிலுவையிலறையும்! அதை நிறுத்தும் அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்“ என்று. 108உங்களை ஒன்று கேட்க போகிறேன். ஆஸ்வால்டின் கரங்களிலுள்ள குற்றத்தை இன்று காலை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா - ஜனாதிபதியைக் கொன்றவன். அவன் அந்த கொலையை செய்தான் என்று நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு அளிக்கப்படும் தீர்ப்பு என்னவென்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அவனுக்கு ஏதாவது இரக்கம் காண்பிக்கப்படும் என்று நினைக்கிறீர்களா? அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியின் இரத்தப்பழி அவன் கரங்களில் உள்ளது. நீங்கள் நினைக்கிறீர்களா அரசு நீதிமன்றம்.... அவன் எவ்வளவுதான், ''அதை செய்ய வேண்டுமென்று நான் எண்ணவில்லை“ என்று கெஞ்சினாலும், அது அவனுக்கு மன்னிப்பை தராது. அவன் மாண்டு போவான். ஏன்? ஜனாதிபதியின் இரத்தப்பழி அவன் கரங்களில் உள்ளது. அவனுடைய உணர்ச்சியை உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? அதை உங்கள் கரங்களில் பெற நீங்கள் விரும்புவீர்களா? நல்லது, (சபையார், ''இல்லை'' என்கின்றனர் - ஆசி ) அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் இரத்தப் பழியைக் குறித்தென்ன? நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அது முழுதுவமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, நீங்கள் எப்படி தப்பிக்க போகிறீர்கள்? அவருடைய இரத்தப்பழி உங்கள் கரங்களில் இருக்கும். குற்றவாளி! பாவியே, இங்கிருந்து நீ எங்கு செல்கின்றாய்? இன்று காலையில், கூட்டத்துக்கு பிறகு நீ என்ன செய்யப் போகிறாய்? 109நீ நினைக்கிறாயா... நீ ஒருக்கால், “நான் நினைத்தேன். நான் இவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை'' எனலாம். ஆஸ்வால்டும் கூட, ஒருக்கால் அதையே கூறலாம். உயர் நீதிமன்ற நீதிபதி நியாயமாக வழக்கை விசாரித்து, அதுவே நமது நாட்டின் முடிவான தீர்மானம். முழு தேசமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டுள்ளது, வேறொன்றும் செய்ய முடியாது. அவன் அந்த குற்றத்தை புரிந்திருக்கிறான். அதற்கான கிரயத்தை அவன் செலுத்த வேண்டும். அவன் எவ்வளவு தான் அதை செய்ய நினையாதிருந்த போதிலும் அவனுடைய நோக்கம் எப்படியிருந்த போதிலும் அது ஒன்றுமில்லை. அவன் எப்படியும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். நமது உச்ச நீதிமன்றமும் அதன் நியாயவிதிகளும் இப்படிப்பட்ட ஒரு நியாயத்தை விதிக்குமானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழியை உன் கைகளில் கொண்டவனாய் தேவனுடைய நியாயாசனத்தின் முன் நிற்கும் போது, அது இதைக் காட்டிலும் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்கும்? அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை என்னப்படும் இந்த இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கேட்டீர்கள். அது உண்மையென்று அறிவீர்கள். அது முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 110கொலை பாதகனையா? குற்றமற்ற கிறிஸ்துவுக்கு பதிலாக வார்த்தையை கொலை செய்யும் ஸ்தாபனத்தையா நீங்கள் விரும்புவீர்கள்? நீங்கள் சிலுவையில் அறைவீர்களா? நீங்கள் பரபாசை தெரிந்துகொள்ள துணிச்சல் கொள்வீர்களா? நீங்கள் பரபாஸ் வேண்டுமென்று கூச்சலிடுவீர்களா? ஜீவனாகிய வார்த்தைக்குப் பதிலாக வார்த்தையின் கொலை பாதகனை; பரபாஸ் வேண்டுமென்று கூச்சலிட எப்படி ஒருவன் துணிச்சல் கொள்ள முடியும்? அது உங்கள் கரங்களில் உள்ளது. ஜனாதிபதி கென்னடியின் கொலையை குறித்து நான் கேள்விப்பட்ட போது, இந்த செய்தி என் இருதயத்தில் எழுந்தது. அந்த மனிதன் என்ன செய்வான் என்று எண்ணினேன். அவனுக்கு தப்பிக்க வழியேயில்லை. அவன் இந்நேரம் விழித்து கொண்டு, அவனுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை உணர்ந்திருப்பான். 111நீங்கள் எப்பொழுதாவது விழித்துக்கொள்ள போகிறீர்கள். இங்கோ, அல்லது இந்த ஒலிநாடாவைக் கேட்கும் போதோ, நீங்கள் எங்கிருந்தாலும். பாவியே, நீ என்றாகிலும் ஒரு நாள் விழித்து கொண்டு உன் கரங்களில் இரத்தப்பழி உள்ளதை உணர போகிறாய் தேவ குமாரனுடைய இரத்தத்தை சிந்தின பழி. அவரை கொலை செய்த குற்றத்துக்கு நீ ஆளாவாய். உன் பாவம் அவரை கொலை செய்தது, அவருடைய வார்த்தையின் பேரில் உனக்கிருந்த அவிசுவாசம். அவரை நீ அடையாளம் கண்டுகொள்ள தவறினாய். பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினாய் தேவனுடைய நியாயாசனத்துக்கு முன்பாக நின்று உனக்கு என்ன நேரிடும் என்பதை அறிந்து கொள்வதை தவிர, உன்னால் வேறென்ன செய்ய முடியும்? ஆம், ஆஸ்வால்டின் கரங்களிலுள்ள இரத்தப் பழியை, நீதேவனுக்கு முன்பாக உன் கரங்களில் இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழியுடன் நிற்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது, அது சிறிய காரியமாயிருக்கும். 112''கிறிஸ்து என்னப்படும் இந்த இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று பிலாத்து கேட்டான். அவர் அவனுடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்டார். (சகோதரன். பிரன்ஹாம் பிரசங்கபீடத்தை அநேகதடவை தட்டுகிறார் - ஆசி) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மறுபடியுமாக இந்த சபையோரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது, இந்த தேசத்தின் கரங்களிலும், உலகம் பூராவும் இந்த ஒலிநாடாக்கள் செல்லும் எல்லாவிடங்களிலும், தேவனால், நிரூபிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ''நேற்றும் என்றும் இன்றும் மாறாதவர்'' என்னப்படும் இந்த இயேசுவை நாம் என்ன செய்ய போகிறோம்? இந்த இயேசுவை நாம் என்ன செய்ய போகிறோம்? அவருடைய பக்கத்தில் உங்கள் இடத்தை எடுத்துக்கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பிலாத்து... பிலாத்து அவரிடம் செய்த வண்ணமாக, நீங்கள் அவரிடம் மூன்று காரியங்களைச் செய்யக்கூடும். பிலாத்து மூன்றையும் முயன்று அதை இழந்து போனான். நீங்கள் மூன்று திட்டங்களைச் செய்ய முயற்சிக்கலாம், ஆனால் அது ஒரு போதும் கிரியை செய்யாது. பிலாத்து அவனுடைய கரங்களிலிருந்து அவரை உதறப்பார்த்தான். ஆனால் ஒரு முறை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் போது, அது உங்கள் கைகளில் உள்ளது. பிலாத்து மூன்று வெவ்வேறு முறைகளைக் கையாள முயன்று தோல்வியடைந்தான். 113அவர் நமது கரங்களில் இருக்கிறார் என்னும் உண்மையை நாம் உணர வேண்டும். அவருடைய வார்த்தையில் அவரை நாம் கண்டோம். அவர் தம்மை உறுதிப்படுத்துவதை நாம் காண்கிறோம். அவர், ''நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று நாம் அறிந்திருக்கிறோம். அது சரியா? (சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசி ) அப்படியானால் இக்காலை வேளையில் இங்குள்ள சபையோரிடம் மாத்திரம் நான் பேசவில்லை. ஒருக்கால் இங்கு அறுநூறு அல்லது எழுநூறுபேர் இருக்கக்கூடும். உலகம் பூராவும் செல்லப் போகும் இந்த ஒலிநாடாவின் மூலம் லட்சக்கணக்கானவர்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? ஒலிநாடா செல்லும் தேசத்திலுள்ளவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அது, உண்மையென்று உங்களுக்குத் தெரியும். தெரியாவிட்டால், நீங்கள் குருடர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையைக் காண முடியாவிட்டால், வார்த்தையில் தேவனையும் உங்களால் காண முடியாது. அவர், உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? 114பிலாத்து அவரைக் கைகழுவ பார்த்தான். ஆனால், நாம் உண்மையை முகமுகமாய் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அவன் அதைக் கேள்விப்பட்டான் என்று அறிந்திருந்தான். நீங்கள், ''நான் ஒன்றையும் காணவில்லை...'' எனலாம். அப்படியானால்... அதை நீங்கள் ஏதோ, ஒரு விதத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அதை இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள். பாருங்கள்? அவன் இயேசு ஒரு அற்புதத்தை செய்ய வேண்டும், அல்லது ஜாலவித்தை காட்ட வேண்டுமென்று விரும்பினான். ஆனால், அவர் ஒன்றும் ஜாலவித்தை காட்டவில்லை. தேவன் செய்யக் கூறினதை மாத்திரமே அவர் செய்தார். நீங்கள் கேள்விப்பட்டீர்கள் விசுவாசம் கேள்வியினால் வரும். ''உங்களுக்கு விசுவாசம் இருந்து அதிலிருந்து விலகி... உங்கள் கரங்களிலிருந்து உதற பார்க்கிறீர்கள். பிலாத்து எப்படியும் உண்மையை சந்திக்க வேண்டியதாயிருந்தது. அவன் சந்தித்தான். நாமும் கூட உண்மையை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அவர் முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுவிட்டார். யோசித்து பாருங்கள், ஒரு மனிதனின் இரத்தம் உங்கள் கரங்களில்! 115ஒரு மனிதன், வேறொருவரின் இரத்தம் தன் கரங்களில் இருக்கும் போது, கவனமாயிருக்க வேண்டும். ஆகாய விமானத்தை பாருங்கள். விமானி விமானத்தை ஓட்டுவதற்கு முன்பு எல்லா கருவிகளையும் சரி பார்க்கிறான். ஏன்? வேறொருவரின் இரத்தம் அவன் கரங்களில் உள்ளது. ஒவ்வொரு சிறு கருவியையும் கூட அவன் சரிபார்க்கிறான். அவன் விமானத்தை திருப்பி, மோட்டாரை (என்ஜினை) போட்டு, அது சூடாகிறதா என்று பார்க்கிறான். அவன் ட்ராட்டிலை (throttle) முழுவதும் அழுத்தி, அது மேலே செல்வதற்கு வேண்டிய காற்றை ''ப்ரொ பெல்லருக்கு (propeller) அனுப்புகிறதா என்று பார்க்கிறான். உங்களில் அநேகர் ஒரு விமானத்தில் நின்றதுண்டு, அல்லது உட்கார்ந்ததுண்டு. அது... விமானம் முழுவதும் பூமியைவிட்டு ஏறக்குறைய குலுங்குகிறது; அதில் தவறு ஏதாகிலும் உள்ளதா என்று அவன் தனக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும் சோதித்துப் பார்க்கிறான். அப்படி தவறு இருந்தால், அது ஓடாது. அவன் மறுபடியும் அதை சோதித்துப் பார்க்கிறான். அவன் சிறிது நேரம் அங்கு உட்கார நேர்ந்தாலும் அவன் மறுபடியும் அதை சோதித்து பார்க்கிறான். அவனுடைய நேரம் சிறிது செலவழிந்தாலும், அவன் மறுபடியும் அதை சோதித்து பார்க்கிறான். 116சபையானது எவ்வளவாக அதை மறுபடியும் மறுபடியும், மறுபடியும் சோதித்துப் பார்க்க வேண்டியதாயுள்ளது. அவருடைய வருகைக்காக நாம் காத்திருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பறந்து செல்ல காத்திருக்கிறோம். அதை நாம் வார்த்தையுடன் சோதித்துப் பார்ப்பது நலம். யாரோ ஒருவர் கூறினதுடன் அல்ல. உங்களை நீங்கள் அறிந்தவர்களாய், கிறிஸ்துவுடன் தனிப்பட்டவிதத்தில் அனுபவம் கொண்டிருக்க நிச்சய முடையவர்களாயிருங்கள். அதை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் சோதித்துப் பாருங்கள். ஏன்? அவன் மனிதனின் இரத்தத்தை தன் கரங்களில் கொண்டுள்ளதால், சோதித்து பார்ப்பது நலம். 117அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு ஒரு மருத்துவர் என்ன செய்கிறார்? இன்று காலை இங்கு சில மருத்துவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அறுவை சிகிச்சை செய்ய செல்வதற்கு முன்பு ஒரு மருத்துவர் என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அவர் எக்ஸ்ரே படம் வேண்டும் என்கிறார். அவர் இரத்தத்தை பரிசோதிக்க விரும்புகிறார், அவர் இருதயத்தை பரிசோதிக்க விரும்புகிறார். அவர் மயக்கம் கொடுப்பதற்கு முன்பு, உங்களுக்கு ஜலதோஷம் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறார். அவர் அறுவை சிகிச்சைக்கு உபயோகிக்கும் ஒவ்வொரு கருவியையும் முழுவதுமாக சோதித்து, அதில் கிருமிகள் இராதபடிக்கு அதை தண்ணீரில் கொதிக்க வைக்கிறார். அவர் எல்லாவற்றையும் செய்கிறார். அவர் மறுபடியும், மறுபடியும், மறுபடியும், மறுபடியும் சோதிக்கிறார். ஏன்? அவருடைய கரங்களில் ஒரு மனிதனின் இரத்தம் உள்ளது. எல்லாமே மிகவும் சரியாயுள்ளது என்று அவர் முழு நிச்சயமுடையவராயிருக்க விரும்புகிறார். 118உன்னைக் குறித்தென்ன? பாவியே, உன்னைக் குறித்தென்ன? இதைக் குறித்த உன் உணர்ச்சி என்ன? ஒரு மனிதனின் இரத்தம் உன்கரங்களில் உள்ளதைக் குறித்து. விமானிக்கு பொறுப்புள்ளது, அவன் சோதித்து பார்க்கிறான், மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். வேறு என்ன வேண்டும்? எத்தனையோ விஞ்ஞான... ஒரு மனிதனின் இரத்தம் உங்கள் கரங்களில் உள்ள போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, சட்டப் புத்தகங்களை மறுபடியும், மறுபடியும், மறுபடியும், மறுபடியும் படித்து எல்லாவற்றையும் தெளிவாகக் காண்கிறார். அவர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு. ஏனெனில், ஒரு மனிதனின் இரத்தம் அவர் கரங்களில் உள்ளது. அது நியாயமென்று கருதப்பட, அங்கு ஏதாவதொன்று இருக்க வேண்டும். பாருங்கள்? 119நம்மைக் குறித்தென்ன? அவர், ''நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று முழுவதுமாக அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளதை நாம் கண்டிருக்கிறோம். அவர் இங்கிருக்கிறார். அவர், நமது கரங்களில் இருக்கிறார். அவர் நமது கரங்களில் இருக்கிறார். அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாகிய இந்த இயேசுவை நான் என்ன செய்யப் போகிறேன்? ''அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அது அவர் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' இந்நாளுக்கான வாக்குத்தத்தம், நாம் வாழும் இந்நாளுக்கான வாக்குத்தத்தம். இவ்வளவு வேத வாக்கியங்கள்... வேதத்தின் இவ்வளவு அங்குலங்கள் இப்பொழுது நிறைவேற வேண்டும், இந்தக் கடைசி நாளில் கடைசி அங்குலங்கள். இப்பொழுது நடக்க வேண்டியதாக கருதப்படும் சில காரியங்கள் இங்கே உள்ளன. அவை இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. அது என்ன? அதே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து; அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை! அதை நீ என்ன செய்யப் போகிறாய்? அதை ஸ்தாபனத்துக்கு விற்றுப்போட போகிறாயா? 120இப்பொழுது, பிலாத்து என்ன செய்தான்? அவன் தன் கைகளைக் கழுவ முயன்றான். முதலாவதாக பிலாத்து செய்ய முயன்றது , “ஓ, அவர் சரியாகத்தான் இருக்கிறார், அவரில் ஒரு குற்றமில்லை'' என்று சொல்லி கைகளை கழுவுவதே. பாருங்கள்? நீங்கள், ”ஓ, பாவம் பிலாத்து எனலாம். பிலாத்துவா? அவர்களில் அநேகர்.. அவன் செய்தது நியாயம் என்று கூறுவதா? இல்லை, இல்லை, இல்லை! அவர் அவன் கரங்களில் இருந்தார். அவன் செய்தியைக் கேட்டான், அவன் வார்த்தையை கண்டான், அவர் அவன் கரங்களில் இருந்தார். அது போல, அவர் உங்கள் கரங்களிலும் இருக்கிறார். அது உண்மை. அவன் என்ன செய்தான்? அவன், “ஓ, நல்லது, அவர் நல்லவர், அவரில் ஒரு குற்றமும் காணவில்லை'' என்று கூறினான். 121இன்றைக்கு அநேகருடைய பதிலும் அவ்வாறே உள்ளது என்று நினைக்கிறேன். வேதாகமம் சரிதான், ஆனால் நாங்கள் சபை கூறுவதை விசுவாசிக்கிறோம். எங்கள் ஸ்தாபனம் அதனுடன் இணங்குவதில்லை.'' பாருங்கள், பாருங்கள்? ஒரு வகுப்பினர் அவரைக் கைகழுவ முயல்கின்றனர். ''நான் வார்த்தையில் ஒருதவறையும் காணவில்லை. அது, அப்போஸ்தலர்களின் நாளிற்கு சரியாயிருந்தது. நாமோ வேறொரு நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அப்போஸ்தலர்களின் நாளில் வாழவில்லை. எனவே, அப்போஸ்தலர்கள் செய்தவிதமாக நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஞானஸ்நானம் பெற்றவிதமாக நான் பெற வேண்டும் என்னும் அவசியமில்லை. நான் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த கூட்டத்தாருக்கு தான் பரிசுத்த ஆவி அருளப்பட்டது. 122எபிரெயர்:13:8 மறுபடியுமாக அவரை உங்கள் கரங்களில் வைத்துவிட்டது (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று தடவைதட்டுகிறார் ஆசி)... தப்பிக்க முடியாது! அவர் முழுவதுமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர், ''நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' உங்களால் தப்பிக்க முடியாது. அவரை நீங்கள் வேறொரு காலத்துக்கு தள்ளிவிட முடியாது. எபிரெயர்;13:8 உங்கள் சிந்தனைகளைக் குற்றப்படுத்தி, அவரை மறுபடியும் உங்கள் கரங்களில் சேர்க்கிறது. எனவே, இயேசு பிலாத்துவின் கரங்களில் இருந்தது போல, இப்பொழுது உங்கள் கரங்களில் இருக்கிறார். பாருங்கள், “எனக்கு தெரியாது'' என்று நீங்கள் கூறலாம். அப்படியானால், ஏன் இதைக் கேட்டு கொண்டிருக்கிறீர்கள்? பிலாத்து ஒரு அஞ்ஞானி, அவன் மனைவியும் ஒரு அஞ்ஞானி. ஆனால், தேவன் அதை நீதியுள்ளதாகச் செய்ய, அந்த ஸ்திரீயை கொண்டு தகவல் அனுப்பச் செய்தார். அவள் இந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர், நிமித்தம் இன்றைக்கு...'' (அது காலை, அவள் முந்தின இரவில் பாடுபட்டாள். இருபத்து நான்கு மணி நேரம் ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது.) ''அந்த நீதிமானின் நிமித்தம் இரவில் சொப்பனத்தில் வெகுவாய் பாடுபட்டேன். அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று ஆளனுப்பித் தெரிவித்தாள். பிலாத்து, “நல்லது, அப்படியானால் என் கைகளைக் கழுவி அவரை உதறிவிடுகிறேன்'' என்றான். அவனால் அப்படி செய்ய முடியவில்லை. நீங்களும் அப்படி செய்ய முடியாது. ஒருமுறை நீங்கள் சத்தியத்தை கேட்க நேர்ந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும். வேறு வழியே இல்லை. ஆம், ஐயா! இரண்டில் ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்... கர்த்தருடைய எச்சரிக்கை! 123யூதர்கள், ''அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின் மேல் இருக்கட்டும். நாங்கள் எங்கள் ஆசாரியரை, எங்கள் ஸ்தாபன முறைமையை விசுவாசிப்போமேயன்றி இவனை விசுவாசிக்க மாட்டோம்'' என்று கூச்சலிட்டனர். பார்த்தீர்களா? இன்றைய வகுப்பினரை பாருங்கள். ஆனால், எல்லோருமே தேவனுடைய விஷயத்தை சந்திக்க வேண்டும். நீங்கள் எல்லோருமே, நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தாலும் யாராயிருந்தாலும், அவ்விசுவாசியாயிருந்தாலும், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், வெதுவெதுப்பானவன், குளிர்ந்த நிலையிலுள்ளவன், அனலுள்ளவன் யாராயிருந்தாலும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும், அந்த விஷயத்தை எப்படியும் சந்திக்க வேண்டும். அது உங்கள் கரங்களில் உள்ளது. நிச்சயமாக! 124அந்த விஷயத்தை தந்திரமாக மற்றொரு ராயனிடம் தள்ளிவிட, பிலாத்துவின் மற்ற திட்டங்களைக் கையாளுபவர் உண்டு. பாருங்கள்? பிலாத்து, ஒரு நிமிடம் பொறுங்கள். எனக்கு அதனுடன் தொடர்பு கொள்ள விருப்பமில்லை. நான்-நான்-நான்-நான், அவர் நீதிமான். அவருடன் தொடர்பு கொள்ள எனக்குப் பிரியமில்லை. ஓ, நான்-நான்-நான் கேள்விப்பட்டதை விசுவாசிக்கிறேன். அவர் அற்புதங்களைச் செய்வதை நான் காணவில்லை. அவர் செய்ததைக் கண்ட அநேக சாட்சிகள் அவருக்கு உள்ளனர். அவர் நீதிமான் என்று நான்-நான்-நான் விசுவாசிக்கிறேன். அவர், ''நல்லவர்'' (பாருங்கள்?) இருப்பினும் அவருடன் எவ்வித தொடர்பும் கொள்ள எனக்கு பிரியமில்லை. என் கைகளை கழுவி அவரை உதறிவிடுகிறேன். எனக்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள். நீங்கள் எல்லோரும் இதற்கு சாட்சி, என்றான். ஆம். தேவனும் கூட அதற்கு சாட்சியாயிருந்தார். 125அவர், அவன் கரங்களில் இருந்தார். அவ்வாறே அவர் உங்கள் கரங்களிலும் இருக்கிறார். பாருங்கள்? நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? நீங்கள் மாத்திரமல்ல, இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களும் அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை? கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை. பாருங்கள்? அதை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அது இந்த மணி நேரத்துக்கான செய்தி. அந்த நாள் இங்குள்ளது. அது முழுவதும் வேதத்தினாலும் தேவனாலும் அங்கீகரிக்கப்பட்டது. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த விஷயத்தை நீங்கள் எப்படி ஏமாற்ற முடியும்? அப்படி செய்துவிட்டு நீங்கள் எப்படி தப்ப முடியும்? அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். இதனுடன் ஒப்பிடும் போது, ஆஸ்வால்டின் வழக்கு சிறியதாயிருக்கும். போதகர் எவரும், நீங்கள் யாராயிருந்தாலும்... 126அந்த யூதர்கள் ஆசாரியர்களும், ரபீக்களும், போதகர்களும், பரிசுத்த மனிதருமாயிருந்தனர். இருந்த போதிலும், அவர், அவர்கள் கரங்களில் இருந்தார். அவர் வார்த்தையாக, அந்த நாளில் தேவனுடைய விஷயமாக இருந்தார். அவர்களோ அதைக் காணத்தவறினர். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதை கண்டு கொண்டனர். அவர்கள் மாத்திரமே அதை விசுவாசித்தனர். இப்பொழுது, எல்லோருமே இந்த விஷயத்தை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு முறையும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஆதாம், ஏவாள் காலம் தொடங்கி, வழிவழியாக நோவாவின் காலத்தில்; அதன்பிறகு வழிவழியாக தானியேல் (பெல்ஷாத்சார்) நெபுகாத்நேச்சார் காலத்தில்; வழிவழியாக கிறிஸ்துவின் காலத்தில்; வழிவழியாக இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மணி நேரம் வரைக்கும், அது, அப்படியே இருந்து வருகிறது. வார்த்தையின் பிரச்சினை தோன்றினது, அவர்களுடைய கோட்பாடுகள், ஸ்தாபனங்கள், கொள்கைகள் அல்ல. வார்த்தையின் பிரச்சினை எழும்பி அவைகளுக்கு விரோதமாய் இருந்து வந்துள்ளது (அது முழுவதும் சரி.) இப்பொழுது, அது உங்கள் கரங்களில் உள்ளது. 127பிறகு, பிலாத்துவின் மற்றதிட்டத்தைக் கையாள முயன்றவர்கள், அவரை உதறி வேறொருவரிடம் கொடுத்து விட முயன்றவர்கள்... பிலாத்து, ''என்ன தெரியுமா? அவரை என் கையை விட்டுப் போக்கிவிடுகிறேன். அப்பொழுது நான்... அவரைக் குறித்து நான் ஏதாவதொன்றை செய்ய வேண்டும். நான் என்ன செய்வேன் தெரியுமா? தலைமை அலுவலகத்துக்கு பேராயரிடம் அனுப்பிவிடுவேன்'' என்றான். அதைதான் அவர்கள் இன்று செய்ய முயல்கின்றனர். பாருங்கள்? அவர்கள் அவரை ராயனிடம் அனுப்பினர். அது அவரை பிலாத்துவின் கைகளிலிருந்து போக்கிவிடவில்லை; யாருடைய கைகளிலிருந்தும் அவரை போக்கி விடவில்லை. அது என்ன செய்தது? அது மீண்டும் அவனிடமே வந்தது. அந்த நபரிடம் அது திரும்ப வந்தது. 128நீங்கள், ''நான் அதை செய்வேன். என் ஸ்தாபனம் அதை ஏற்று கொண்டால் நானும் ஏற்று கொள்வேன்'' என்கிறீர்கள். உங்கள் ஸ்தாபனம் சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்துவிட்டு ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்படி அதை ஏற்று கொள்வார்கள்? அது மீண்டும் உங்களிடத்திற்கே வருகிறது. உங்கள் ஸ்தாபனம் என்ன கூறுகிறது என்றல்ல, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதுதான் அடுத்தபடியான காரியம். பாருங்கள்? அது அவரை உங்கள் கரங்களிலிருந்து போக்கிவிடாது. அவர் முழுவதுமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருக்கிறார். இந்த மணி நேரத்தின் வார்த்தையாக, இந்த மணி நேரத்தின் வாக்குத்தத்தமாக. லூத்தரின் மணிநேரத்தின் வாக்குத்தத்தமாக அல்ல; அது அப்பொழுது. அது சீர்திருத்தக்காரரின் காலத்தின் வார்த்தை; ஏழு முத்திரைகளின் செய்தியை கேட்ட நீங்கள் அனைவரும்.... சீர்திருத்தக்காரரின் காலம் புறப்பட்டுச் சென்ற போது (மனிதனின் முகத்தையுடைய மிருகம்), ஸ்தாபனம் உண்டானது. ஆனால், இது கழுகின் முகம் (இன்று சவால்விட புறப்பட்டு சென்ற மிருகம்). 129இது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அருளப்பட்டதல்ல என்று கூற யார் துணிச்சல் கொள்ள முடியும்? அதை அவர் இங்கு முன்னுரைத்து, அரிசோனாவுக்கு அனுப்பி, மறுபடியும் கொண்டு வந்து, விஞ்ஞானத்தினாலும் மற்றவைகளினாலும் அதை நிரூபித்தார். இந்த புத்தகம் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. (அது உண்மை), கிறிஸ்துவின் வருகையுடன் ஏழாம் முத்திரை அடையாளம் கண்டு கொள்ளப்பட காத்திருக்கிறது. 130சரி, அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரைக் குறித்து நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். அவரை உதறித்தள்ளி விடாதீர்கள். ஆம், ஐயா! நான் கூற விரும்புவது, இந்த வகுப்பினரில்... அதாவது அவரை வேறொருவரிடம் தள்ளிவிடுவது... ''சகோ. பிரன்ஹாமே, என் ஸ்தாபனம் இதை ஏற்று கொள்ளுமானால், நானும் ஏற்று கொள்வேன். பாருங்கள், என் தாய் இந்த சபையை சேர்ந்திருந்தார்கள். உங்கள் தாய் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தார்கள்; அது நீங்கள் அல்ல. இப்பொழுது அது நீங்கள். அவர்கள் செய்ய வேண்டியதை செய்ய எதைவிட்டு வெளியே வர வேண்டியதாயிருந்ததென்று பாருங்கள். உங்களைக் குறித்தென்ன? சரி, பாருங்கள்! நீங்கள், ''என் தாய் பெந்தெகொஸ்தே சபையை சேர்ந்தவர்கள். அவர்கள் இதை அதை செய்தார்கள். அவர்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளி வந்து அதில் சேர்ந்து கொண்டார்கள்'' என்கிறீர்கள். இப்பொழுது, நான் உங்களிடம் பேசுகிறேன். உங்களைக் குறித்தென்ன? பாருங்கள்? இந்த வகுப்பினரில் படித்தவர்கள் அநேகர் உள்ளதை காண்கிறோம். உங்கள் மனதை நான் புண்படுத்த போகிறேன் என்றறிவேன். ஆனால், நான் வேண்டுமென்று செய்யவில்லை. அப்படி செய்தால், நான் பீடத்தண்டையில் வந்து மனஸ்தாபப்பட வேண்டும். இதை நான் தேவ அன்புடன் கூறுகிறேன். 131இயேசு அங்கு நின்று கொண்டிருந்த போது, அந்த பரிசேயர்கள்.... அவர் அவர்களை நோக்கி, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள்'' என்றார். இருந்த போதிலும் அவர் சிலுவையிலறையப்பட்ட போது, அவர்களுடைய சமாதானத்துக்காகவும் இரக்கத்துக்காகவும் அவர் மன்றாடினார். அவர்கள் அவரை சிலுவையிலறைந்தார்கள். பாருங்கள், அவர் அவர்கள் மேல் கோபப்படவில்லை. அவர், ''பாம்புகளின் சந்ததியே'' என்று அவர்களை அழைத்தார். பாருங்கள், பாருங்கள்? எல்லாமே... அவரால் முடிந்தவரை அவர்களை கடிந்து கொண்டார். ஆனால் சிலுவையில் அவர்களுக்காக ஜெபித்தார், பாருங்கள்? அவர், வேண்டுமென்று அப்படி செய்யவில்லை. அப்படி அல்ல. அவர்கள் செய்யும் தவறை அவர்கள் உணர வேண்டும். உத்திரவாதத்தை வேறொருவரிடம் தள்ளிவிடும் அந்த வகுப்பினருக்கு இன்று அதைத்தான் நான் கூறுகிறேன். இராணுவத்தில் அவர்கள், ''டாலரை வேறொருவரிடம் கொடுத்து விடுவது'' என்று கூறுவார்கள். ஆதாமும், ஏவாளும் செய்தது போல. ஏவாள்.... ஆதாம், ''நீர் எனக்குத்தந்த ஸ்திரீயானவள் என்றான். அது அவனுக்கு சாக்குபோக்கு அல்ல. பாருங்கள்? ஸ்திரீ, ''சர்ப்பமானது என்னை வஞ்சித்தது. அவன் தான் என்னுடன் உடலுறவு கொண்டான். அவன் என்னை வஞ்சித்தான். அவன் இதை செய்தான்'' என்றாள். ஆனால், அது குற்றத்தை அவர்களிடமிருந்து போக்கிவிடவில்லை. எப்படியும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு சென்றனர். ஆம், ஐயா! 132சரி, நீங்கள் அதை ஒருநாளும் தள்ளிவிட முடியாது. நீங்கள், ''என் ஸ்தாபனம் அதை விசுவாசித்தால், நானும் விசுவாசிப்பேன். இந்த ஸ்தாபனத்தில் நான் நீண்ட...'' அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. யூதர்களும் ஒரு ஸ்தாபனத்தில் இருந்தனர், நீங்களும் இருக்கிறீர்கள். அநேகர் இதில் இருந்த... இந்த வகுப்பினரில் நாகரீகமுள்ள அநேகர் உள்ளதை காண்கிறோம். இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். பாருங்கள், நாகரீகத்தை (இன்று நாம் நாகரீகம் என்று அழைப்பதைத்தான்) ''சாத்தான் ஏவாளுக்கு அளித்தான் - சிறிதுஞானம். அவன், ''உன் கண்கள் திறக்கப்படவில்லை, ஆகையால் தான் நீ எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை'' என்றான். அவள் வார்த்தையை அறிந்திருந்தாள், அது மாத்திரமே.... தேவன் வார்த்தையை உறுதிப்படுத்துவதை அவள் கண்டிருந்தாள், அது அவளுக்கு போதுமானதாயிருந்தது. அவள் வார்த்தையில் நிலைநின்ற வரைக்கும், அவர் அவளை நித்திய ஜீவனுக்குள் வைத்திருந்தார். அவள் வார்த்தையை மீறின போது... அவள் வார்த்தையை மீறும் அந்த நாளிலே சாகவே சாவாய் என்று தேவன் உரைத்திருந்தார். அவள் மீறின போது செத்தாள். அது உண்மை. 133உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை நமக்கு இங்குள்ளது; அவர் நம்மை ஏற்று கொண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுத்திருக்கிறார் என்பதை ஆவியினால் உறுதிப்படுத்தி நிரூபித்திருக்கிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். அதே சுவிசேஷம், அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஊழியம்; அதே அக்கினிஸ்தம்பமும் கூட நமக்கு காணப்பட்டு, அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பிக்கிறது. எனவே, எங்கும் சாக்கு போக்குக்கு இடமில்லை. கடைசி நாட்களில் அவ்வாறு நடக்கும் என்று வேதம் திட்டவட்டமாக உரைத்துள்ளது. மல்கியா;4ல் கூறியுள்ளவர் பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடம் திருப்ப அழைப்பு கொடுப்பார். அதன் பிறகு துன்மார்க்கர், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதித்து நடந்து செல்வார்கள். முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். அணுகுண்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன, அவை அறைகளில் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி கொலை செய்யப்பட்டார் என்று அறிந்தவுடனே ஜெர்மனி என்ன செய்த தென்று பார்த்தீர்களா? அதுதன் இராணுவத்தை வேகமாக ஒன்று சேர்த்தது. ஏனெனில், அது ஒன்று தான் ருஷியா அங்குகுண்டு வீசுவதை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது. அவர்கள் ஜெர்மனியின் மேல்குண்டு வீசினால், அவர்களை பூமியிலிருந்து நிர்மூலமாக்கி விடுவதாக கென்னடி அவர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தார். பாருங்கள்? அவர்கள் அதைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால், அதற்கான நேரம் வரவில்லை. பாருங்கள்? 134அறிவாளிகளான, கல்வியறிவு பெற்ற போதகர்கள் சுவிசேஷகர்கள் அதை வேறொருவர் மேல் சுமத்திவிடுவதை நாம் காண்கிறோம். பாருங்கள்? ஏன்? பிலாத்து, “ஒருநிமிடம் பொறுங்கள். இந்த மனிதன்... என் மனைவி என்னிடம் ஆள் அனுப்பி சொன்னாள், உம்மைக் குறித்து நான் எவ்வளவோ சாட்சிகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரியுமா, நான்-நான், அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஐயா, நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும்? நீர் என் கரங்களில் இருக்கிறீர். நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று ஏன் கேட்கவில்லை? அவன் சொல்லியிருப்பான். அவன் சொல்லியிருப்பான். அவன், ''நீர் மேசியாவா? நீர் யூதருக்கு ராஜாவா?” என்று கேட்டான். அவர், ''நீர் சொன்னபடியே. நீர் அதை கூறிவிட்டீர்'' என்றார். ''நீர் யூதருடைய ராஜாவா என்று உண்மையாக எங்களுக்குச் சொல் அவர், “அந்த நோக்கத்துக்காகவே நான் பிறந்தேன்” என்றார். பிலாத்து, “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். (உ,ஊ). அவனை என் கைகளிலிருந்து கழுவிவிடுகிறேன்.'' அவர் அவனுக்கு மாறுத்தரம் அருளினார். அவனோ, அதை ஏற்று கொள்ளவில்லை. ஏன்? அது, அவனுடைய மதிப்பை குறைத்துவிடும். எனவே, அவரை மாகாண போதகரிடம் அனுப்பி, அவர் என்ன செய்வார் என்று பார்க்கலாம் என்று எண்ணினான். இப்பொழுதும் அதேகாரியம் தான். மறுபடியும் அந்த பிரச்சினை எழும்புகிறது. அந்த வார்த்தையை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? உங்கள் ஞானஸ்நான முறையை மாற்றலாமா, அல்லது, இதை செய்யலாமா என்று போதகரிடம் பேராயரிடம் அல்லது வேறு யாரிடமாவது கேட்க போகிறீர்களா? பாருங்கள்... ''நிச்சயம் அப்படி செய்ய கூடாது'' என்று, அது மறுபடியும் உங்களிடத்தில் வரும். அப்படி செய்தால், நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள். பாருங்கள்? 135அது ஜனங்களின் மதிப்பை குறைத்து விடுகிறது. ஆம், அவர்கள் - அவர்கள் நினைக்கின்றனர்... ஸ்தாபன ஆலோசனை சங்கம் அதை ஏற்று கொள்ளாது. பிலாத்து, ராயனிடம் அனுப்பினது போல். அவர்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். ராயன் அதை மறுபடியும் பிலாத்துவின் கரங்களிலே சமர்ப்பித்தான். அவர்கள் அவரை அவர்களுடைய ஸ்தாபன தலைவர்களிடம் தள்ளிவிட பார்க்கின்றனர். ஆனால், அது கிரியை செய்யாது. அந்த தந்திரம் ஒரு போதும் பலிக்கவில்லை, அது உங்களுக்கும் பலிக்காது, அது யாருக்குமே பலிக்காது. இப்பொழுது, இரண்டாவதாக, நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில்... 136இல்லை, மூன்றாவதாக, அவரை ஏற்று கொள்ள வேண்டும் அல்லது அவரை புறக்கணிக்க வேண்டும். அவரை நீங்கள் கைகழுவிவிட முடியாது. அவரை நீங்கள் வேறொரு முறைமையிடமோ அல்லது வேறெதற்கோ தள்ளி விடமுடியாது. அந்த பிரச்சினையை நீங்கள் சந்திக்க வேண்டும். எனவே நீங்கள் என்ன செய்ய முடியும்? பிலாத்து அதே பிரச்சினையுடன் அங்கு நின்று கொண்டு, ''எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். என் கைகளை கழுவிவிடுகிறேன்...'' என்றான். அவன் மறுபடியும் வந்து, நியாயத் தீர்ப்பை கூற வேண்டியவனாயிருந்தான். அவனுக்கு சாக்குபோக்குக்கு இடமில்லாமல் போயிற்று. அவன், “என் கைகளை விட்டு அவரை உதற முடியாமல் போனால், அவரை ராயனின் கரங்களில் கொடுத்து விடுகிறேன்'' என்று சொல்ல முயன்றான். அது அவனிடமே திரும்ப வந்தது. அது உங்களுக்கும் தனிப்பட்ட நபர் என்னும் முறையில் நடந்தே தீரும். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் தாயார் செய்ததையல்ல, உங்கள் போதகர் செய்வதையல்ல, சகோ. பிரன்ஹாம் செய்வதையல்ல... அது உங்கள் கரங்களில் உள்ளது. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை? ஏனெனில், உங்கள் கரங்களில் இரத்தம் உள்ளது. அது தேவனுடைய இரத்தம். நீங்கள் இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? அவரை சிலுவையிலறைந்த குற்றத்தை செய்யப் போகிறீர்களா? பாருங்கள்? அவரை நீங்கள் சிலுவையில் அறையலாம், உங்கள் கோட்பாடுகளை ஏற்று கொள்ளலாம், அல்லது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள், அவரை நான் வேறொருவரிடம் தள்ளிவிடுகிறேன், இந்த சபை காரியங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை எனலாம். உங்களால் அப்படி செய்ய முடியாது. அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அது உண்மை. உங்களால் அப்படி செய்ய முடியாது. நான் முழுவதையும் மறந்துவிடுகிறேன்'' உங்களால் அப்படி செய்ய முடியாது. அது உங்கள் கரங்களில் உள்ளது. “என் போதகர் இப்படி எனக்கு போதித்திருக்கிறார்'' என்று நான் சொல்லிவிடுவேன். அது உங்களிடம் திரும்ப வந்துவிடும். அது உங்களுக்கு. அதை நீங்கள் அறிவீர்கள். அவரை நீங்கள் ஏற்று கொள்ளலாம், அல்லது புறக்கணிக்கலாம் கவனியுங்கள், இந்த இரண்டில் ஒன்றுக்கு நீங்கள் வர வேண்டும். 137இப்பொழுது, கவனியுங்கள். இயேசு பரிசேயர்களிடம், ''உங்கள்...'' என்று சொன்னது போல (அந்த குருடான பரிசேயர்களிடம்), பாருங்கள், இன்றைக்கும் அதையே கூறுவார்; ''குருடான மதப் போதகர்களே... உங்களால் கம்யூனிஸத்தின் காலத்தை நிதானிக்க முடிகிறது. அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள். உங்களை நிர்மூலமாக்க தேவன் அதை எழுப்பியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (பாருங்கள்? வேத வாக்கியங்களை அறியாதவர்களாய்.... பாருங்கள்?). “கம்யூனிஸம் உலகத்தை கைப்பற்ற போகிறது என்று நிதானித்து அறியுங்கள். அதை நீங்கள் காணலாம். அதை உங்களால் நிதானிக்க முடியும்.'' நாம் பேசும் பொருள்கள் அனைத்துமே கம்யூனிஸத்தின் பேரில், ''கம்யூனிஸத்தை அடித்து துரத்துங்கள்'' என்பதாக, அதைக் கேட்டு கேட்டு எனக்கு போது மென்றாகிவிட்டது. நானும் கூட கம்யூனிஸத்துக்கு விரோதமானவன். நான் நிச்சயமாக அதற்கு விரோதமானவன். ஆனால், நான் அதைக் காட்டிலும் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் மனிதன் அல்லது ஸ்திரீக்கு அதிகம் விரோதமானவன். நீங்கள் போதகராயிருந்தாலும், நீங்கள் யாராயிருந்தாலும், ஒரு கம்யூனிஸ்டைக் காட்டிலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு அதிகமாக கடன்பட்டிருக்கிறீர்கள். கம்யூனிஸ்டு ஒன்றும் அறியாதவன், அவனுக்கு இதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால், நீங்கள் அறிந்திருக்க வேண்டியவர் களாயிருக்கிறீர்கள்.பாருங்கள்? கம்யூனிஸத்தின் காலத்தை உங்களால் நிதானிக்க முடிகிறது, ஆனால் நீங்கள் வாழும் காலத்தை நிதானிக்க உங்களால் முடியவில்லை. 138இயேசு பரிசேயரை நோக்கி, ''மாயக்காரரே, நீங்கள் வெளியே சென்று வானத்தை அண்ணாந்து பார்த்து, சூரியன் சிகப்பாக இருக்கிறது, அது அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது என்றும் நாளை மோசமாக இருக்கும் என்றும் சொல்கிறீர்கள். வானம் தெளிவாக இருந்தால் நாளை தெளிவான நாளாக இருக்கும் என்கிறீர்கள். காலங்களின் அடையாளங்களை உங்களால் நிதானித்து அறிய முடிகிறது... இல்லை, வானத்தின் தோற்றத்தை உங்களுக்கு நிதானிக்கத் தெரிகிறது. ஆனால், காலங்களின் அடையாளங்கள் உங்களுக்குத் தெரியவில்லையே'' என்றார். அதோ அவர் அங்கிருந்தார், மேசியா; அவர்கள் அவரைப் புறக்கணித்தனர். நாம் எப்பொழுதும் கம்யூனிஸத்தை குறித்தும் அதை போன்ற வேறெதாவதொன்றைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலத்தின் அடையாளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? அதை நாம் அசட்டை செய்கிறோம், அதை தள்ளி விடுகிறோம். இப்பொழுது அவ்விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்து கொண்டிருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள காலத்தின் அடையாளத்தை கண்டு அதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். உங்களுக்கு விளங்குகிறதா? (சபையார், ''ஆமென் என்கின்றனர் - ஆசி) நான் இப்பொழுது வேகமாக முடிக்க வேண்டும், நேரமாகி கொண்டிருக்கிறது. பாருங்கள்? 139அவர்களுடைய பிதாக்கள் செய்தது போல, அவர்களும் செய்கின்றனர். இன்று அதே காரியம் தான். இப்பொழுது, ஒரு தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டது. தீர்மானம் செய்ய வேண்டியதாயுள்ளது. அதை நீங்கள் எப்படியும் செய்தாக வேண்டும். பாருங்கள்? மறுபடியும் வார்த்தையை சிலுவையில் அறைய போகிறீர்களா அல்லது என்ன செய்ய போகிறீர்கள்? வார்த்தை சிலுவையில் அறையப்பட வேண்டியது சமீபமாயுள்ளது. ஸ்தாபனத்தின் நிமித்தம் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை சிலுவையில் அறைந்து அதை நிறுத்திவிடுவது (பிலாத்து செய்தது போல, அதை வேறொருவரிடம் தள்ளிவிடுவது). இப்பொழுது, தனிப்பட்ட நபர் என்னும் முறையில் கிறிஸ்து என்னப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர் நேற்றும்... நோவாவின் காலத்தில் வார்த்தையை அபிஷேகித்த அதே கிறிஸ்து. அதே கிறிஸ்துதான்.... ஏதேன் தோட்டத்தில் ஜீவ விருட்சமாக இருந்தார். ஏவாள் அந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்காமல் விட்டுவிட்டு, அறிவின் விருட்சத்தின் கனியைப் புசித்தாள். அவன், அவள் ஜீவ விருட்சத்தை ஏற்காமல் மரண விருட்சத்தை ஏற்றாள். நோவாவின் காலத்திலும் அவர்கள் அதையே செய்தனர். தீர்க்கதரிசிகளின் காலத்திலும் அவர்கள் அதையே செய்தனர். ஒவ்வொருவரும் அவர்களுடைய காலத்தை குறித்து பேசினர். அது நிறைவேறின போது, ஒவ்வொரு முறையும் அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்துவை ஏற்று கொள்வதற்கு பதிலாக தங்கள் ஸ்தாபன காரணங்களையும் உலகத்தின் ஞானத்தையும் ஏற்று கொண்டனர். தனிப்பட்ட நபர் என்னும் முறையில் நீ என்ன செய்யப் போகிறாய்? 140பிலாத்துவுக்கு அவரை தன் கரங்களிலிருந்து போக்கிவிட முடியவில்லை. நான் முடிக்க போகிறேன். சற்று நேரம் அமைதியாயிருங்கள். பிலாத்துவுக்கு அவரை தன் கரங்களிலிருந்து போக்க முடியவில்லை. அவன் தன் திட்டங்களைக் கையாண்டு இதை செய்ய முனைந்தது போல, நீங்களும் அவ்வாறு செய்து அவரை போக்க முடியாது. அவனால் போக்க முடியவில்லை. முடிவில் பிலாத்துவுக்கு என்ன நேர்ந்தது தெரியுமா? அவனுக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டது. அவனுக்கு காதுகளில் விழுந்ததெல்லாம் சிலுவையிலறையப்பட்ட சம்பவத்தைக் குறித்தும் ஜனங்கள் செய்த ஆர்ப்பாட்டம் மாத்திரமே. முடிவில் அவனுக்கு பைத்தியம் பிடித்தது. நார்வேயில், ஒரு கதையை அவர்கள் கூறுகின்றனர்... இல்லை, என்னை மன்னிக்கவும்... சுவிட்சர்லாந்தில். அங்கு நான் மிஷனரியாக சென்றிருந்த போது பெரிய வெள்ளிக்கிழமையன்று அங்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கூடுவதாகக் கூறுகின்றனர். பிலாத்து தற்கொலை செய்து கொண்ட ஒரு குளம் அங்குள்ளதாம். அந்த தண்ணீரில் தான் அவன் விழுந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டானாம். ஒவ்வொரு பெரிய வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணிக்கு, தண்ணீர் நீல நிறமாக மாறி, பிலாத்துவின் பிணம் மிதந்த இடத்தில் அது கொதிக்கத் தொடங்குகின்றதாம். அவன் அதைப் புறக்கணித்தான். அவனுடைய கரங்களில் இன்னும் இரத்தப் பழி உள்ளது. அவன் புறக்கணித்தான்... அவர் தண்ணீரினால் கழுவப்பட மறுத்தார். அவரை நீங்கள் உங்கள் கரங்களிலிருந்து கழுவிவிட முடியாது. அதை கழுவி சுத்திகரிக்க எந்த தண்ணீரும், சோப்பும் கிடையாது. அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? நீங்கள் செய்யக் கூடிய ஒரே காரியம் இது தான். நீங்கள் அவரை உங்கள் கைகளிலிருந்து கழுவி விட முடியாது; அவரை வேறு யாரிடமாவது தள்ளிவிட முடியாது. அப்படி செய்ய உலகில் எந்த வழியும் இல்லை. நீங்கள் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று அவரை உங்கள் கரங்களிலிருந்து போக்கி, உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்களிலேயே வைத்திருந்து நியாயத்தீர்ப்பில் நில்லுங்கள். அது ஒன்று மாத்திரமே உங்களால் செய்ய முடியும். பிலாத்துவின் முடிவு பயங்கரமானது. 141அவரைத் தங்கள் கரங்களில் வைத்திருப்பவர்களுக்கு நேரிடும் கதியைக் குறித்து வசனம் கூறுகிறது (அதை நான் படிக்கலாம் என்று நினைத்தேன். அது, அவர்கள் மலைகளையும் குன்றுகளையும் நோக்கிக் கதறினார்கள். ஆனால், அவர்களுடைய ஜெபங்கள் நேரம் கடந்த பிறகு ஏறெடுக்கப்பட்டன'' என்றுரைக்கிறது (பாருங்கள்?) ''அவர்கள் பர்வதங்களையும், கன்மலைகளையும் நோக்கி; நீங்கள் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் ஆட்டு குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்து கொள்ளுங்கள். அவருடைய கோபாக்கினையின் நாள் வந்துவிட்டது. யார் நிலை நிற்கக்கூடும்?'' என்பார்கள். ஆஸ்வால்டு உயர் நீதிமன்றத்துக்குள் நடந்து, அங்கு உட்கார்ந்திருக்கும் ''ஜூரிகளின்'' கோபமானகண்களையும் மற்றவர்களையும் காணும் போது என்ன செய்வான் என்று நினைக்கிறீர்கள்? என்ன நடக்கப் போகிறதென்று அவனுக்குத் தெரியும். அது வாயு அறை அல்லது தூக்கு கயிறு அல்லது வேறெதாவதாக இருக்கும். அவன் அதை சந்திக்க வேண்டும். 142உங்கள் கரங்களில் இரத்தத்தைக் கொண்டவர்களாய், அதை நீங்கள் புறக்கணித்து, நரகம் - நித்திய அழிவு - உங்களுக்காக காத்திருக்கிறது என்று அறிந்து நீங்கள் அங்கு நடந்து செல்லும் போது எப்படியிருக்கும்? பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி விண்ணப்பம் பண்ணினாலும், அது காலதாமதமாயிருக்கும். எபிரெயர்; 10ம் அதிகாரத்தில், சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு... (அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை, அதைக் குறித்து அறிந்திருந்தாலே போதும். சத்தியத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள்... இல்லை, இல்லை! பாருங்கள்? நீங்கள் சத்தியத்தை எற்றுக்கொண்ட பிறகு என்று கூறவில்லை.... சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால்.... (பாவம் என்பது அவ்விசுவாசம்)... பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல் நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்... 143சத்தியம் நமக்கு எடுத்துரைக்கப்பட்ட பிறகு, நாம் மனப்பூர்வமாக அவ்விசுவாசித்தால், இனி ஒருபோதும் இரக்கமே கிடையாது. இனி இரக்கம் காண்பிக்கப்படமாட்டாது. இந்த ஒலி நாடாவைக் கேட்கும் போதகரே, இதைக் குறித்து என்ன? இந்த ஒலிநாடாவைக் கேட்கும் சபையின் அங்கத்தினனே, இதை குறித்து என்ன? நீங்கள் மனப்பூர்வமாக அவ்விசுவாசித்தால், என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் கைகளிலிருந்து அதை கழுவிவிட முடியாது. அதை நீங்கள் தலைமை அலுவலகத்தின் மேல் சுமத்திவிட முடியாது. அது மீண்டும் உங்களிடமே திரும்ப வரும். நீங்கள் அதை கேட்டீர்கள். உங்களைக் குறித்து என்ன? அந்த நாளில் நீங்கள் எந்த நிலையில் நிற்க போகின்றீர்கள்? அவர் உங்கள் கரங்களில் இருக்க வேண்டும் அல்லது உங்கள் இருதயத்தில் இருக்க வேண்டும், இவ்விரண்டில் ஒன்று. தேவன் நமக்கு உதவி செய்வாராக! 144அந்த கொலையையும் அந்த மனிதனின் இருதயத்தில் அலைபாயும் எண்ணங்களையும் நீங்கள் எண்ணிப் பார்த்தால் அவன் என்ன செய்தான்? அவன் அதை செய்துவிட்ட பிறகு, அதை தாமதமாக உணர்ந்தான். பாருங்கள். அவனுக்குத் தருணம் இருந்தது. அவன் சுயாதீனமுள்ள அமெரிக்க குடிமகனாகப் பிறந்தான். அவன் ஒரு அமெரிக்கன். ஆனால், ருஷியனாக ஆவதற்கு அவன் தன் பிறப்புரிமையை விற்றுப்போட எண்ணினான். அது அவனை பாதித்தது. அவன் ருஷ்ய பெண் ஒருத்தியை மணந்தான். இப்பொழுது அவன் க்யூபா நாட்டின் கம்யூனிஸக் கட்சியின் சுதந்திரக் கருத்துடையவன் சுதந்தரமாக சிந்திப்பவன், “நானே சிந்திப்பேன். நீங்கள் சுதந்தரமாக சிந்திப்பவர்கள் அல்ல. கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை என்ன செய்ய போகிறீர்கள்? நீங்கள் சுதந்தரமாக சிந்திப்பவர்கள் அல்ல. சுதந்திர சிந்தனை என்பது கூடாது. கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களில் இருக்கக்கடவது. ஜெபம் செய்வோம். 145இவைகளை சிந்தித்து பாருங்கள். புண்ணியம் (Virtue) எதுவோ, புகழ் எதுவோ அதையே சிந்தித்து கொண்டிருங்கள் - இன்று காலை நம் மத்தியில் நான் பேசினதை கேட்டவர்களும், இதை ஒலிநாடாவில் கேட்கப் போகிறவர்களும், இன்று காலை இங்கிருப்பவர்கள், உங்கள் இருதயம் தேவனிடம் நேராக இல்லையென்றும், நீங்கள் அவருடைய ஆவியினால் பிறக்கவில்லையென்றும் அறிந்திருந்து, தேவன்... நீங்கள் ஒருக்கால், “நான் அறிக்கை செய்திருக்கிறேன்'' எனலாம். நான் கூறுவது அதைக் குறித்தல்ல. தேவன் அதை ஏற்று கொண்டிருக்கிறாரா? நீங்கள், ''ஆம், நான் அறிக்கை செய்திருக்கிறேன். ஆம், நான் விசுவாசிக்கிறேன் எனலாம். பிலாத்துவும் கூட அப்படி செய்தான். ''நிச்சயமாக நான் அறிக்கை செய்கிறேன். இந்த நீதிமானை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான். நீங்கள் அந்த விதமாக அவரை கைகழுவி விட்டுவிட முடியாது. இல்லை, இல்லை! அவரை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? நீங்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராக இராமல், பரிசுத்த ஆவி உங்களுக்குள் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்காமல் இருந்தால், அதை ஏன் இப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்ள கூடாது? இதை உங்கள் கைகளிலிருந்து நீங்கள் ஒருக்காலும் கழுவிவிட முடியாது. இந்த செய்தியை நீங்கள் கேட்பது கடைசி முறை அல்ல. அது உங்கள் காதுகளில் தொனித்துக் கொண்டேயிருக்கும்... இந்த செய்தியை உங்கள் இருதயத்தில் நீங்கள் கொண்டு வரும் வரைக்கும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று. 146இன்று காலை இங்கு காணப்படும் கூட்டத்தினரிடையே, தவறாயுள்ளதை யாராகிலும் உணர்ந்து, உங்கள் கைகளையுயர்த்த விரும்புகிறவர்கள். பீட அழைப்புக்கு எங்களுக்கு இடமில்லை. ஜன நெருக்கடி இந்த இடத்தில் அதிகமாயுள்ளது. நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். தேவனே எனக்குதவி செய்யும்'' என்று மாத்திரம் சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் கையை நான் காண்கிறேன். அது... ''இங்கேயே, தேவனுக்கு முன்பாக, நான் குற்றவாளி என்றும் என் குற்றத்தை நான் உணருகிறேன் என்றும் அவர் அறிய விரும்புகிறேன். அவரை என் கரங்களிலிருந்து போக்கி என் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்“ என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள அநேகரின் மத்தியில், நாற்பது ஐம்பது கரங்களைக் காண்கிறேன். இன்று அழைக்கிறார்! இன்று அழைக்கிறார் ! (அதை யோசித்து பாருங்கள், அழைப்பது அவரே!) இயேசு அழைக்கிறார்... உங்களிடம் பேசுவது அவரே. 147நீங்கள் இதுவரைக்கும் பாவம் செய்து கொண்டிருந்து, உங்கள் இருதயம் கடினப்பட்டு, நீங்கள்... அதை ஒருபோதும் கேட்க முடியாத நிலையை அடைந்திருக்கிறீர்களா? சிறுவனாக, சிறுமியாக இருந்த போது அதை கேட்டிருப்பீர்கள். அதை செய்ய வேண்டுமெனும் வாஞ்சை உங்களில் உண்டாயிருக்கும், ஆனால் அதை நீங்கள் தள்ளிப் போட்டீர்கள். உங்கள் இருதயம் கடினப்பட்டு, கடினப்பட்டுக் கொண்டே வந்தது. அதை இனி ஒரு போதும் கேட்க முடியாத நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்களா? ஆஸ்வால்டு இன்று காலை உள்ள நிலையில்... நீங்களும் நின்று கொண்டு, உங்களுக்கு...? நீங்கள் எப்படி அவ்விதம் செய்ய முடியும்? நான் முடிப்பதற்கு முன்பு, வேறுயாராகிலும் இருக்கிறார்களா? நான் ஜெபிக்க போகிறேன். கைகளை உயர்த்தாதவர் கட்டிடத்தில் எங்காகிலும் இருந்து, “சகோ. பிரன்ஹாமே, நீர் முடிவான வார்த்தைகளை கூறிவிட்டபடியால், நான் உணருகிறேன்...'' என்று கூற விரும்புகிறீர்களா? வெளியிலுள்ள யாராகிலும், தாழ்வாரங்களில், ஜன்னல்களைச் சுற்றிலும் நிற்பவர்கள், எங்கிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள்... 148இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... நீ... உன்னை நான் பிடித்துவிட்டேன். அவன்... ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ளவரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்குள்ள சிறுவனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக... சிறுமியே, ஆம் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பின்னால் உள்ள ஐயா, இப்பொழுது... இதைக் குறித்து நாம் சிந்தித்து பார்ப்போம், நாம் மிருதுவாக இயேசு அழைக்கிறார் என்னும் பாடலைப் பாடும் போது, இதை நீங்கள் செய்ய விரும்புகிறேன். நீங்கள், ''கர்த்தாவே, பாவியாகிய, மாய்மாலக்காரனாகிய என் மேல் கிருபையாயிரும். கர்த்தாவே, நான் ஸ்தாபன சபை அங்கத்தினன். ஆனால், நீர் எனக்கு வேண்டும். எனக்குதவி செய்யும்! உம்மை நான் சேவிப்பேன் என்று இப்பொழுதே வாக்கு கொடுக்கிறேன். நீர் எனக்கு வேண்டுமென்று நான் கையுயர்த்தியுள்ளேன். இப்பொழுது உம்மை ஏற்று கொள்ளத்தக்கதாக என் இருதயத்தை உயர்த்துவீராக. அப்பொழுது உம்மை என் இருதயத்தில் ஏற்று கொள்வேன்'' என்று சொல்லுங்கள். இந்த சரணத்தை நாம் மறுபடியும் பாடும்போது, அப்படி செய்வீர்களா? இன்று அழைக்கிறார்! இன்று அழைக்கிறார்! 149(உங்கள் சொந்த விதத்தில் ஜெபியுங்கள். இப்பொழுது, ஜெபியுங்கள்.) இயேசு அழைக்க... (பேசுவது அவர். ஆகையால் தான் உங்கள் கைகளை உயர்த்தினீர்கள்.) இன்று உருக்கமாக அழைக்கிறார். இயேசு அழைக்கிறார், அவருடைய சத்தத்துக்கு செவி கொடுங்கள், இன்று அவருக்கு செவி கொடுங்கள்... இப்பொழுதே, அவருக்கு செவி கொடுங்கள். ''ஆண்டவரே, நான் குற்றவாளி. உமது இரத்தம் என் கைகளில் உள்ளது. நான் பாவி. அது என் கரங்களில் இருக்கப் பிரியப்படவில்லை. அதை நான் கழுவிவிட முடியாது. அநேக ஆண்டுகளாக நான் முயன்று வந்திருக்கிறேன். பிலாத்துவைப் போல் உம்மை வேறு யாரிடமாவது அனுப்ப எனக்கு விருப்பமில்லை. நீர் இப்பொழுதே என் இருதயத்தில் வர வேண்டுமென்று விரும்புகிறேன். கர்த்தாவே, உம்மை நான் ஏற்று கொள்கிறேன், ஒரு சாயலை போல், நீர் அங்கு நிற்பதைக் காண்கிறேன். நீர் என்னை மன்னித்துவிட்டீர் என்று அறிந்தவனாய் உமக்குள் நடந்து வருகிறேன். நான் இன்று முதல் நீர் என் இருதயத்தில் இருக்கப்போகிறீர்.'' ....இன்று (எல்லோரும் ஜெபியுங்கள்) இயேசு அழைக்கிறார், அவர் உருக்கமாக இன்று அழைக்கிறார். (சகோ. பிரன்ஹாம் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி) 150பரலோகப் பிதாவே, இந்த சிறு செய்தி முடிந்துவிட்டது. இப்பொழுது தீர்மானங்கள்... இன்று காலை நீதிமன்றம் உட்கார்ந்துள்ளது. தேவதூதர்கள் அறைகளில் ஒன்று கூடியுள்ளனர். இங்கு மகத்துவமுள்ள பரிசுத்த ஆவியானவர், இயேசு இன்னும் உயிரோடிருக்கிறார் என்று உறுதிப்படுத்தி கொண்டிருக்கிறார். கல்லறை அவரை பிடித்து வைக்க முடியவில்லை, பாதாளம் அவரை கட்டிவைக்க முடியவில்லை. அவர் பாதாளத்திலிருந்தும் கல்லறையிலிருந்தும் தம்மை அவிழ்த்துக் கொண்டு உன்னதத்துக்கு ஏறி சென்றார். இன்று அவர் உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். கர்த்தாவே, எங்கள் கோட்பாடுகளும் ஸ்தாபனங்களும் உம்முடைய ஜனங்கள் அநேகரை கட்டி வைத்துள்ளன. பாவம் அவர்களைக் கட்டி வைத்துள்ளது. ஆனால், இன்றைக்கு அவர்கள் விடுதலையாக விரும்புகின்றனர். அவர்கள் பிலாத்துவை போல் நின்று கொண்டிருக்கின்றனர். அவரை அவர்கள் யாராவது ஒருவரிடம் தள்ளிவிடுவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தராகிய இயேசுவே, என் உள்ளத்தில் வாரும், இனி ஒருபோதும் உம்மைக் கைகழுவி விடமாட்டேன். என்னால் அப்படி செய்ய இயலாது. நீர் இன்னும் என் கரங்களில் இருக்கிறீர். நான் கழுவிக், கழுவிப் பார்த்தேன். உம்மைப் போக்க முடியவில்லை. இப்பொழுது உம்மை நான் ஏற்று கொள்கிறேன். உம்மை என் வாழ்க்கையில் பெற விரும்புகிறேன். கர்த்தாவே, உம்மை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தாவே, என் பாவங்களை மன்னித்து, உம்முடைய ராஜ்யத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும். பிதாவே, நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்று விசுவாசிக்கத்தக்கதான விசுவாசத்தை எனக்கு அருளும்'' என்று கேட்கின்றனர். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் அருளும்படி வேண்டி கொள்கிறோம். 151இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் போது... ''விசுவாசத்தின் மூலம், தேவனே, நான் உத்தமமாயிருக்க எனக்கு உதவி செய்யும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. அவனுக்கு நான் நித்திய ஜீவனைக் கொடுத்து அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். மனுஷருக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன். யோவான்; 5:24ன் உண்மையான அர்த்தத்தை... ''என் வசனத்தை புரிந்து கொண்டு அதை ஏற்று கொள்கிறவனுக்கு: என் வசனத்தை ஏற்று கொண்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன், ஆக்கினை தீர்ப்புக்குட்படுவதில்லை என்று அறிந்திருக்கிறேன்.'' நீங்கள் ஆஸ்வால்டைப் போல் ஆக்கினைத்தீர்ப்பு அடைய மாட்டீர்கள். ''நீங்கள் மன்னிக்கப்பட்டு, மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டீர்கள்.'' ''ஆண்டவரே, அது எப்படி என்று எனக்குத் தெரியாது, அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது நடந்துவிட்டதென்று நான் விசுவாசிக்கிறேன். அதை என் இருதயத்தில் விசுவாசிக்கிறேன். அது என் இருதயத்திலிருந்து போய்விட்டது. இப்பொழுது நான் சுயாதீனமாக, நீர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும், ''ஆமென், என்று சொல்ல முடியும். இதை இப்பொழுதே ஏற்று கொள்கிறேன். நான் விசுவாசித்து விட்டேன்.'' 152இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கையில்.... அதை விசுவாசித்து, சற்று முன்பு உங்கள் கரங்களை உயர்த்தினவர்கள். விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவின் சாயல் அங்கே நின்று கொண்டிருப்பதை நீங்கள் கண்டு, அதற்குள் பிரவேசிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் விசுவாசத்தினால் நடக்கிறீர்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று விசுவாசியுங்கள். இந்நாள் முதற்கொண்டு, நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானத்துக்கு ஆயத்தமாகி, கிறிஸ்துவுக்குள் நடக்க ஆயத்தமாகிவிட்டீர்கள். அதற்கு சாட்சியாக உங்கள் கரங்களையுயர்த்தி, ''விசுவாசத்தின் மூலம் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்'' என்று சொல்வீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. ''அதை இப்பொழுது நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் ஏற்று கொள்கிறேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ''தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் காணும் எல்லோருமே கைகளை உயர்த்தியுள்ளது போல் தோன்றுகிறது. இப்பொழுது நான், ஏற்று கொள்கிறேன்.'' 153பாருங்கள், நீங்கள் நல்லவர்கள் அல்ல. நீங்கள் ஒரு போதும் நல்லவர்களாய் இருந்ததில்லை. நீங்கள் நல்லவர்களாயிருக்க முடியாது. இயேசு நல்லவர்கள் அல்லாதவர்களுக்காக மரித்தார். ''சகோ. பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும்?'' அவர் செய்ததை ஏற்றுக்கொள். அவர்உனக்காக செய்ததை ஏற்றுக்கொள். இப்பொழுது, அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளும் போது... நான் போதகரை நம்புகிறேன்... குளம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். (சகோ. நெவில், ''ஆம்'' என்கிறார் - ஆசி ) ஞானஸ்நானம் ஒழுங்கான முறையில் இருக்கும். நீங்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினால், நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களை உபயோகித்து ஞானஸ்நானம் பெற்றிருந்தால், நீங்கள் உண்மையில்.... இதை நான் பயபக்தியுடனும் மரியாதையுடனும் கூற விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் ஞானஸ்நானம் பெறவேயில்லை. நீங்கள் பெறவேயில்லை, ஏனெனில் அவரளித்த கட்டளையின்படி நீங்கள் செய்யவில்லை. அவர், ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றார். அந்த பட்டப்பெயர்கள் மாத்திரம் உங்கள் மேல் கூறப்பட்டிருந்தால்... அவர், ''இந்தப் பட்டப் பெயர்களைக் கூறுங்கள். இந்த நாமங்களைக் கூறுங்கள்'' என்று சொல்லவில்லை. அது வேதத்தில் ஒருபோதும் செய்யப்படவில்லை. அது அந்த விதமாக செய்யப்படவில்லை. இயேசு சொன்ன பிரகாரமாக, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அந்த நாமம் இயேசு கிறிஸ்து என்பதே. 154திறவு கோல்களை வைத்திருந்த பேதுரு அதைத்தான் சொன்னான். நிசாயா ஆலோசனை சங்கம் அமைக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்ட வரைக்கும் ஒவ்வொரு அப்போஸ்தலனும், சபை முழுவதுமே... ரோமன் கத்தோலிக்க சபைதான் நாமத்துக்கு பதிலாக பட்டப் பெயர்களை ஏற்றுக் கொண்டது. நீங்கள் ஸ்தாபனமாகிய ரோமன் கத்தோலிக்க கோட்பாடுகளினால் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள், அல்லது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள் - இவ்விரண்டில் ஒன்று. அது உங்கள் கரங்களில் உள்ளது. அதை நீங்கள் கழுவிவிட முடியாது. அது அங்குள்ளது. இப்பொழுது அதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆர்கன் இசைப்பவரும், பியானோ இசைப்பவரும் இந்த புகழ் பெற்ற பாடலை இசைக்கும் போது, உங்களைக் கேட்கிறேன். என் விசுவாசம் உம்மை நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே! நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும், என் குற்றங்கள் அனைத்தும் போக்கியருளும், இந்நாள் முதல் நான் முழுவதும், உம்முடையவனாயிருக்கட்டும்! யாருமே கட்டிடத்தை விட்டுப்போக வேண்டாம். இப்பொழுது பயபக்தியுடன் நின்று அவரிடம் நம்முடைய கரங்களை உயர்த்துவோம்: என் விசுவாசம் உம்மை நோக்குகிறது, (அவர் வார்த்தையாயிருக்கிறார்.) கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே! நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும், என் குற்றங்கள் அனைத்தும் போக்கியருளும், இந்நாள் முதல் நான் முழுவதும், உம்முடையவனாயிருக்கட்டும்! (முழுவதும் பரிபூரணமாய் உம்முடையவனாயிருக்கட்டும். என் வாழ்க்கையை இப்பொழுது அர்ப்பணிக்கிறேன்.) 155இன்னும் சில நிமிடங்களில் தண்ணீர் ஆயத்தமாயிருக்கும், இப்பொழுது உங்களால் ஞானஸ்நானம் பெற இயலவில்லை என்றால், இன்றிரவு நாங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் கொடுப்போம். பிற்பகல் முழுவதும் அதைக்குறித்து சிந்தியுங்கள். உங்கள் கரங்களில் உள்ளது. அதை போக்குவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒரே வழி. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படுவதே (அவர்...) பாருங்கள்? (ஆம், ஐயா). நாம் தலை வணங்கும் போது அதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது அவரை நோக்கி பாருங்கள். வாழ்க்கையில் இருள் சூழந்து... இப்பொழுது தீர்மானம் உங்கள் இருதயத்தில் உள்ளது. அவர் வழக்கு விசாரணையில் இருக்கிறார். வார்த்தையானது சிலுவையிலே அறையப்பட ஆயத்தமாயுள்ளது. கிறிஸ்து வழக்கு விசாரணையில் இருக்கிறார். கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என் வழிகாட்டியாயிரும்; இருள், பகலாக மாறக் கட்டளையிடும் துயரம், கண்ணீரைத் துடைத்தருளும், உம்மிடமிருந்து நான் வழி விலகாதபடி காத்துக்கொள்ளும். இப்பொழுது நமது இருதயங்களை அதற்கு வணங்குவோம் (சகோ. பிரன்ஹாம் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி) 156நண்பர்களே, ஆழ்ந்து சிந்தியுங்கள். ஒருக்கால் புத்தகத்திலுள்ள கடைசி பெயர் உங்களுடையதாய் இருக்கக்கூடும். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். உண்மையாக ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள்... அவரைப் புறக்கணித்தவர் யாராகிலும் இங்கு இருக்கிறார்களா? அது மறுபடியும் வராமல் போய்விடக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிலாத்துவுக்கு மற்றொரு தருணம் இருக்கவில்லை. அவன் இரட்சிக்கப்பட எவ்வளவோ முயன்றான், அவனால் முடியவில்லை. அவனால் முடியவில்லை. கிறிஸ்து என்னப்பட்ட இந்நாளுக்கான அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?